இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் பரூக் சுல்தான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் முகம்மது முர்ஸிக்கும், முன்னாள் பிரதமர் அகமது சபீக் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில், மொத்தம் 51.73 சதீவத வாக்குகளைப் பெற்று முகம்மது முர்ஸி வெற்றி பெற்றார்.முர்ஸிக்கு மொத்தம் 1,32,30,131 வாக்குகளும், அகமது சபீக்கிற்கு 1,23,47,380 வாக்குகளும் கிடைத்தன.
முகம்மது முர்ஸி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் கெய்ரோவின் தாஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய அவரது தொண்டர்கள் முர்ஸிக்கு ஆதரவாகவும், ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
முன்னதாக கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 18 நாள்கள் போராட்டத்துக்குப் பின், ராணுவத்தின் நிர்பந்தம் காரணமாக அவர் பதவி விலகினார். 800 அரசு எதிர்ப்பாளர்கள் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது சிறையில் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக