'சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு, கேரளாவில் அனுமதியில்லை' என, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்துள்ளது.
எனினும், அன்னிய முதலீட்டை அனுமதிக்க, அந்தந்த மாநில அரசுகள், முடிவு எடுத்து கொள்ளலாம் என, மத்திய அரசு தெளிவுபடுத்திஉள்ளது. நேற்று, கேரள சட்டசபையில், மாநிலத்தில் பாராம்பரியமாக நடக்கும், கயிறு திரிப்பு, முந்திரி பதப்படுத்துதல், ஜவுளி தயாரிப்பு, பீடி சுற்றுதல் ஆகிய தொழில்களில் உள்ள பிரச்னைகள் குறித்து, ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இதற்கு பதிலளித்து பேசிய, முதல்வர், உம்மன் சாண்டி கூறியதாவது:
ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி காலத்தில், எந்த சூழ்நிலையிலும், சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது இல்லை என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவில் மாற்றம் இல்லை. இதற்கான அனுமதியை, மேலிடத் தலைவர்களிடம் பெற்றுள்ளோம்.இந்த விஷயத்தில், நம், எம்.பி.,க்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். இருப்பினும், பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில், கட்சியின் கொறடா உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, ஓட்டளித்தனர்.மாநில அரசின் முடிவு குறித்து, பிரதமர், மன்மோகன் சிங்கிற்கும், கட்சி தலைவர், சோனியாவுக்கும் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக