Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

அமெரிக்காவில் நடக்கும் அவலம் : 3 நாட்களாக பதுங்கு குழியில் பணயக்கைதியாக பரிதவிக்கும் சிறுவன்


அமரிக்காவின் அலபாமா மாநிலத்தின் மிட்லண்ட் என்கிற சிறு நகரத்தில் 5 வயது சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை மர்ம நபரால் கடத்தப்பட்டான்.

பள்ளிப் பேருந்தில் ஏறிய மர்மநபர் 66 வயதான ஓட்டுனரை மிரட்டியுள்ளான். அதற்கு பணியாததால் அந்த மர்மநபர் ஓட்டுனரை சுட்டுக் கொன்றுள்ளான். பிறகு அந்த பேருந்தில் இருந்த 5 வயது சிறுவனை பணயக் கைதியாக பிடித்துச் சென்றான். அந்த நபர் சிறுவனை தனது நிலத்தில் உள்ள பதுங்கு குழிக்கு தூக்கிச்சென்று மறைந்து கொண்டான்.

தகவல் அறிந்ததும் முக்கிய அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். கடத்தப்பட்ட சிறுவன் மற்றும் மர்மநபர் குறித்த தகவல்களை வெளியிட மறுத்து விட்டனர். மர்ம நபரின் நோக்கம் என்ன என்பது பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அந்த மர்ம நபரின் பெயர் ஜிம்மி லீ டைக்ஸ் (65). அவன் இந்த பதுங்கு குழியை பல ஆண்டுகளாக கட்டி வந்தான். மின்சார வசதி, தொலைக்காட்சி மற்றும் 2 வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கொண்டதாக அந்த பதுங்கு குழி வடிவமைக்கப்பட்டது என்று அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக