சப்தகிரி விரைவு ரயில், நேற்று மதியம், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது. ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள, பொன்பாடி - தடுக்குபேட்டை ரயில் நிலையகளுங்களுக்கு இடையே, மாலை, 4:00 மணிக்கு வந்து கொண்டிருந்தது.சப்தகிரி விரைவு ரயில் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, அவ்வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்றது. அந்த ரயிலின் கடைசி பெட்டி, மேற்கண்ட இரு ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்து சென்றதும், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டது.
இதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிரஞ்சீவி என்ற சிறுவன் கவனித்தான். உடனே, அருகில் இருந்த, ரயில்வே கடவுபாதையில், பணியில் இருந்த ஊழியரிடம், விஷயத்தைக் கூறினான். அவர் இதுகுறித்து, ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் துரிதமாக செயல்பட்டு, அவ்வழியாக வந்து கொண்டிருந்த சப்தகிரி விரைவு ரயிலை நிறுத்தினர். தகவல் அறிந்து, ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை சரி செய்தனர்.
இதையடுத்து, சப்தகிரி ரயில் ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. சிறுவன் ரஞ்சித்தின் சமயோசித புத்தியால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகளும், பயணிகளும் சிறுவன் ரஞ்சித்தை பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக