முதுநிலை பயோடெக்னாலஜியில் சிறப்புத் திட்ட ஆய்வுக்காக ஐந்தாண்டு கால உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பங்கேற்று ஆய்வு செய்ய, பாரதிதாசன் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பல்கலை மானியக்குழுவின் சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், 2011-2016ம் ஆண்டு வரையிலான சிறப்பு ஆய்வு திட்டத்தில் ஆய்வு செய்ய, தற்காலிக பணியிடமாக ஆய்வாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். முதுநிலை பயோ டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும். டி.என்.ஏ., தொழில்நுட்பம், திசுவளர்ப்பு, டிரான்பர்மேஷன் மற்றும் எச்பிஎல்சி ஆய்வில் முன்அனுபவம் இருக்க வேண்டும்.
உதவித்தொகையாக 8,000 ரூபாய் வழங்கப்படும். ஒரு காலி இடம் மட்டுமே உள்ளது. விருப்பமும், தகுதியுமுள்ளவர்கள் வரும் 18ம் தேதிக்குள் பேராசிரியர் கணபதி, தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், யு.ஜி.சி., -எஸ்.ஏ.பி., திட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 24 என்ற முகவரிக்கு தங்கள் சுயவிவரத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
அல்லது aganapathi2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். கூடுதல் விவரங்களை www.bdu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக