Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

55 சதவீதம் இந்தியர்களுக்குஅமெரிக்காவில் சொந்த வீடு

அமெரிக்காவில், 55 சதவீத இந்தியர்கள், சொந்த வீட்டில் வசிக்கின்றனர் என, சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையான, "சென்சஸ் பீரோ' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில், 55 சதவீதம் பேர், சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.

அதே சமயம், அமெரிக்காவில் நல்ல வருவாய் உள்ள இந்தியர்களை விடவும், ஐரோப்பியர்களே அதிக அளவில் சொந்த வீடு வைத்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்தவர்களில், 72 சதவீதம் பேரும், பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 73 சதவீதம் பேரும், அமெரிக்காவில் சொந்த வீட்டில் வசிக்கின்றனர்.இவ்வாறு, "சென்சஸ் பீரோ' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக