Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 30 ஜூன், 2012

மெச்சத்தக்க சூரிய மின்சக்தி இலவச மின் இணைப்பு

தூத்துக்குடி அருகே சூரியமின்சக்தி மூலம், 35 வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அய்யனடைப்பு ஊராட்சியில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் பெறும் திட்டத்தின்கீழ், டில்லி மிண்டா நெக்ஸ் ஜென் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் மூலம், ஒரு மினி கிரிட் அமைத்து, 240 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, வீட்டிற்கு இரண்டு எல்.இ.டி., பல்பு, 1 சார்ஜர் என்ற விகிதத்தில், 35 வீடுகளுக்கு சூரிய ஒளி மின்திட்டத்தின்கீழ் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி பேனல் மற்றும் பாட்டரி, 
அய்யனடைப்பு ஊராட்சி கட்டட வளாகத்தில் அமைக்கப்பட்டு, அதிலிருந்து 35 வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 



இவ்விளக்குகள் அனைத்தும் மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 11.30 மணிவரை தானியங்கியாக எரியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கலெக்டர் ஆஷிஷ்குமார், திட்ட இயக்குனர் பெல்லா, அந்த வீடுகளுக்கு நேரில் சென்றுபார்த்து, சூரிய ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் நன்மைகள் குறித்து, பயனாளிகளிடம் கேட்டறிந்தனர். 

இஸ்லாமியத்தின் வெளிப்பாடு :நக்லா முர்சி

நாட்டின் முதல் பெண்மணி என்றழைக்காதீர்கள் என, எகிப்து அதிபரின் மனைவி தெரிவித்துள்ளார். எகிப்து நாட்டில், ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டதில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவரான முகமதுமூர்சி அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.


தற்போதைய அதிபர் மூர்சியின் மனைவி நக்லா, வெளியிடங்களுக்கு பர்தா அணிந்து தான் செல்கிறார். சமீபத்தில், இவர் அளித்த பேட்டியின் போது குறிப்பிடுகையில், "அதிபரின் மனைவியை "நாட்டின் முதல் பெண்மணி' என அழைப்பதில், எந்த நியாயமும் இல்லை. அதிபர் மனைவி என அழைக்கலாம் அல்லது நாட்டின் முதல் பணிப்பெண் என அழைக்கலாம். மரியாதையாக தான் அழைக்க வேண்டும் என்றால் "அம்மா' என்றழைக்கலாம். எனவே, என்னை நாட்டின் முதல் பெண் என்றழைக்க வேண்டாம்' என்றார்.

பிரதமரின் கவலை :மருத்துவ கல்வியின் தரம்

இந்தியாவில் மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

 புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.342 கோடியில் கட்டப்பட்ட குழந்தைகள், பெண்கள் மருத்துவமனை, பயிலகம், விடுதி கட்டடங்களைத் திறந்து வைத்தும், முதுகலை, இளங்கலை முடித்த 311 பேருக்குப் பட்டங்களை வழங்கியும் அவர் சனிக்கிழமை பேசியது:
 நாட்டு மக்களுக்குச் சுகாதாரத்தை அளிப்பதில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறோம். சுகாதாரக் குறியீடுகள் மோசமாகத் தொடர்வதும், சிசு மற்றும் பிரசவகால மரணங்களும் கவலையளிக்கின்றன.
 பல ஆண்டுகளாகச் சுகாதார மற்றும் குடும்ப நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், இன்றைக்கும் மருத்துவச் செலவுகளுக்காக, 3-ல் இரு பங்குத் தொகையை மக்கள் கடன் வாங்கியே செலவிடுகின்றனர். அதிலும் மருந்துகளுக்காகவே அதிகம் செலவிட நேர்கிறது.
 இதை சரி செய்யும் நோக்கில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம், சிசு மற்றும் பிரசவகால மரணங்கள் விகிதம் குறைந்தது. மருத்துவமனையில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்களின் தேவைகள் பல நிறைவேற்றப்பட்டாலும், இன்னமும் இலக்குகள் பல இருக்கின்றன.
 இதனால், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. அதேபோல, நகர்ப்புற பகுதிகளில் சுகாதாரத் திட்டங்களை அமல்படுத்த, புதிய தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம் தொடங்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.
 நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளின் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்பதற்குப் பதிலாக, 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருக்கிறது. ஒரு மருத்துவருக்கு 3 செவிலியர்கள் என்பதற்குப் பதிலாக, இரு மருத்துவர்களுக்கு 3 செவிலியர்கள் என்ற நிலையும் இருக்கிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண, மத்திய மற்றும் மாநில அரசுகள், குறிப்பாக மாநில அரசுகள் அந்தந்தப் பகுதிகளில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.


மருத்துவக் கல்வியின் தரம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளது. மருத்துவக் கல்வி குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இந்நிலை தொடர அனுமதிக்கக்கூடாது. கல்வித்தரம் உயர்வதற்கு உதவியாக நம்பகமான கட்டுப்பாட்டு அமைப்பும், கல்விக்கூட அமைப்புகளையும் நிறுவ வேண்டியது அவசியம். அதேபோல, பாடத்திட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

 கிராமங்களிலும், உள்ளூர் சமுதாயத்தினரோடும் இணைந்து பணியாற்றுவதற்கேற்ப மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். நோய்களைக் குணப்படுத்தும் பணியைவிட, நோய்த் தடுப்புப் பணிகளில் தங்களது பங்களிப்பை அதிகம் அளித்து, சமூகப் பங்களிப்பை நிறைவேற்ற வேண்டும்.
 இந்திய மருத்துவக் கவுன்சில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதோடு, சமூக மருத்துவம் சார்ந்த பயிற்சிகளையும் அனைத்து நிலைகளிலும் இணைத்து வருகிறது.
 நாட்டின் மருத்துவக் கல்வியைப் பலப்படுத்த பல்வேறு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இளநிலை, முதுகலை மருத்துவப் படிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன.
 தேவையான இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
 பிரதம மந்திரி சுவஸ்தியா சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ், போபால், புவனேசுவரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் போன்ற 6 மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகள் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இந்த மருத்துவக் கல்லூரிகள் 2012-13ம் கல்வியாண்டிலும், மருத்துவமனைகள் 2013-14ம் கல்வியாண்டு முதலும் செயல்படத் தொங்கும் என எதிர்பார்க்கிறோம்.
 கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மேம்பாடு அடைவதற்கான திட்டத்தோடு புதுச்சேரி மாநிலம் செயல்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகிறது. இதற்காக புதுச்சேரி அரசைப் பாராட்டுகிறேன். நாட்டிலேயே உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வியில் சிறந்த மையமாக புதுச்சேரி மாநிலம் திகழ அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். மேலும், புதுச்சேரி மாநிலத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா மையமாக மேம்படுத்தத் தேவையான வாய்ப்புகளை வெளிக்கொணர, மத்திய சுற்றுலா அமைச்சகத்தோடு இணைந்து புதுச்சேரி அரசு செயல்பட வேண்டும் என்றார்.



மதரஸாக்களில் அரசு தலையீட்டை தடுத்து நிறுத்தியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


முஸ்லிம்களை உண்மை யான முஸ்லிம்களாக வாழச் செய்யும் வழிகாட்டிகள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்தான். அவர் களை கண்ணியப்படுத்த வேண்டியது சமுதாயத்தின் கடமை என காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.

தஞ்சை மாவட்டம் மயிலாடு துறையை அடுத்துள்ள நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நேற்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான இன்று இந் நிகழ்ச்சியில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசியதாவது-

சரித்திரப்புகழ் மிக்க நீடூர் மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியின் நூற் றாண்டு விழா தமிழக முஸ்லிம் களின் சரித்திரத்தில் ஒரு உன்னதமான இடத்தைப் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

தமிழகத்தில் செயல்படு கின்ற அரபிக்கல்லூரிகளில் மிகச் சிறந்த இடத்தை மிஸ்பா ஹுல் ஹுதா பெற்றுள்ளது. இப்படிப்பட்ட ஒருசிறப்புவாய்ந்த பரக்கத்தான நிகழ்வில் நான் பங்கேற்கின்ற பாக்கியத்தை வழங்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும், என்னை அழைத்த விழா குழுவினருக் கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.

அப்துல் கரீம் பாணி ஹஸரத் அரிய சேவை:

நீடூரின் பிரபல வணிகராகத் திகழ்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களின் புதல்வர் சங்கைக் குரிய மௌலானா அப்துல் கரீம் பாணி ஹஸரத் அவர்களால் 1912-ல் தொடங்கப்பட்ட இந்த அரபிக் கல்லூரி இன்று நூற்றாண்டு கண்டுள்ளது.

நீடூரில் ஆரம்ப கல்வி கற்ற அவர்கள் பின்னர் அதிராம் பட்டினத்தில் சூஃபி ஹஸரத் ஷைகுனா ஹஸரத் ஆகியோரி டமும் மார்க்க கல்வி கற்று, பின்னர் வேலூரில் மதரஸா லத்தீப்பிய்யா, பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்திலும் அதனைத் தொடர்ந்து தேவ்பந்த் மதரஸா தாருல் உலூமிலும் படித்து பட்டம் பெற்று இங்குள்ள நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதின் தாழ்வாரத் தில் மதரஸாவை தொடங்கி அது இந்த அளவிற்கு வளர்வதற்கு அரும் பணியாற்றியிருக் கிறார்கள். அந்த மாமனிதரின் பெயரால்தான் இந்த அரங் கத்தின் பெயரும் அமைக்கப் பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான உலமா பெருமக்களை இந்த மதரஸா உருவாக்கியிருக் கிறது. மிஸ்பாஹுல் ஹுதாவி லிருந்து உருவான ஆலிம் பெருமக்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் சென்று தூய இஸ்லாமிய கருத்துக்களை எடுத்து இயம்பி மார்க்கத்தின் மகிமை பேணி தாங்களும் வாழ்வதோடு மற்றவர்களையும் வாழச் செய்யும் அரும்பெரும் பணியாற்றி வருவது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.

நாமெல்லாம் முஸ்லிம்களாக பிறந்ததில் பாக்கியசாலிகள் தான். ஆனால், உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த வர்கள் சங்கைமிக்க உலமா பெருமக்கள்தான். அவர்கள் வழிகாட்டுதலில்தான் அல்லாஹ் ரசூலுக்குப் பொருத்தமான வாழ்வு முறையே அமைந் திருக்கிறது.

அத்தகைய உலமா பெருமக்கள் சமுதாயத்தின் கண்ணியமிக்கவர்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள். சதா காலமும் இஸ்லாத்தின் விழுமிய அறநெறி கருத்துக் களை எடுத்தியம்பி வாழ்ந்து வரக் கூடிய சங்கைமிகு உலமாக்களை மதிக்க வேண் டிய விதத்தில் நாம் மதிக்கி றோமா, சிறப்பு செய்யும் வகையில் சிறப்பு செய்கிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் மனச்சாட்சியுடன் எண்ணிப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

மஸ்ஜிதுகளில் இமாம்களாக வும், மதரஸாக்களில் ஆசிரியர் களாகவும் நாம் பணியமர்த் துகிற அவர்களின் அன்றாட செலவினங்களை சந்திக்கக் கூடிய வகையிலாவது ஊதி யத்தை நிர்ணயித்து கொடுக்கி றோமா என்றால், பல இடங் களில் இருந்து இல்லை என்ற பதிலே வருகிறது.

சமுதாயத்தில் உயர்ந்து நிற்கின்ற பலபேர் உலமாக்க ளுக்கு உரிய மரியாதை செலுத்துவதை ஆங்காங்கே பார்க்கிறோம். ஆனால், இந்த நிலை எல்லா இடங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே நம் அவா!. ஏனெனில், உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள். அதை உணர்ந்து இந்த கண்ணியத்தை செய்ய சமுதாயம் கடமைப்பட்டிருக் கிறது. அரசு தலையீட்டை தடுத்த தலைவர் பேராசிரியர்

மதரஸாக்களில் கற்பிக் கப்படுகிற அறிவுப்பூர்வமான ஆன்மீகக் கல்விதான் மனி தனை ஒழுக்கமுள்ள - நேர்கோட்டுப்பார்வையில் அழைத்துச் செல்லும். இத்த கைய மதரஸாக்களை தீவிர வாதம் போதிக்கப்படக் கூடிய இடம் என்று விஷமத் தனமான குற்றச்சாட்டு நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் கூட வைக்கப்பட்டபோது, அப் போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள், மதரஸாக்கள் என்பது, ``மத வெறியை போதிக்கக் கூடிய இடம் அல்ல; அற நெறியை போதிக்கக் கூடிய இடம். அங்கு படிக்கின்ற மாணவர்களுக்கு எவரையும் புண்படுத்தச் சொல்லித் தரப்படுவதில்லை. அவர்களை பண்படுத்தவே கற்றுத் தரப்படு கிறது. மனிதனை மனிதனாக வும், எல்லா மக்களையும் சகோதரர் களாகவும், இணங்கி வாழக் கூடிய நல்லற பயிற்சியே மதரஸாக்களில் தரப்படுகின் றது. நானும் மதரஸாவில் உருவான ஒரு மாணவன்தான். எனவே, மதரஸாக்களை குறை சொல்பவர்கள் அதை நிரூபிக்கத் தயாரா? என நாடாளுமன் றத்தில் கேள்விக்கணை எழுப்பி கர்ஜித்தவர் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள்தான்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாதனை:
 அனைவருக்கும் கல்வி என்ற கட்டாய கல்வித் திட்டத்தை மத்திய அரசு நடைமுறையாக்கியபோது அதிலே மதரஸாக்களையும் உட்புகுத்த ஆயத்தமான சமயத்தில் மதரஸா பாடத் திட்டங்களை மாற்றியமைத்து நவீன அறிவியல் கல்வியையும் வழங்க முடிவு செய்தது. மதரஸா பாடத் திட்டத்தில் கை வைக்க உலமாக்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என வாதம் செய்து அறிவியல் கல்வியை வேண் டுமானால் மத்திய அரசு பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யலாம். ஆனால், மதரஸா பாடத் திட்டங்களை நீங்கள் கையாளக்கூடாது என தடுத்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சாரும். சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் உரிமை காக்கும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதால் மாண்புமிகு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலிடம் இந்த கருத்தை நான் வலியுறுத்தி மத்திய அரசின் தலையீட்டை தடுத் தேன் என்பதை இங்கு பதிவு செய்ய கடமைப்பட் டுள்ளேன். இன்றைய கால கட்டத்தில் மதரஸாக்களை நடத்துவ தென்பது பெரும் சவாலாகி விட்டது. பொருளாதாரரீதியாக கிடைக்கப்பெறும் அனு கூலங்கள் படிப்படியாக குறைந்து விட்டன. எனவே, ஒட்டு மொத்த தமிழகத்தில் எல்லா அரபி மதரஸாக்களும் சிறப்பாக நடத்துவதற்கு சமு தாயத்தின் பெருந்தனக் காரர்கள் முன் வந்து கூட்டு முயற்சியாக எல்லா மதர ஸாக்களும் அதன் தேவைகள் குறைவின்றி நிறைவேறி அதன் பணிகள் தொய்வின்றி தொடர பக்கபலமாக இருக்க வேண்டும். இதற்கு ஜமாஅத்தார்களும் - அமைப்புகளை நடத்துகின் றவர்களும் - சமூக நல ஆர்வலர்களும் தூண்டுதல் துணையாக இருத்தல் வேண் டும். இவ்வாறு எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட்டார்

சோனியாவின் தியாகம் :அப்துல் கலாம் சாட்சி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2004-ம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தும் நாடெங்கும் சோனியா பிரதமர் பதவி ஏற்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் பாராளுமன்ற தலைவராக ஏகமனதாக சோனியா தேர்வானதும் அவர்தான் பிரதமர் என்று மக்கள் உறுதியாக நம்பினார்கள். 

இந்த நிலையில் பல கட்சிகள் சோனியா பிரதமர் பதவி ஏற்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்திய பிரதமர் பதவியை ஏற்க அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்று அந்த கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. 

இந்த விவகாரத்தில் அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் நிலவியது. அந்த சமயத்தில் திடீரென மன்மோகன் சிங்கை சோனியா பிரதமர் ஆக்கினார். இது இந்திய அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பு முனையாகும். 

சோனியா பிரதமர் பதவி ஏற்காதது காங்கிரசில் அதிர்ச்சியையும்,  மற்ற கட்சிகளிடம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அப்துல்கலாம் சட்ட ரீதியாக ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளால் தான் சோனியா பிரதமர் ஆக முடியவில்லை என்ற வதந்தி பரவியது. ஆனால் அதில் கொஞ்சமும் உண்மை இல்லை என்று அப்துல்கலாம் எழுதியுள்ள "டர்னிங் பாயிண்ட்ஸ்'' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அப்துல்கலாம் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். 



ஹார்பர் காலின்ஸ் வெளியிட்டுள்ள அந்த புத்தகத்தின் 135-வது பக்கத்தில் "முரண்பட்ட முடிவுகள்'' என்ற தலைப்பில் அப்துல்கலாம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில் அப்துல்கலாம் எழுதி இருப்பதாவது:- 

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றதும், சோனியாவை பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்தனர். இதை அறிந்ததும் ஆட்சி அமைக்க வருமாறு சோனியாவுக்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதி மாளிகையில் கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பல்வேறு கட்சி தலைவர்கள், பல அமைப்புகளின் தலைவர்கள் என்னை சந்தித்தனர். சோனியாவுக்கு பூர்வீகம் இத்தாலி, எனவே அவரை பிரதமர் பதவிக்கு ஒத்துக்கொள்ளாதீர்கள் என்று வற்புறுத்தினார்கள். 

சிலர் இந்திய அரசியல் சட்டத்தை மேற்கோள் காட்டினார்கள். இது எனக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நான் சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தேன். சோனியாவை பிரதமர்  பதவியில் அமர்த்த தீர்மானித்தேன். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை கூட செய்து விட்டேன். 

இந்த நிலையில்தான் மே 18-ந் தேதி (2004) சோனியாவும், மன்மோகன் சிங்கும் வந்து என்னை சந்தித்தனர். அப்போது சோனியா என்னிடம் மன்மோகன்சிங்கை பிரதமர் பதவியில் அமர்த்தும்படி கூறினார். உண்மையிலேயே எனக்கு அது மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது.  

எனவே ஆட்சி அமைக்க வரும்படி மன்மோகன்சிங் பெயரில் வேறு ஒரு கடிதம்  தயாரிக்கப்பட்டது. சோனியா முடிவால்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது. சோனியாவை பிரதமர் ஆக்கக்கூடாது என்று எனக்கு நேரில் மட்டுமல்ல இ-மெயில் வாயிலாகவும் நிறைய பேர் என்னிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கைகளும் எதிர்ப்புகளும் சட்டத்துக் குட்பட்டவை அல்ல என்பது எனக்கு தெரியும். எனவே சோனியாவை பிரதமர் பதவியில் அமர்த்த நான் தயாராக இருந்தேன். அவர் பிரதமர் பதவியை விரும்பி, தன்னை பதவியில் அமர்த்தும்படி கோரிக்கை விட்டிருந்தால் எனக்கு வேறு வழியே இல்லை. சோனியாவை பிரதமர் பதவியில் நியமித்து இருப்பேன். 

இவ்வாறு அப்துல்கலாம் கூறியுள்ளார். 


வெள்ளி, 29 ஜூன், 2012

ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கே உடை கட்டுப்பாடு உத்தரவு

ஆசிரியர்கள் அநாகரிகமான முறையில் உடை அணிந்து பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ப.மணி உத்தரவிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
 அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் சமுதாயத்தில் பல்வேறு நிலையில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாகப் பயில்கின்றனர்.
 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு உருவாகும் நிலையைத் தவிர்க்கவும், அனைவரும் சமநிலையில் உள்ளவர்கள் என்ற மனநிலையை உருவாக்கவும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டு வருகிறது.மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய உன்னதமான ஆசிரியப் பணியில் உள்ள ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது கண்ணியமான முறையில் ஆடைகளை அணிய வேண்டும். ஆடை மற்றும் அணிகலன்கள் நமது பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் உகந்த முறையில் இருத்தல் மிகவும் அவசியம்.
 கண்ணியக் குறைவாகவும், மாணவ, மாணவிகளிடையே ஏற்றத் தாழ்வையும், மனச் சலனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், மரியாதைக் குறைவையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் உடை அணிவதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு சுற்றறிக்கைகள் இந்த இயக்ககத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
 இருந்தாலும், அண்மைக் காலங்களில் ஆங்காங்கே சில ஆசிரியர்களால் இந்த அறிவுரைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது இயக்குநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலை மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
 பள்ளி மாணவ, மாணவிகளிடம் பாதிப்பையும், பொதுமக்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நிலை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது தமது பதவிக்குரிய கண்ணியத்துக்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையிலும், மாணவ, மாணவிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையிலும் ஆடைகளை அணிந்து வர வேண்டும்.
 அநாகரிகமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்குமாறு ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
 பள்ளித் தலைமையாசிரியர்கள் இதைக் கண்காணிக்க வேண்டும்.
 இந்த அறிவுரைகளைப் பின்பற்றுவதில் தவறுகளோ, குறைபாடுகளோ சிறிதும் ஏற்படாவண்ணம் ஆசிரியர்களின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கலாம் என்றால் கலகம் என்று சொன்னவர் கலைஞர் அல்ல பேரறிஞர் அண்ணா





எங்கள் அய்வரையும் ஒரு சேர ஒரு இடத்தில் கண்டால், கண்டவர்கள், கண்களில் கனல் கக்கக் கிளம்பி, கலாம் விளைவித்து, சர்க்காருக்குத் தொல்லைக் கொடுத்துவிடுவார்களா ?

இதை எழுதியவர்  கலைஞர் அல்ல.

1964ல் அரசியல் சட்ட மொழிப்பிரிவின் 17வது பிரிவை கொளுத்தும் போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தப் போது எழுதப்பட்ட புத்தகம் " கைதி எண் 6342 " பக்கம் எண் 17.

# எழுதியவர் பேரறிஞர் அண்ணா, அண்ணா,அண்ணா.
எனவே கலாம் - கலகம்.

அரசு உதவிபெறாத சிறுபான்மை கல்விநிறுவனங்கள்:உயர் நீதிமன்றம் உத்தரவு


இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் சில பிரிவுகள், அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விருத்தாசலம் முடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஞானவேல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இலவச  கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.

அதனடிப்படையில் நெய்வேலியில் உள்ள செயிண்ட் ஜோசப் குளுனி மெட்ரிக் பள்ளியில் எனது மகளுக்கு எல்.கே.ஜி.யில் இடம் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விட்டது. எனவே மகளுக்கு இடம் தர பள்ளிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கே. சந்துரு விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் 13(1)(சி) மற்றும் 18(3) ஆகிய பிரிவுகள் (25 சதவீத இடத்தை ஒதுக்கும் பிரிவுகள்), அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் உள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அந்தப் பிரிவுகள் அமைந்துள்ளன என்றும், எனவே அந்த பிரிவுகள் அதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பார்த்தால், மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிடிவாரன்ட் திருமாவளவனுக்கு .....!

 கொலை முயற்சி, பஸ்ஸைத் தீ வைத்து எரித்த வழக்கில் விழுப்புரம் கோர்ட் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.  
÷கடந்த 1.6.2008-ல் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு போக்குவரத்து கழக பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் மோகன், வளவனூரைச் சேர்ந்த நடத்துனர் ஆறுமுகம் ஆகியோர் பணியில் இருந்தனர். ÷திருபுவனை பஸ் நிறுத்தத்தில் பஸ்ûஸ நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டபோது, சுமார் 20 பேர் கொண்ட கும்பல் பஸ்ஸில் ஏறியது. அருகே உள்ள எஸ்.ஆர்.பாளையம் கிராமம் வந்த போது பஸ்சில் வந்த 15 பேர், ஓட்டுநர் மோகனைத் தாக்கி பஸ்ûஸ நிறுத்துமாறு கூறினர்.
÷பின்னர், கடலூரில் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே தலைவர் திருமாவளவன் கூறியது போல் பஸ்ûஸ சேதப்படுத்துங்கள் என்று கூறியவாறு பஸ்ûஸ சேதப்படுத்த முயன்றனராம்.
÷இதைத் தடுக்க முயன்ற நடத்துனர் ஆறுமுகத்தை ஆயுதங்களால் வெட்டியதுடன் ஓட்டுநர் மோகனையும் கட்டையால் தாக்கினர். மேலும், பஸ் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன் பஸ்சிற்கும் தீ வைத்து விட்டு, ஆறுமுகத்திடம் இருந்த வசூலான தொகை ரூ.5,500-யும் பறித்துச் சென்றனர்.
÷இது குறித்த புகாரின் பேரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 20 பேர் மீது வளவனூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.
 இந்நிலையில் விழுப்புரம் நீதிமன்றம் 2-ல் இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது, விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த சுரேந்திரன், சித்தாமூர் சுப்பிரமணி, பாசறை பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி எல்.கலைவாணி உத்திரவிட்டார்.

அறியாமல் கொடுத்தாங்களோ ?

திருச்சியில் தமிழ் அறிஞர்களுக்கு 2011க்கான விருது வழங்கும் விழா மற்றும் சித்திரை கலை விழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி 2012 அன்று திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், கலைஞரின் மு.க.அழகிரி என்ற பெயரில் மாத இதழ் நடத்தி வரும் அதன் ஆசிரியர் 'மானோஸ் எழுதிய ஜெருசலேம் என்ற நூல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி விருதை வழங்கினார். அப்போது அதிமுக திருச்சி எம்பி குமார், அதிமுக எம்எல்ஏக்கள் மனோகரன், பரஞ்சோதி, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் ஆசிரியர் மானோஸ்க்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்த விழா நடந்தபோதே ஆச்சரியமான விஷயம் இதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று திருச்சி திமுகவினர் தெரிவித்தனர். ஆனால் இந்த விழா நடந்து இரு மாதங்களுக்குப் பிறகு, கலைஞரின் மு.க.அழகிரி மாத இதழின் ஆசிரியர் குழுவினர், விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்து திருச்சி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுக்கு அவரை (மானோஸ்) எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்றும், விழா ஏற்பாட்டு செய்யும்போது கூட கவனிக்கவில்லையா என்றும் அதிமுக மந்திரியும், எம்எல்ஏக்களும் விழா ஏற்பாடு செய்தவர்களிடம் தங்களின் கோபத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
விழா ஏற்பாடு செய்தவர்களை விடுங்க, விருது கொடுக்கும்போது போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கு முன்னாடி நீங்க யோசிச்சீங்களா என்று மேலிடத்தில் கேட்பாங்களே அதற்கு என்ன பதில் சொல்லப்போறீங்க என்று மந்திரியிடமும், எம்எல்ஏக்களிடமும் சொல்லி திருச்சி அதிமுகவினரே கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ரயில்வே தட்கல் முன்பதிவு ரத்து செய்யப்படுமா ? இடைத்தரகர்கள் ஆக்கிரமிப்பு

ரெயிலில் கடைசி நேரத்தில் அவசரமாக செல்ல விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் தட்கல் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். 
தட்கல் முன்பதிவு திட்டத்தில் இடைத்தரகர்களால் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இடைத்தரகர்கள் தட்கல் டிக்கெட்டுக்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு அதை அதிக விலைக்கு விற்கிறார்கள். 
இடைத்தரகர்கள் மட்டுமின்றி ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசாரும் தட்கல் முன்பதிவில் முறைகேடு செய்வதாக புகார்கள் கூறப்பட்டன.
சமீபத்தில் இந்த முறைகேட்டை ஒரு தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. தட்கல் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக அடிக்கடி புகார்கள் வருவதால் இந்த திட்டத்தை கைவிட்டு விடலாமா என்று ரெயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். 
இதுதொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தட்கல் முன்பதிவில் எத்தகைய மாற்றங்கள் செய்யலாம் என்ற பரிந்துரைகளும் பெறப்பட்டு வருகிறது. 

தற்போது தட்கல் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்கள் ரெயில் பயணத்தின் போது தங்களது அடையாள அட்டை ஆவணங்களை காண்பிக்கிறார்கள். அதற்கு பதில் தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்யும் போதே அடையாள அட்டையை காட்டும் வகையில் மாற்றம் செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

டிக்கெட் கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் விற்பனையை நிறுத்தி விட்டு இ-டிக்கெட் முறையை விரிவுபடுத்தலாம் என்றும் ஒரு பரிந்துரை வந்துள்ளது. 

தட்கல் முன்பதிவு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். ஒரு நபருக்கு 2 தட்கல் டிக்கெட்டுக்களே கொடுக்கப்பட வேண்டும். தட்கல் முன்பதிவு செய்த பிறகு எக்காரணம் கொண்டும் பெயர்களை மாற்ற அனுமதிக்கக்கூடாது. தட்கல் டிக்கெட் ரத்து செய்யப்படுவதில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இப்படி பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விரைவில் ரெயில்வே இலாகா முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 28 ஜூன், 2012

நண்பர் ஊழல் செய்தால் ,சப்தத்தை காணோம் !


மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டட ஒப்பந்ததாரரான திலீப் சூர்ய வன்ஷினி மற்றும் சுரங்க ஒப்பந்ததாரரும், வி.என்.எஸ்., குழு இயக்குனருமான சுதீர் சர்மா ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

 இதுகுறித்து, அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் சிங் பத்திரிகையாளர்களிடம், ’’மத்திய பிரதேச மாநிலத்தில் எட்டு ஆண்டுகளாக நடந்த பா.ஜ., ஆட்சி யில் திலீப் சூர்ய வன்ஷினி மற்றும் சுதீர் சர்மா ஆகியோர் கோடீஸ்வரர்களாக மாறி விட்டனர். அவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனை குறித்து, முதல்வர் சவுகான் ஏன் பதிலேதும் கூறாமல் இருந்து வருகிறார். 
அந்த இருவரும் பாபா ராம்தேவுடன் புகைப்படங்களில் காட்சி அளிக்கின்றனர். ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவும், ஹசாரேவும் உண்மையிலேயே போராடி வருகின்றனர் என்றால், ஏன் இவ்விருவர் குறித்தும் எதுவும் பேசாமல் உள்ளனர்.

அவர்கள் வீடுகளில் நடந்த சோதனை குறித்து, பாபா ராம்தேவ் பதில் சொல்லியாக வேண்டும். அவர் களது வீடுகளில் இருந்து வருமான வரித்துறையினர், அரசு பைல்கள் உட்பட பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். 
இது குறித்து மாநில முதல்வர் சவுகான் மவுனம் காத்து வருவது ஏன்? இதிலிருந்தே முதல்வரது உண்மையான முகம் தெரிந்து விட்டது. 
யார் ஆட்சியை நடத்தி வருகின்றனர் என்பது பொதுமக்களுக்கு புரிந்து விட்டது. சரியான நேரம் வரும்போது, முதல்வர் சவுகான் அனைத்திற்கும் பதில் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

புதன், 27 ஜூன், 2012

கனவுகள் யாவும் நனவாக நிதிக்குழு வகுத்துள்ள திட்டம்:கே.எம்.கே.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்றைக்குத் தேசிய அளவில் எழுச்சி பெற்று வரும் இயக்கமாக எழுந்திருக்கிறது. இந்தியா முழுவதிலும் ஒரே பெயரில் - இ.யூ. முஸ்லிம் லீக் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது மட்டுமின்றி, கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகரிக்கப்பட்டுள்ள கட்சியாகவும், `ஏணிச் சின்னம்� ஒதுக்கப்பட்டுள்ள இயக்கமாகவும் ஏற்றம் பெற்றிருக்கிறது.

1948 மார்ச் 10 முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் இயக்கம் அரசியலில் ஈடுபட்டு வந்திருந்தாலும், இன்றைக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் போல் அது எக்காலத்திலும் பெற்றிருக்கவில்லை என்பது சரித்திர உண்மையாகும்.

கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்றுள்ளதால், அதே பெயரில் எல்லா மாநிலங்களிலும் - இந்தியா முழுவதிலும் இயங்கும் அரசியல் இயக்கம் என்னும் சிறப்பைப் பெற்றிருக்கிறது. கேரளாவில் அங்கீகரித்துள்ள ஏணி சின்னத்தில் பிற மாநிலங்களிலும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரில் போட்டியிடும் வாய்ப்பை இப்பொழுது பெற்றிருக் கிறோம்.

இதற்கு முன்னர் இப்படிப்பட்டதொரு சாதகமான சூழ்நிலை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு இருந்ததில்லை. இன்றைய கேரளாவில் இருந்து இருபது எம்.எல்.ஏ.க்களும், ஐந்து அமைச்சர்களும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு பெற்றிருக்கிறார்கள்.

கேரள எம்.பி.யாகவுள்ள இ.அஹமது, மத்திய வெளி விவகாரத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுச் சிறப்புடன் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

மத்திய அமைச்சராக உள்ள இ.அஹமது, இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராகப் போற்றப்படு கிறார். அவர் சுற்றி வரும் உலக நாடுகள் அனைத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் கட்சியும் இயக்கமும் தனது பெயரில் சுற்றி வருகிறது. இதன்மூலம், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் உலக நாடுகள் அனைத்திலும் இ.யூ. முஸ்லிம் லீக் என்னும் இந்த இயக்கத்தின் சிறப்பும், பெருமையும் ஒளிபரவுவது போல பரவி வருகிறது. 

இதற்கு முன்பு எந்தக் காலத்திலும் இல்லாததொரு தனிச் சிறப்பு, இன்றைக்கு இ.அஹமது அவர்களால் இ.யூ. முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டிருக்கிறது.

பல வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களி லும் உள்ள அரசுத் துறை மேல்மட்ட அதிகாரிகள் மத்தியில் இ.யூ. முஸ்லிம் லீகிற்கு `அஹமது சாஹிப் பார்ட்டி� என்று பெயர் சூட்டப்படுகிறது.

அரசுத் துறைச் செயலாளர்கள், காவல் துறைத் தலைவர்கள் மற்றும் பல துறைகளைச் சார்ந்தவர்களு டன் கலந்துரையாடல் நிகழும் தருணம் ஏற்படும்போதெல் லாம், `நீங்கள் அஹமது சாஹிப் பார்ட்டியா?� என்று கேட்பது இன்றைக்குச் சர்வ சாதாரணமான தொரு செய்தியாகி விட்டது.

இவற்றையெல்லாம் இங்கு எடுத்துக் காட்டுவதன் நோக்கம் வேறொன்றுமல்ல, எல்லோரும் வாய் நிரம்ப வாழ்த்திப் பேசும் ஓர் இயக்கமாக எழுச்சி பெற்றிருக்கும் இ.யூ. முஸ்லிம் லீகை சமுதாய மக்கள் மத்தியில் வேரூன்றச்செய்து, சமுதாயமனைத்தையும் இதன் நிழலில் கொண்டு வந்து சேர்க்கும் பணியை இன்றைக்கு ஒவ்வொருவரும் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றியாக வேண்டும் என்பதற்கே ஆகும்.

கேரளாவில் உள்ளதைப் போல இ.யூ. முஸ்லிம் லீகைத் தமிழகத்தில் வலிமை மிக்கதாக உருவாக்குவதற்குரிய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் இ.யூ. முஸ்லிம் லீகின் செயல் திட்டங்கள் என்று மார்ச் 10 - நிறுவன நாள் கொண்டாடுவது, ஜூன் 5 - காயிதெ மில்லத் பிறந்த தின விழா மற்றும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்துவது, அக்டோபர் 4 - சிராஜுல் மில்லத் பிறந்த தின விழா - சமூக நல்லிணக்க விழா - விருது வழங்குவது - டிசம்பரில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு காண்பது என்பனவற்றை அறிவித்து, அவற்றை ஒவ்வொரு ஆண்டிலும் சிறப்பாகச் செய்து வருகிறோம்.

இயக்கத்தின் பொது நடவடிக்கைத் திட்டங்களுடன், இயக்கத்தின் கட்டமைப்பில் சில புதிய கிளையமைப்பு கள்உருவாக்கியும் வருகிறோம். முஸ்லிம் யூத் லீக், எம்.எஸ்.எஃப் (முஸ்லிம் ஸ்டூடன்ஸ் ஃபெடரேஷன்), எஸ்.டி.யு. (சுதந்திர தொழிலாளர் யூனியன்), வனிதா லீக் (மகளிர் அணி) ஆகிய நான்கும் தேசிய அளவில் உள்ள அமைப்புகளாகும். அவற்றின் கிளைகளைத் தமிழகத்திலும் சிறப்பாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நான்கு அமைப்புகளுக்கும் மேலாக, சார்பு அமைப்புகள் - குறிப்பாக, வர்த்தகர் அணி, விவசாயி அணி, உலமாக்கள் அணி, காயிதெ மில்லத் பேரவை, சிராஜுல் மில்லத் பேரவை, இலக்கிய அணி என்பன போன்ற கிளை அமைப்புகளை மாவட்ட அளவில் ஏற்படுத்திக் கொள்ளும் சிறப்புச் சலுகைகளும் இயக்கச் சட்டவிதிகளில் வரையறை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் இயக்க அமைப்பு முறையிலும், சார்பு கிளைகள் உருவாக்கும் முறையிலும் சிறப்பான பணிகள் தொடர்கின்றன.

இவற்றை இன்னும் ஊக்கப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவ தற்கும் பிரைமரி, நகர, மாவட்ட, மாநில லீகுகளின் பொருளாதார பலமும் அதிகரிக்க வேண்டும். அதற்கான திட்டங்களும், எல்லாக் கட்டங்களிலும் உருவாக்கப் பெற்று சிறப்பாகச்செயல்படுத்தப் படுதல் வேண்டும். சமீப காலத்தில் சில நகரங்களில் இ.யூ. முஸ்லிம் லீகிற்கு அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சொந் தக் கட்டடங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய விவரங்கள் தலைமை நிலையத்தில் இருந்தாக வேண்டும் என்பதால், சொத்து விவரங்கள் பற்றிய தகவல்களை தலைமை நிலையத்துக்கு அனுப்பிடக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு மாவட்ட முஸ்லிம் லீக் ஆண்டுக் கூட்டங்களைத் தவறாமல் நடத்திடவும், ஆண்டறிக்கை சமர்ப்பிக்கவும், தணிக்கை செய்யப்பட்டுள்ள கணக்கு சமர்ப்பித்து அவையின் ஒப்புதல் பெறவும், இதுபற்றிய விவரங்களை தலைமை நிலையத்துக்கு அனுப்பித் தரவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மாவட்ட முஸ்லிம் லீகுகள் கட்டாயம் வங்கியில் கணக்கு வைத்திடும் முறையை உடனடியாகச் செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுயாவும் பிரைமரி, நகர, மாவட்ட லீகுகளின் பொருளாதார வலிமையைப் பெருக்கிடுவதற்கான ஆரம்பக் கட்டச் செயல்பாடுகளாகும் என்பதை உணர்ந்து கொண்டு பொறுப்பாளர்கள் பணி தொடர வேண்டும்.

அதோடு, மாநில தலைமை நிலையத்தின் பொருளா தார வலிமை பற்றியும், நிதி சேர்க்க வேண்டிய அவசியம் பற்றியும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசி வந்திருக்கிறோம். பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்ட ஆலோசனை குழுக்கள் அனைத்திலும் பலப்பல தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்.

தலைமை நிலையத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற் குரிய ஆலோசனைகளையும், திட்டங்களையும் வழங்கிடக் கேட்டுக் கொண்டு, மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் அவர்கள் தலைமையில் இயக்க வளர்ச்சி நிதிக்குழு உருவாக்கப் பட்டதும், அதில் எம்.எஸ். துராப்ஷா, தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத், கமுதி பஷீர், ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், மில்லத் முஹம்மது இஸ்மாயில், எஸ்.எம். அமீர் அப்பாஸ் ஆகிய உறுப்பினர் கள் இடம் பெற்றுள்ளதும் இயக்கத்தினருக்கு தெரிந்ததே.

கடந்த மூன்றாண்டுகளாக நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களையும் கவனத்தில் கொண்டு, இன்றைக்குள்ள தேவையையும், வருங்காலத்தின் தேவையையும் கருத்திற் கொண்டு இயக்க வளர்ச்சி நிதியை உருவாக்கும் திட்டத்தை தலைமை நிலையத்தில் 26-6- 2012 அன்று இயக்க வளர்ச்சி நிதிக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.

மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் தலைமையிலான நிதிக் குழுவினர் அளித்திட்ட இயக்க நிதி வளர்ச்சித்திட்டம் பற்றிய கலந்தாலோசனையும் நடந்தது.

மூன்றாண்டு காலமாக நாம் கண்டு வந்துள்ள கனவுகள் யாவும் விரைவில் நிறைவேறி நனவாகும் வகையில் நிதிக்குழுவின் திட்டங்கள் அமைந்துள்ளன. அந்த அரிய திட்டங்கள் பற்றியும் அவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை விரைவில் இயக்கத்தவருக்கும், சமுதாயத்தவருக்கும் தருவோம்! அனைத்துத் திட்டங்களையும் விரைவில் நிறைவேற இறையருளைப் பெறுவோம்!

இந்திய குடும்பத்திற்கு கின்னஸ் அவார்டா ? இயற்கையான கடினங்களை சந்திப்பது உலக சாதனையா ?



புனேயைச் சேர்ந்த, நாட்டின்மிக உயரமான குடும்பத்தினர்,உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேநகரைச் சேர்ந்தவர் சரத் குல்கர்னி, 52. இவரது உயரம், 7 அடி1.5 அங்குலம். மனைவி சஞ்சோத், 46, உயரம், 6 அடி 2.6 அங்குலம். மகள் ம்ருகா, 22, உயரம்,6 அடி ஒரு அங்குலம். மற்றொருமகள் சன்யா, 16, 6 அடி 4 அங்குலம். ஒட்டுமொத்த குடும்பத்தின் மொத்த உயரம் 26 அடி.குல்கர்னி - சஞ்சோத்துக்கு,1988ல், திருமணம் நடந்தது.1989ல், நாட்டின் உயரமான தம்பதியராக, "லிம்கா சாதனை'ப்புத்தகத்தில் இடம் பெற்றனர். இந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைகளும் உயரமாக இருப்பதால், நாட்டிலேயே உயரமான குடும்பத்தினர் என்ற பெருமை பெற்றுள்ளனர். அமெரிக்காவின், கலிபோர்னியாவின் ஸ்டாக்டன் நகரைச்சேர்ந்த வெயின்-லவுரி ஹால்கிவிஸ்ட் தம்பதியினரின் மொத்தஉயரம், 13 அடி, நான்கு அங்குலம். இந்த தம்பதியர் தான் உலகின் மிக உயரமான தம்பதியர்என, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். விரைவில், உலகின் உயரமான குடும்பத்தினர் என்ற சாதனையை குல்கர்னி குடும்பம்தட்டிச் செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கின்னஸ் சாதனைபுத்தகத்தில் உயரமான குடும்பத்தினர் தொடர்பான பிரிவு தற்போது இல்லை என்பதால்,மீண்டும் அதைச் சேர்ப்பதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
""டீன் ஏஜ் பருவத்தில் என்உயரம், 7 அடியாக இருந்தது. இந்த உயரத்தால் பல விமர்சனங்களைச் சந்தித்துள்ளேன். உயரத்தின் மூலம் விளையாட்டில் சாதிக்க வேண்டும் எனகருதி, என் சக்தியை செலவழித்தேன். குறிப்பாக, கூடைப்பந்துபோட்டியில் சாதிக்க விரும்பினேன். ஆனால், நான் வசித்தது குக்கிராமம் என்பதால், என்முயற்சி பலனளிக்கவில்லை. வித்தியாசமான வாழ்வுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் மகிழ்ச்சி,'' என, சரத் குல்கர்னி தெரிவித்தார்.

அவரது மனைவி சஞ்சோத்,""இந்தியாவில் ஆணை விடபெண் உயரமாக இருப்பது பெண்ணுக்கு சங்கடமாக இருக்கும். என் உயரத்தைப் பார்த்து,மன வருத்தம் அடையக் கூடிய,என்னை விட குள்ளமானவரைநான் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஒருநாள் என் கணவர் மும்பை வீதியில் நடந்து சென்றார். என்பாட்டி அவரை அணுகி, என்னை திருமணம் செய்துகொள்வது குறித்து பேசினார்.சில நாட்களில் என் கணவர் அவரது குடும்பத்தினருடன் வந்து,என்னை பேசி மணமுடித்தார்,''என்றார்.
நாட்டின் உயரமான குடும்பதலைவர் என்ற பெருமைக்குசொந்தக்காரரான சரத் குல்கர்னி, அவருக்கு பொருத்தமான உடைகள், காலணிகள் கிடைக்காமல்அவதிபட்டு வருகிறார். அவருக்கு உரிய காலணிகளை,"ஆன்-லைன்' மூலம் பதிவுசெய்து, ஐரோப்பாவில் இருந்து வரவழைக்கிறார். அவரது வீட்டின் சமயலறையில் இருந்து அனைத்து அறைகளும், நீள அகலத்துடன் உள்ளன. இவர்கள்பஸ்களில் பயணிப்பதில்லை.இரு சக்கர வாகனங்களிலேயே செல்கின்றனர்.
மனிதனை எப்படி ,எந்தக் கோணத்தில் ,அழகுடன் படைக்க வேண்டும் என்று அறிந்த எல்லாம் வல்ல இறைவன் படைத்த அந்த உயராமான மனிதர்கள் உள்ள குடும்பத்திர்க்கல்லவோ கின்னஸ் அவார்டு கிடைக்கப்போகின்றது .


செவ்வாய், 26 ஜூன், 2012

காராக்கிரக கதவுகள் திறக்கட்டும் ! அப்பாவிகள் வாழ்வு மலரட்டும் !


    பத்தாண்டுகளுக்கு மேலான சிறைவாசிகள் விடுதலைகோரி 

            இந்திய யூனியன் முஸ்லிம் லீக்                                                

                               மாபெரும் பொதுக்கூட்டம் 
      
                                              நாள் :
 இன்ஷால்லாஹ் 08 /07 /2012  ஞாயிறு -  இரவு 8  மணி 
                                                           இடம் : 
        பஜார் திடல் ,மேலப்பாளையம் 

                                     கோரிக்கை முழக்கம் :  
                சமுதாயப் பெருந்தலைவர் 
    பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன் 
                   சமுதாயப் போர்வாள்             
              எம்.அப்துல் ரகுமான் M P 
             
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                              இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

                                                            மேலப்பாளையம்

பறக்கும் போதே மொபைல் மூலம் பேசலாம் : புதிய விமான சேவை

விமானத்தில் செல்லும்போதும், "மொபைல் போனில்' பேசுவது, உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட புதிய விமானத்தை, பிரிட்டனின் விர்ஜின் நிறுவனம், விரைவில் டில்லியிலிருந்து லண்டனுக்கு இயக்கவுள்ளது.

இதுகுறித்து பிரிட்டனின் விர்ஜின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ரிக்வே கூறியதாவது: தற்போது விமானங்களில் பயணிப்போர், "மொபைல் போனில்' பேச முடியாது. ஆனால், நாங்கள் புதிதாக, டில்லியிலிருந்து லண்டனுக்கு, அடுத்த மாதம், 11ம் தேதியில் இருந்து இயக்கவுள்ள, ஏ 330 ரக விமானத்தில், "மொபைல் போனில்' பேசும் வசதியை ஏற்படுத்த உள்ளோம்.

இதற்காக, அந்த விமானத்தில் "ஏரோ மொபைல்' தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தவுள்ளோம். இதன் மூலம், அந்த விமானம், தரையிலிருந்து 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், அதிலிருந்தபடி "மொபைல் போனில்' பேசவும், குறுந்தகவல்களை அனுப்பவும் முடியும். இதுதவிர, தொடு திரை பொழுபோக்கு வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அந்த விமானத்தில் மேலும் பல வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டீவ் ரிக்வே கூறினார். 

நேர்மையின் அடையாளமோ ?

 சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது புகார் எழுந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பான நேர்முகத் தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 35 சத்துணவு அமைப்பாளர், 28 சமையலர், 153 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு மாவட்ட அளவில் ஜூலை 3-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
 நேர்முகத் தேர்வுக்கு கடிதம் வரப்பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 3-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்.
 சத்துணவு திட்டத்தின் கீழ் வரப்பெற்ற விண்ணப்பங்களில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு தகுதி அடிப்படையில் 25 சதவீத பணியிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது தகுதியின் அடிப்படையில் 3 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும். ஊனத்தின் சதவீதம், பணிபுரிவதற்கான உடல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.
 சத்துணவு பணியாளர்களுக்கான தேர்வு நேர்மையாகவும், முறையாகவும், நியாயமானதாகவும் மற்றும் அரசு விதிகளில் குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் நடத்தப்படும்.
 சத்துணவு பணியாளர் காலியிடங்களுக்கு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றும் நபர்களிடம் பொதுமக்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். சத்துணவு பணியாளர் நியமனத்திற்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
 சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது புகார்கள் ஏதும் வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
 மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களை தொடர்பு கொள்ளலாம். 

காஷ்மீர் சூஃபி தர்காவில் தீவிபத்து: போலீசார் பொதுமக்கள் மோதல்

காஷ்மீரில் 200 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சூஃபி தர்காவில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தீவிபத்து குறித்து தகவல் அளித்தும் தீயணைப்பு வாகனங்கள் வர ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதமானதாகக் கூறி  பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் சம்பவ இடத்தை அடைவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் வேறு தாமதம் எதுவும் இல்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.




இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். மேலும் தடியடியும் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்த மோதல்களில் 10 போலீசார் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.

திங்கள், 25 ஜூன், 2012

சுனாமி திருடர்களுக்கு ,சமுதாய போர்வாள் சவால் !

 நேற்று (24 /06 /2012 )    லால்பேட்டை மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது .அந்த கூட்டத்தில் சமுதாயத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்களும் ,சமுதாய போர்வாள்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரகுமான் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள் .என்றைக்குமே ,முஸ்லிம் லீக் தலைவர்களுக்கு பிறரை சாடி பேசும் பழக்கம் கிடையாது .ஆனால் ,உண்மைக்கு பங்கம் விளைவிக்க யாரும் முயற்சித்தால் ,அதனை தடுத்து உண்மையை சமுதாயம் அறியச்செய்வது அவர்களின் கடமை .எனவே ,பொய்யான பேச்சுக்கள் ,தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தினரால் சுனாமி திருடர்கள் என்று அழைக்கப்படும் தமுமுக வினர் ,குறிப்பாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா பல மேடைகளில் ,முஸ்லிம் தலைவர்களை ,நம் சமுதாயத் தந்தை காயிதே மில்லத் (ரஹ்) அவர்களையும் சேர்த்து விமர்சித்து ,பொய் குற்றச்சாட்டு கூறி வருவதை சமுதாய மக்கள் பார்த்து வருகின்றனர் .


முன்பு ,தமுமுக விலிருந்து TNTJ  துவங்கிய கால கட்டத்தில் ,திருநெல்வேலி  மாவட்டம் கடையநல்லூரில் நடந்த தமுமுக கூட்டத்தில் ,அரசியல் நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பற்றி ,அன்றிருந்த எந்த முஸ்லிம் தலைவரும் பேசவில்லை என்று நம் சமுதாயத்தந்தை காயிதே மில்லத் (ரஹ் ) அவர்களை குறைசொல்ல எத்தனித்து ஜவாஹிருல்லா பேசிய போது ,அவரின் பேச்சை துணிவுடன்  சமுதாய இளைஞர்கள் தடுத்து வெள்ளை காகிதத்தில் அரசியல் நிர்ணய சபையில் நடந்ததை சுட்டி காட்டி எழுதிக்கொடுத்த போது பதில் சொல்லாமல் வேறுபக்கம் பேச்சை திசை திருப்பி  பேச்சை முடித்து விட்டு சென்றார். இது அவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது ,

அதுபோல் நமது சமுதாயத்தின் போர்வாளாக நாடெங்கும் சுற்றி சுழன்று ,சமுதாய மக்களுக்காக  பாடுபட்டு வரும் எம்.அப்துல் ரகுமான் எம்.பி அவர்கள் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை பற்றி வாய்திறக்கவில்லை என்று நாக்கூசாமல் ,தான் பேசும் மேடைகளில் பகிரங்கமாக பொய் பிரச்சாரம் ஜவாஹிருல்லா செய்து வருகின்றார் என்று செய்தி பலதடவை நம் சமுதாய பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களிடம் புகார்கள் வந்தன .அவர்கள் அதனை பெரியவிசயமாக எடுக்க வேண்டாம் , நமது பணிகள் நம் சமுத்திற்கு தெரியும் ,அதுவும் நாடாளுமன்ற நடவடிக்கைள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது ,அவருக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று கூறி ,தமது சமுதாய பணிகளை கவனித்து வந்தனர் .ஆனால் ,ஜவாஹிருல்லாவின்  பொய் பிரச்சாரம் நின்றபாடில்லை .எனவே ,லால்பேட்டை பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.அப்துல் ரகுமான் எம்.பி. அவர்கள்  காலத்தின் கட்டாயத்தால் ,சமுதாயத்தில் பொய்ப்பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்! நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடுப்பற்றி நான் பேசவில்லை என்பதை தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் நிரூபிக்கத் தயாரா? பேசியதை ஆதாரத்துடன் வெளியிட்டால் வருத்தம் தெரிவிக்கத் தயாரா?என்று  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி.பகிரங்க சவால்விட்டு  பேசினார் .சவாலை  ஏற்றுக் கொள்ள ஜவாஹிருல்லா தயாரா? என்று கூட்டத்திற்கு வந்த சமுதாய இளைஞர்கள் பகிரங்கமாக பேசிக்கொண்டனர் .


ஆதாரத்தை நாமே வெளியிட்டுள்ளோம் ,ஜவாஹிருல்லா என்ன செய்யப்போகிறார் ?  அவர்தான் பதிலளிக்க வேண்டும் 

செய்தி உதவி :லால்பேட்டை அன்வர்



சர்வாதிகாரம் ஒழிந்தது ,ஜனநாயகம் மலர்ந்தது

  எகிப்து அதிபர் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சியின் வேட்பாளர் முகம்மது முர்ஸி (60) வெற்றிபெற்றார்.

இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் பரூக் சுல்தான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் முகம்மது முர்ஸிக்கும், முன்னாள் பிரதமர் அகமது சபீக் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில், மொத்தம் 51.73 சதீவத வாக்குகளைப் பெற்று முகம்மது முர்ஸி வெற்றி பெற்றார்.முர்ஸிக்கு மொத்தம் 1,32,30,131 வாக்குகளும், அகமது சபீக்கிற்கு 1,23,47,380 வாக்குகளும் கிடைத்தன.
முகம்மது முர்ஸி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் கெய்ரோவின் தாஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய அவரது தொண்டர்கள் முர்ஸிக்கு ஆதரவாகவும், ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

முன்னதாக கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 18 நாள்கள் போராட்டத்துக்குப் பின், ராணுவத்தின் நிர்பந்தம் காரணமாக அவர் பதவி விலகினார். 800 அரசு எதிர்ப்பாளர்கள் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது சிறையில் உள்ளார்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

அறிய முயற்சி


உலகம் முழுவதும் அழியும் நிலையில் இருக்கும் 3 ஆயிரம் மொழிகளை காப்பாற்றும் நோக்கில் பிரத்யேக வெப்சைட்டை கூகுள் உருவாக்கியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற கூகுள் இணையதளம் அழிந்து வரும் உலக மொழிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்த குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இணையதளத்தில் பொதுமக்கள் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளாக க்ளாரா ரிவேரா ரோடரிகஸ் மற்றும் ஜேசன் ரிஸ்மென் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
அவர்கள் இது குறித்து,  ‘’உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கு அதிகமான மொழிகள் உள்ளன. இதில் ஏறக்குறைய 3 ஆயிரம் மொழிகள் வழக்கொழியும் நிலையில் இருக்கின்றன. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 100 ஆண்டுகளில் அழிந்தேபோய்விடும். 
மொழிகள் அழிந்தால் ஒரு சமூகத்தின் வரலாறு, கலாசார பெருமை, பண்பாட்டு சிறப்புகளை எதிர்காலம் அறிய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அதை தடுக்கும் நோக்கில்தான் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
சில மொழிகளை ஒரு சிலர் மட்டுமே பேசிவருகின்றனர். அவர்கள் காலத்தோடு அந்த மொழி அழிந்து விடும் அபாயம் இருப்பதால் அந்த மொழியின் வீடியோ, ஆடியோ பதிவுகள் இந்த இணைய தளத் தில் வெளியிடப்படும். அதை பார்ப்பவர்கள் அந்த மொழி பற்றி தெரிந்துகொண்டால் அந்த மொழி அழியாமல் இருக்கும்’’என்று கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சை பிறந்தபின் அல்ல, பிறப்பதற்கு முன்பே !

பொதுவாக புற்றுநோயாளிகளுக்கு டாக்டர்கள் ஆபரேசன் செய்து குணப்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் கருவில் வளரும் குழந்தைக்கு புற்றுநோய் ஆபரேசன் நடத்தி சாதனை படைத்துள்ளனர். 

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் டாம்மி கான்சலேஷ். கர்ப்பிணி ஆன இவர் தனது வயிற்றில் வளரும் கரு வளர்ச்சியை அறிய ஸ்கேன் செய்தார். 17 வாரங்கள் வளர்ச்சி அடைந்த அந்த கரு பெண் குழந்தை என தெரிய வந்தது. 

எனவே அக்குழந்தைக்கு லெய்னா என டாம்மி பெயரிட்டார். ஆனால் அந்த குழந்தையின் வாயில் புற்றுநோய் தாக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனடியாக கருவில் வளரும் குழந்தையின் வாயில் சாமர்த்தியமாக ஆபரேசன் செய்து புற்றுநோய் கட்டிகளை அகற்றினர். 

உலகிலேயே முதன்முறையாக கரு குழந்தைக்கு ஆபரேசன் செய்து லணடன் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று அரிய புற்றுநோய் உருவாகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இன்னும் 5 மாதங்களில் அக்குழந்தை பிறக்கும். ஆனால் இது நீண்டநாள் உயிர் வாழ்வது கடினம். என்றும் அவர்கள் கூறினர். 

இதற்கிடையே தனது வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு ஆபரேசன் நடந்தபோது அதன் வாயில் இருந்து நீர்க்குமிழிகள் வெளியானதை பார்த்ததாக தாய் டாம்மி தெரிவித்தார்.

கேட்பதற்கே சந்தோசமாக இருக்கின்றது ,சுத்தமாக இருக்க அரசு அதிரடி உத்தரவு













சுத்தம், நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அனைத்து பள்ளிகளும் உரிய நேரத்தில் தொடங்கப்பட வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் சுத்தமாகவும், நேரம் தவறாமலும் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்கள் தினமும் சுத்தமாக சீருடை அணிந்து வர வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.
தரமான கல்வியை வழங்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு பசுமையாக வைக்க வேண்டும். மாணவர்களின் கற்கும் திறனை கண்காணித்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து ஒவ்வொரு மாணவரின் கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.