தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை யில் ஏற் பட்ட இழுபறியை தொடர்ந்து விகேபுரம் மதுரா கோட்ஸ் ஆலை நிர் வாகம் நேற்று 2வது ஷிப்ட் முதல் கதவடைப்பு செய்தது. இதையொட்டி ஆலை முன்பு பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.
மதுரா கோட்ஸ் நிறு வனம் மதுரை, தூத்துக்குடி, விகேபுரம் ஆகிய இடங்களில் 133 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் தற்போது மதுரையில் 290 பேரும், தூத்துக்குடியில் 250 பேரும், விகேபுரத்தில் 780 பேரும் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால் விகேபுரம் ஆலைத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கூடுதல் சம்பள உயர்வு கேட்டு, 6ம் தேதி முதல் ஸ்டிரைக் செய்ய போவதாக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். அதன்படி கடந்த 5ம் தேதி மதுரையில் பேச்சு வார்த்தைக்கு நிர்வாகம் சம்மதித்தது. இந்நிலையில் பேச்சுவார்தைக்கு முன்பே கடந்த 1ம் தேதி 2வது ஷிப்ட் முதல் 4 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். எஞ்சிய 4 மணி நேரம் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 5ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
நேற்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு மதுரை யில் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால் தொழிலாளர்களின் தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தால் நஷ்டம் ஏற்படுவதாக காரணம் காட்டி நிர் வாகம் நேற்று 2வது ஷிப்ட் முதல் போலீஸ் பாதுகாப்புடன் கதவடைப்பு செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக