ஆய்வு மேற்கொள்வோம்:
அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலேயே, 2,720 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கூட நிரம்பாதது, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தை, கவலை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்த பயிற்சிக்கு வரவேற்பு குறைந்து, வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், ஆசிரியர் பயிற்சி படிப்பு, சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதே போன்ற ஒரு
நிலை, வரும் காலங்களில் ஏற்படும் என தெரிகிறது17 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங்கில் இருந்தும், 11.75 சதவீத இடங்கள் தான் நிரம்பியுள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், 50 பள்ளிகள் மூடப்பட்டன. இது, வரும் காலங்களில் தொடரலாம். இந்தப் பள்ளிகளில், பி.எட்., கல்லூரி உள்ளிட்ட, வேறு கல்வி நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு, தனியார் ஆர்வம் காட்டுகின்றனர். ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, மவுசு குறைந்து வருவதால், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்வோம்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக