"வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கும், எந்தவிதமான சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை,'' என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்,உ.பி., மாநிலம் காஜியாபாத்தில் நடந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை தினவிழாவில், நேற்று பங்கேற்றார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இப்போதெல்லாம், வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பாதுகாப்பு படையினரில், கணிசமான பகுதியினரை, வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டியுள்ளது. இதனால், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட மற்ற பாதுகாப்பு பணிகளுக்கு, போதிய அளவில் போலீசாரை ஈடுபடுத்த முடியவில்லை. என்னை பொறுத்தவரை, வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில், உடன்பாடு இல்லை. இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க கூடாது. எனக்கும், எந்தவிதமான சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக