Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 30 ஜூலை, 2013

60 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வருகிறது : நாட்டின் 29 - ஆவது மாநிலமாக தெலுங்கானா உருவாகிறது


ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.இதனால் நாடாளுமன்ற ஒப்புதல் மற்றும் சம்பிரதாய சட்ட நடைமுறைகளுக்கு பின்னர் தெலுங்கானா மாநிலம் உருவாவது உறுதியாகிவிட்டது.

தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் அளிப்பது என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை முன்னரே வந்துவிட்டது. ஆனால் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று காலை இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த அமைச்சர்களுடன் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஏற்கனவே தீர்மானித்தபடி, இன்று மாலை நடைபெற உள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என்றும், அதற்கு முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டி, தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதலை பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒப்புதல் 
அதன்படி அஜித் சிங், சரத் பவார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் இத்தகவலை தெரிவித்தார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் 
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடியது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நிதியமைச்சர் ப.சிதம்பரம், கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதல் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 தெலுங்கானா மக்கள் மகிழ்ச்சி 
இதனிடையே தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறித்து தெலுங்கானா பகுதி மக்களும்,  தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் ( டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர ராவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அப்பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதே சமயம் தலைநகர் ஹைதராபாத்தை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை கூட்டம் 
இந்நிலையில் தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை நாளை கூடி இது தொடர்பாக விவாதிக்க உள்ளது.

ஹைதராபாத்
இக்கூட்டத்தில் தலைநகர் ஹைதராபாத் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஹைதராபாத்தை ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டப்படி சில ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களின் கூட்டுத் தலைநகராக வைத்துக்கொள்வது மற்றும் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவது ஆகிய அம்சங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 27 ஜூலை, 2013

பொள்ளாச்சியில் கீரை விலையை கேட்டு மக்கள் அதிர்ச்சி

அனைவரும் விரும்பி சாப்பிடும் கீரையின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். கீரைகளில் பல சத்துகள் இருப்பதால் அன்றாட உணவில் இது நிச்சயம் இடம் பிடிக்கிறது. முருங்கை கீரை, வல்லாரை கீரை, சிறு கீரை, பாலாக்கீரை, சுக்கிட்டி கீரை, பொன்னாங்கன்னி கீரை, வெந்தய கீரை, தண்டங்கீரை, அகத்தி கீரை, உள்ளிட்டவை மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதிக்கு உடுமலை, செஞ்சேரிமலை மற்றும் கேரள பகுதிகளில் இருந்து கீரை விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கடைகளிலும், ரோடுகளிலும், தள்ளு வண்டிகளிலும் கீரை விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் வெறும் ரூ.3-7 வரை ஒரு கட்டு கீரை விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கீரையின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கட்டு கீரை ரூ.10-15 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை கேட்டவுடன் மக்கள் ஓட்டம் பிடிக்கும் நிலையுள்ளது.

இதுகுறித்து வியாபாரி ரவீந்திரன் கூறியதாவது:பொள்ளாச்சி சுற்றுப்புற பகுதிக்கு உடுமலை, கேரளப்பகுதியில் இருந்து கீரை வரத்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சில கீரைகளுக்கு தட்டுப்பாடு இருக்கும் போது ரூ.20க்கும் விற்பனை செய்வதுண்டு.வாடிக்கையாளர்களால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை. விலையை கேட்டு விட்டு திரும்பி செல்கின்றனர். இதற்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பஸ் கட்டணம் அதிகரிப்பு ஆகும். கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலையுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நடப்பாண்டில் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: ப. சிதம்பரம்

மானாமதுரையில் இந்தியன் வங்கியின் 2110வது கிளையை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்,"நாட்டில் 80 லட்சம் சுயஉதவி குழுக்களுக்கு 86 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கல்வி கடனாக 50 ஆயிரம் கோடி ரூபாய் 25 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணையின் விலை பேரலுக்கு 108 டாலராக உயர்ந்து விட்டது. 100 டாலருக்குள் இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், கச்சா எண்ணை இறக்குமதியும் 70 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. 

பொருளாதார வளர்ச்சியில் மற்ற நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில் இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக தொடர்நது 2வது இடத்தில் உள்ளது. 9 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி 5 ஆக உள்ளது அடுத்தாண்டிற்குள் 6 சதவிகிதமாக உயரும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்ட அவர் அதனைத் தொடர்ந்து மிளகானூர் கிராமத்தில் ஓரியண்டல் வங்கியின் 2010 வது கிளையை திறந்து வைத்து..," நடப்பாண்டில் 8,000 வங்கி கிளைகள் துவங்கப்படவுள்ளன. இதனால் 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்"  என உறுதிப்படக் கூறினார்.

வெள்ளி, 26 ஜூலை, 2013

குண்டு தயாரிக்கும் ஆர்.எஸ்.எஸ். : திக்விஜய் சிங்

மத்திய பிரதேச சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு முகாமிட்டுள்ள திக்விஜய் சிங், நேற்று, பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளிக்கிறது. இதை நான் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை,
உண்மையாகவே கூறுகிறேன். 


1992ம் ஆண்டு, இந்த மாநிலத்தில், பா.ஜ., ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், சேவா பாரதி இல்லத்தில், குண்டு வெடித்தது. அதில் ஒருவர் இறந்தார்.அந்த வழக்கை, பா.ஜ., மூடிவிட்டது. 1993ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், குண்டுவெடிப்பு தொடர்பாக,சங் பரிவார் அமைப்பை சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டார். அது போல், 2004ல், மோவா என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர், தனக்கு, ஆர்.எஸ்.எஸ்., சில் குண்டு தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறினார். இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார்.

வியாழன், 25 ஜூலை, 2013

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பதர் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு எதிர் மனு தாரராக சேர்க்க கோரும் பேராசிரியர் கே.எம்.கே.மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

இஸ்லாத்தை சேர்ந்த பெண்களுக்கு விவாகரத்து போன்ற பிரச்சினைகளில் தங்களை பாதுகாக்க சட்டப் பூர்வமான உரிமைகள் இல்லை என்றும், மனைவிக்கு தெரியாம லேயே கணவன் தலாக் கூறி காஜிகளிடம் மணமுறிவுக்கான சான்றிதழ் பெற்றுவிடுகிறார் என்றும் எனவே மணமுறிவு சான்றிதழ் வழங்க காஜி களுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் வக்ஃப் வாரிய தலைவருமான பதர் சயீத் ஜுன் 5ம் தேதி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர், தமிழக அரசு பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை செயலாளர், தமிழக தலைமை காஜி ஆகியோர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள னர்.

""""பதர் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு, பள்ளிவாசலை மைய மாகக்கொண்டு செயல்படும் மஹல்லா ஜமாஅத்தை சீர் குலைக்கவும், ஷரீஅத் சட்டத் திற்கு பதிலாக பொது சிவில் சட்டத்தை ஊக்குவிக்கவும் செய்யும் முயற்சி என்றும் எனவே இதனை முறியடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் தன்னை ஒரு தரப்பினராக இணைத்து இந்த வழக்கை எதிர் கொள்ளும்"" என பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜுலை 3ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில் அவர் """" மத சிறுபா ன்மையினர் விஷயங்களில் எனக்குள்ள ஈடுபாடு காரண மாக இந்த ரிட் மனுவில் எனக்கு அக்கறை உண்டு. ஷரீஅத் அனைத்து முஸ்லிம் களையும் கட்டுப்படுத்தக் கூடியது. ஷரீஅத் சட்டப்படிதான் காஜிகள், ஙாயிப் காஜிகள், என்ற பள்ளிவாசல் இமாம்கள் திருமணங்களை பதிவு செய் கிறார்கள். தனியார் சட்டங்கள் அத்தியாவசிய தேவை என்பதோடு அவை எல்லா மதிப்புடனும் பாதுகாத்து பேணப்படுகின்றன. பதர் சயீத் வழக்கில் நான் எதிர் மனு தாரராக ஏற்றுக் கொள்ளப் பட்டால் சிறுபான்மை சமுகத்தி னரின் தனியார் சட்டம் குறித்த மிக முக்கியமான -உணர்வு பூர்வமான விஷயங்களை நீதிமன்றத்தில் என்னால் சமர்ப்பிக்க முடியும். எனவே என்னை நான்காவது எதிர் மனு தாரராக இணைக்கக்கோரி நீதியை நிலைநாட்ட விழை கிறேன்.""- எனக்குறிப் பிட்டுள்ளார்.

இந்த வழக்கை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் கே. அசோக்குமார்,கே. கணேசன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள னர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து பணிகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் கவனித்து வருகிறார்.

இந்த வழக்கு அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அன்று அளித்த தீர்ப்பை தொடர்ந்து அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி ஷரீஅத் பாதுகாப்பு சட்ட மசோதா கொண்டு வந்த நிறைவேற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் ஜி.எம்.பனாத் வாலா தாக்கல் செய்த தனி நபர் மசோதாவே காரணம் என்பதும், அவரது வாதத்திற்கு அனைத்து ஆதாரங்களையும் திரட்டிக் கொடுத்தவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் என்பதும், இதற்கு பெரும் துணை புரிந்தவர் ஈரோடு தாவூதிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவூதி ஹஸரத் என்பதும் நினைவு கூறத்தக்கது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்ட திட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

""முஸ்லிம் லீக்"" -இந்திய அரசியலில் வரலாற்றுப் பேரியக்கம் இயக்கங்கள் எத்தனை தோன்றினாலும் ""தாய்ச்சபை"" என்று முஸ்லிம் சமுதாயம் அரவணைப்பதும், """"சமுதாய பேரியக்கம்"" என மஹல்லா ஜமாஅத்துக்கள் அங்கீகரிப்பதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தான்.

சமுதாய அங்கீகாரம்
பள்ளிவாசல்கள் திறப்பு விழாக்களிலும், அரபிக்கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களையே சமுதாயம் அழைத்து கவுரவப்படுத்துவது இந்த இயக்கத்திற்குக் கிடைத்த தனிப் பெரும் பெருமை.

பிரச்சினைகளின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ன சொல்கிறது? என சமுதாயம் எதிர் பார்ப்பது எந்த இயக்கத்திற்கும் கிடைக்காத ஒன்று.

பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் பெருமை காப்பாற்ற பட வேண்டும்- அது வலிமை பெற்றதாக -கட்டுப்பாடு மிக்கதாகத் திகழ வேண்டும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது தலையாய லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது.

எனவே தான் தனி பள்ளிவாசல்- போட்டி ஜமாஅத், இயக்கங்களின் பெயரால் திருமணப் பதிவேடு, தனி கபரஸ்தான், தொழுகைனளில் தனித்த அடையாளங்களை காட்டுவது என்பதை எல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பதில்லை.

மார்க்க விஷயங்களில் சங்கைக்குரிய உலமா பெருமக்களின் வழிகாட்டுதலையே சமுதாயம் பின்பற்ற வேண்டும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியுடன் சொல்லுகிறது.

அதனால்தான், இந்த இயக்கம் பலம் பெற வேண்டும் என இந்த சமுதாயம் விரும்புகிறது. இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளும், வருங்கால தலை முறையை வழி நடத்தும் பண்பாடும் எத்தகையது என்பதை பார்த்து அறிந்து தெரிந்த காரணத்தால்தான் தங்கள் பிள்ளைகளும் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டுகிறது.

இவைகள் எல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சமுதாயம் அளித்த மிகப்பெரும் அங்கீகாரம்.

அரசியல் அங்கீகாரம்
1906 டிசம்பர் 31-ல் உருவாக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக், முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன்மை, வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்தது, உருது மொழியை பாதுகாத்து வளர்த்தது, கல்வி-வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது, இட ஒதுக்கீடு என்ற சொல்லையே இந்தியாவிற்கு அறிமுகப் படுத்தியது-இவை வரலாற்று பதிவுகள்.

இந்திய விடுதலைக்குப்பின் சோதனையான காலகட்டத்தில் முஸ்லிம் லீக் செயல்பாடு-எதிர்காலம் குறித்த வினாக்கள் தொடுக்கப்பட்டு வந்த வேளையில் 1948 மார்ச் 10 புதன் கிழமை சென்னை அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப், தாய்ச்சபையை """"இந்திய யூனியன் முஸ்லிம் லீக்"" ஆக மலரச்செய்தார்.

தேசிய ஒருமைப்பாடு-சமய நல்லிணக்கம்-சிறுபான்மையினரின் தனித்தன்மைகளை காத்தல் என்பதை பிரதானமான லட்சியமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும் என்று அறிவித்தார்.

அதன்படி செயல்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய அரசியல் நிர்ணய சபை நாடாளுமன்ற மக்களவை- மாநிலங்களவை, சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் இடம் பெற்று சாதனை படைத்தது. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைச்சரவையில் இடம் பெற்றது. கேரளாவில் சி.எச். முஹம்மது கோயா முதல்வராக பொறுப்பேற்று தனி வரலாறு படைத்தார்.

மஹ்பூபெ மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட், முஜாஹிதெ மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா, சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது, முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் சமுதாய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி தனி முத்திரை பதித்தனர்.

இன்று இ.டி.முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான் ஆகியோரின் வாதத்திறமைகள் ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்து வருகின்றன.

முதல் பாராளுமன்றத்திலிருந்து இன்று வரை அங்கம் வகிப்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என நாடாளுமன்ற 60-வது ஆண்டு விழாவில் தேசிய தலைவர் இ. அஹமது சாகிப் பதிவு செய்தது. நினைவு கூரத்தக்கதாகும்.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக மத்தியில் 2004 மே 22-ம் தேதி பதவி ஏற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இ. அஹமது சாகிப் பொறுப்பேற்றார்.

கேரளாவில் 2011 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 20 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்ததோடு 5 அமைச்சர்களும் இடம் பெற்றனர்.

அரசியலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கிடைத்த அங்கீகாரத்தை பயன்படுத்தி நீதியரசர் ராஜேந்திர சச்சார் ஆணையம், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழு, மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் பவுண்டேசன் உள்ளிட்ட எண்ணற்ற நன்மைகளை பெற்று தந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அங்கீகாரம்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில பெயர்களோடு செயல்பட்டு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரே பெயரில் இயங்குவது என 2008 செப்டம்பர் 14-ல் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய செயற்குழு முடிவு எடுத்ததை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதனை தொடர்ந்து முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆனது.

இந்திய தேர்தல் ஆணையம் 2012 மார்ச் 3-ம் தேதி புதுடெல்லியில் அசோகா சாலையில் உள்ள நிர்வாச்சன் சதன் அலுவலகத்திலிருந்து வெளியிட்ட உத்தரவு இன்ப அதிர்ச்சியை தந்தது.

"""" முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி என்னும் பெயரில் இயங்கி வந்த அரசியல் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் இணைக்கப்பட்டுவிட்டது. ஒன்றாகி உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது. முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி என்னும் அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஏணி சின்னம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்படுகிறது.""

இதுதான் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. இந்த உத்தரவில் இன்னொரு விஷயத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது.

"""" தமிழ்நாட்டைச் சேர்ந்த தாவூது மியாகான், உத்திர பிரதேசத்தை சேர்ந்த பசீர் அஹமதுகான் (இவரைத்தான் தலைவர் என ஃபாத்திமா முஸப்பர் சொல்லி கொள்கிறார்). ‘தனி நபர்கள் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத இவர்கள் இக்கட்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்ற முற்றுப்புள்ளிதான் அது’.

இந்த உத்தரவில் தேர்தல் ஆணையத்தின் அன்றைய தலைமை ஆணையர் எஸ்.ஒய். குரைஷி, ஆணையர்கள் எச்.எம். பிரம்மா, வி.எஸ்.சம்பத் ஆகிய மூவரும் கைbழுத்திட்டிருந்தனர்.

அதன் பின் 14-03-2012 அன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்"இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" அங்கீகரிக்கப்படுவதாகவும், ஏணி சின்னம் ஒதுக்கப்படுவதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகமாக சென்னை-600 001, மரைக்காயர் லெப்பை தெரு 36-ம் இலக்கத்திலுள்ள காயிதே மில்லத் மன்ஸில் செயல்படும் என்றும் இந்த அறிவிப்பை இந்தியாவின் அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களும் அரசிதழில் வெளியிட்டு அதன் நகலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற மக்களவை 2012 ஜுன் 27-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் """"லோக் சபாவில் முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி’ என்ற பெயரில் இயங்கி வந்த கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீகுடன் இணைந்துள்ளது அங்கீகரிக்கப்படுகிறது. இனி அதன் உறுப்பினர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று அறியப்படுவார்கள் என லோக் சபா தலைவர் திருமதி மீராகுமார் 22-06-2012-ல் தனது ஆணையில் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்போது மகிழ்வின் உச்சகட்டம்
2013 ஜுலை 15-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டதிட்டங்களை (CONSTITUTIONAL OF IUML) அங்கீகரித்து அறிவித்துள்ளது.

இந்தியாவின் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 34 உள்ளன. இதில் 22 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன.

நாட்டில் மொத்தமுள்ள 1392 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில்

1) இந்திய தேசிய காங்கிரஸ், (2) பாரதீய ஜனதா, (3) இந்திய கம்யூனிஸ்ட், (4) மார்க்சிய கம்யூனிஸ்ட், (5) தேசிய வாத காங்கிரஸ், (6) பகுஜன் சமாஜ் பார்டி ஆகிய ஆறு கட்சிகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகும்.

22 மாநிலங்களில் 49 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகும்.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.,தே.மு.தி.க., ஆகியவை அங்கீகரிக்கப்பட்டவை.

கேரளாவில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டவை.

இந்தியாவிலேயே முஸ்லிம் என்ற பெயரில் இயங்கும் ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே.

இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்.

-காயல்மகபூப்

புதன், 24 ஜூலை, 2013

டிப்ளமோ படித்தவர்களை பொறியியல் படிக்க அழைக்கிறது சிபெட்(CIPET )

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிலையம் (சிபெட்)பொறியியல் படிப்புகளுக்கு, டிப்ளமோ படித்தவர்களுக்கான லேட்டரல் என்ட்ரி சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்
பி.டெக். (பிளாஸ்டிக் டெக்னாலஜி)
பி.இ. (மேன்யூபேக்சரிங் இன்ஜினியரிங்)

தகுதி
பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புக்கு பிளாஸ்டிக், பாலிமர், பிளாஸ்டிக்ஸ் மோல்ட், கெமிக்கல் டெக்னாலஜி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மேன்யூபேக்சரிங் இன்ஜினியரிங்  படிப்புக்கு மெக்கானிக்கல், புரொடக்சன் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், மெட்டலர்ஜி, மெக்கட்ரானிக்ஸ்  போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை 30 ஜூலை 2013குள் அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.cipet.gov.in என்ற இணையதளத்தை காணவும்.

திங்கள், 22 ஜூலை, 2013

திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை: மாணவ, மாணவியருக்கு அழைப்பு

தமிழக கல்லூரிக்கல்வி இயக்ககம் விடுத்துள்ள அறிக்கை: "மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால், திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழகத்தில், 2013, மார்ச்சில் வெளியான பிளஸ்2 மேல்நிலைப்பள்ளித் தேர்வு முடிவுகளில், 1200க்கு 955க்கு மேல், 80 சதவீத மதிப்பெண் பெற்ற கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் வேறு எந்தவித கல்வி உதவித்தொகையையும் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தில், மத்திய அரசால் தமிழகத்துக்கு, 4,883 பேருக்கு கல்வித் தொகை வழங்கப்படுகிறது.

இதில் 50 சதவீதம் பெண்களுக்காகவும், மாநில அரசின் இன சுழற்சி முறை மற்றும் ஒவ்வொரு இனத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.

விண்ணப்பிப்பவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கி, கணக்கு எண், மாணவ, மாணவியரின் இமெயில் முகவரி, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் ஆகிய விபரங்களை வழங்க வேண்டும்.

மாணவ, மாணவியர் ஊனமுற்றவர்களாக இருப்பின் அதற்குரிய மருத்துவ சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரி முதல்வர்கள் மூலம், ஆகஸ்ட் 30ம் தேதிக்குள், "இயக்குனர், கல்லூரிக்கல்வி இயக்ககம், ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, 6வது தளம், கல்லூரி சாலை, சென்னை-600006." என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ரயில் பய­ணத்தின் போது, பெண்கள் ஆடை அணி­வதில், கட்­டுப்­பாட்டை பின்­பற்­றினால், பிரச்னைகள் வராது’

பட்­டா­பி­ரா­மி­லி­ருந்து, சென்ட்ரல் ரயில் நிலை­யத்­திற்கு வந்த, புற­நகர் மின்­சார ரயிலில், நேற்று முன்­தினம் பயணம் செய்த, ஆந்­தி­ராவை சேர்ந்த நபர், பெண் பய­ணி­களை அலை­பே­சியில் ஆபாச படம் எடுத்­ததால், கைது செய்­யப்­பட்டார்.
சென்னை சென்ட்­ர­லி­ருந்து, டில்­லிக்கு, கடந்த 19ம் தேதி இயக்­கப்­பட்ட, ஜி.டி., விரைவு ரயிலில், ஆக்ரா அருகே, அதி­காலை நேரத்தில் ரயில் கொள்­ளை­யர்கள் புகுந்து, துப்­பாக்­கியை காட்டி, பய­ணி­களை மிரட்டி, பெண் பய­ணி­களின் நகை, பணம், பொருட்­களை கொள்­ளை­ய­டித்துச் சென்றனர்.


இந்த சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து, ரயில்­களில், பாது­காப்­பாக பயணம் செய்­வது தொடர்­பாக, பய­ணி­க­ளுக்­கான விழிப்­பு­ணர்வு முகாம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலை­யத்தில் நேற்று நடந்­தது.சென்ட்ரல் ரயில்வே போலீசார், ரயில் பய­ணத்தில் பய­ணி­க­ளுக்கு, பாது­காப்பு குறித்து, ஆலோ­சனை வழங்­கினர்.
ஆலோ­ச­னைகள் அச்­சி­டப்­பட்ட பிர­தி­களும் பய­ணி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.
 

இது­கு­றித்து ரயில்வே போலீசார் கூறி­ய­தா­வது:
பய­ணத்தின் போது, அறி­மு­க­மில்­லாதோர் தரும், உணவு பண்­டங்­களை உண்ண கூடாது; தெரி­யாத நபர்­க­ளிடம் பேசு­வதை தவிர்க்க வேண்டும்.
பய­ணத்தின் போது, தங்க நகைகள் அணி­வதையும், ஜன்னல் ஓரம் தலை வைத்து படுப்பதையும் தவிர்க்க வேண்டும்.


இரவு நேரத்தில் ரயில் பெட்­டியின் ஜன்­னல்­களை மூடி­வைக்க வேண்டும். பய­ணத்தின் போது, பெண்கள் உடம்பு முழு­வதும் மூடும் வகையில், பாது­காப்­பான முறையில், ஆடைகள் அணி­வதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதனால், பெண்கள் கவன குறை­வாக இருக்கும் போதோ, துாங்கும் போதோ விஷ­மி­களால் ஏற்­படும் தொந்­த­ரவு தவிர்க்­கப்­படும்.

ஓராண்டை நிறைவு செய்யும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நாட்டின் முதல் குடிமகன் பொறுப்பில் அமர்ந்து, இம்மாதம், 25ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில், ராஷ்டிரபதி பவனை, பொதுமக்களின் பவனாக மாற்றியுள்ளார்; அதன் பழமை மற்றும் சிறப்பை மேம்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல பொறுப்புகளை வகித்த, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, கடந்த ஆண்டு, 25ம் தேதி, ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிபா பாட்டீல் பதவிகாலம் முடிவடைந்ததை அடுத்து, பிரணாப் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.அவரின் இந்த ஓராண்டு சாதனைகளாக குறிப்பிடப்படும் அம்சங்களில், இரண்டு முக்கிய உத்தரவுகளை கூறலாம். மும்பை மீது தாக்குதல் நடத்திய, பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசப் மற்றும் பார்லிமென்ட் மீதான தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து, அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தந்ததை குறிப்பிடலாம்.அதற்கு அடுத்த படியாக, "தர்பார் ஹால்' சீரமைப்பை குறிப்பிடலாம். தலைநகர் டில்லியில், 320 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படும் ராஷ்டிரபதி பவனின், 85 ஆண்டு பழமையான, பாரம்பரியம் மிக்க, "தர்பார் ஹால்' பராமரிப்பு இல்லாமல், சீரழிந்து காணப்பட்டதை, புனரமைத்து, அதன் பொலிவு மாறாமல் மேம்படுத்திய பெருமை, பிரணாப்புக்கே உரியது.

தர்பார் ஹால் ஒலி:
"தர்பார் ஹாலில்' பெரும்பாலும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடப்பதில்லை; ஏனெனில், அதன் மாடம், 33 மீட்டர் உயரம் கொண்டது என்பதால், ஒலிபெருக்கிகள் தெளிவாக ஒலியை வழங்காமல், எதிரொலிக்கும். இந்தக் குறைபாட்டை, பிரணாப் உத்தரவின்படி, ஒலி வல்லுனர்கள் சரி செய்துள்ளனர்.அதுபோல், ராஷ்டிரபதி பவன் நூலகத்தையும் சீரமைத்து, அதில் இருந்த பழமையான பல புத்தகங்களை, பலரும் படிக்க ஏதுவாக ஒழுங்குபடுத்தி உள்ளனர்.ஜனாதிபதியை, "ஹிஸ் எக்சலன்சி' என, அழைப்பது தான், இதுவரை ராஷ்டிரபதி பவனில் பின்பற்றப்படும் மரபு; அதை பிரணாப் மாற்றியுள்ளார். பிரிட்டீஷ் கால மரியாதை தேவையில்லை என, கூறிவிட்டார். அது போல், ராஷ்டிரபதி பவன் பாதுகாப்பு கெடுபிடிகளும், பிரணாப் முகர்ஜியால் குறைக்கப்பட்டது.இதனால் பொதுமக்களும், சாதாரணமானவர்களும், எளிதாக நாட்டின் முதல் குடிமகனை சந்திக்க முடிகிறது.இதுபோல் பல சீர்திருத்தங்களை, ராஷ்டிரபதி பவனில் மேற்கொண்டு வரும் பிரணாப், ஜனாதிபதி பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்பதை நிரூபித்து வருகிறார். இந்த காலகட்டத்தில், 23 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, 36 கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்று உள்ளார்.



நிதி ஆதார மாற்றம் புதிய முறை வேண்டும்: 

"மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை பகிர்ந்து வழங்குவதில், புதிய முறை பின்பற்ற வேண்டும்; ஏனெனில், பீகார் மட்டுமின்றி, நாட்டின் பல மாநிலங்களிலும், வறுமை, வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. உள்கட்டமைப்பில் ஏற்படும் பின்னடைவு, நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைகிறது,'' என, பிரணாப் முகர்ஜி கூறினார்.பிரபல பொருளாதார மேதை, அமர்தியா சென் எழுதிய, பீகார் தொடர்பான புத்தகத்தை, நேற்று வெளியிட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இவ்வாறு பேசினார்.

சனி, 20 ஜூலை, 2013

இந்திய புலனாய்வு அமைப்பில் வேலைவாய்ப்பு

 இந்திய புலனாய்வு அமைப்பில்(Intelligence Bureau) பட்டதாரிகளுக்கு(Any Graduate) 750 Assistant Central Intelligence Officers காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்கு அனைத்து பட்டதாரிகளுகும் விண்ணபிக்கலாம். இந்தியாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த IB துறையில் இணைந்து சமூக விரோதிகளின் குற்ற செயல்களிலிருந்து நாட்டினை பாதுகாப்போம்.

இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? யார் விண்ணபிக்கலாம்? உள்ளிட்ட முக்கிய தகவல்கள் :

Location: All India

Name Of The Post:

Assistant Central Intelligence Officer 750 Posts

Qualification: Graduation or equivalent from a recognized University.

Pay: 9,300 – 34,800 plus Grade Pay 4,200/-

Age: 18-27 years,Upper age limit is relaxable by 5 years for SC/ST and by 3 years for OBC candidates. Upper age limit is also relaxable for Departmental Candidates with 3 years continuous service, upto 40 years and also certain other categories in accordance with the instructions or orders issued by Central Government from time to time.

Fee: Rs. 100/- (Rupees Hundred only). Only male candidates belonging to General and OBC category are required to pay the fee.
All SC/ST and female candidates are exempted from payment of examination fee.

How To Apply: Applications should be submitted only through ON-LINE registration by logging on to the website www.mha.nic.in. Applications will not be accepted through any other mode. Wrong information in any column may lead to the application getting rejected
altogether.

Last Date: 12-08-2013

More Details
http://mha.nic.in/pdfs/DtlAwdtz-ACIO-II-130713.pdf

Apply Online
http://www.mha.nic.in/

வெள்ளி, 19 ஜூலை, 2013

அரசு மருத்துவமனைக்கு வெளியே "வீசப்படும்" நோயாளிகள் பஸ் ஸ்டாப், ரோட்டில் கிடக்கும் அவலம்

மதுரை அரசு மருத்துவமனை வார்டுகளில் கவனிப்பாரற்று கிடப்பவர்களை, ரோட்டில் வீசும் கொடுமை தொடர்கிறது. இங்கு சிகிச்சைக்காக வயதானவர்களை அழைத்து வருபவர்கள், அப்படியே விட்டுச் செல்கின்றனர். ஆதரவற்ற முதியவர்களை பராமரிப்பது கடினம் என்பதால், இரவு நேரங்களில் அவர்களை வார்டிலிருந்து ஊழியர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றி, பஸ் ஸ்டாப்பில் விட்டுச் செல்கின்றனர். அல்லது, வேறு ஏதாவது வார்டுக்கு அருகில் கொண்டு வந்து படுக்க வைக்கின்றனர். அந்த நோயாளி இறந்தால் கூட, "ஆதரவற்றோர்' என்ற பெயரில் தான் மார்ச்சுவரியில் உடல் வைக்கப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதற்கான ஆதாரங்களை கூட தருவதில்லை.

மூன்று நாட்களுக்கு முன், ஈரோடு கரந்தபாளையம் வீரா,45 என்பவரை வார்டிலிருந்து வெளியேற்றினர். நெஞ்சுக்கூடு வெளியே தெரியும் வகையில், காசநோயாளி போலிருக்கும் அவர், மருத்துவமனைக்கு எதிரில் உள்ள சாக்கடையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார், அவரை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் பஸ் ஸ்டாப்பில் வீரா கிடந்தார். சோறு, தண்ணீர் இன்றி உதடுகள் உலர்ந்த நிலையில், தண்ணீருக்காக "தவித்துக்' கொண்டிருந்தார். செஞ்சுருள் சங்கத்தினருக்கு தகவல் கொடுத்தபின், மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இதேபோல, சித்த மருத்துவ வார்டு அருகில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 60 வயது மூதாட்டி மயங்கி கிடந்தார். இப்படி மருத்துவமனையைச் சுற்றி வயதானவர்கள் ஆங்காங்கே முடங்கி கிடப்பது, பரிதாபமாக இருக்கிறது. ஆதரவற்றவர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் தனியிடம் ஒதுக்கி, செஞ்சுருள் சங்கத்தின் மூலம் பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சைக்கோதெரபி படிப்பு

உளவியலின் முக்கியப் பிரிவுகளில் ஒன்று சைக்கோதெரபி. உளவியல் ரீதியான மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளைப் பெற்றிருப்பவருக்கு இத்துறை தான் உதவுகிறது. இதன் உதவியோடு இப்பிரச்னைகளைப் பெற்றிருப்பவர் தங்களது மனப்பாங்கையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ள முடிகிறது. நடத்தை முறைகளையும் இது மாற்றி ஒருவரை சாதாரணமான நபராக மாற்றவும் இது உதவுகிறது. நமது சிந்திக்கும் முறைகளை சைக்கோதெரபிஸ்டுகள் மாற்றுகிறார்கள்.

சைக்காலஜி என்னும் உளவியலில் பட்டப்படிப்பை முடித்திருப்பவர் பட்ட மேற்படிப்பில் உளவியலின் இந்த சிறப்புப் பிரிவைப் படிக்கலாம். உளவியல் பட்ட மேற்படிப்பு முடித்தபின்னும் இதைப் படிக்கலாம். சைக்கியாட்ரிஸ்டுகள் கட்டாயம் எம்.பி.பி.எஸ். முடித்த டாக்டர்களாக இருக்க வேண்டும். ஆனால் சைக்கோதெரபிஸ்டுகள் உளவியல் படித்தவராக இருந்தால் போதும். இதில் கிளினிகல் சைக்காலஜி, இன்டஸ்ட்ரியல் சைக்காலஜி போன்ற படிப்புப் பிரிவுகள் உள்ளன. இது போக ஆர்ட்ஸ் சைக்கோதெரபி என்னும் பிரிவும் உள்ளது. இது கிராபிக்ஸ் போன்ற வடிவங்களின் ரூபத்தில் பிரச்னைகளை கையாளுவதாகும்.

அடுத்தவர் மேல் பரிவுச் சிந்தனை இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல துறையாக அமையும். இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சைக்கோதெரபிஸ்டுகள் நமக்கு அண்மையில் இருப்பதை பலர் விரும்புகிறார்கள் என்பதை இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டும். அவ்வளவு தேவை இருக்கிறது சைக்கோதெரபிஸ்டுகளுக்கு. மும்பை பல்கலைக்கழகம், நிம்ஹான்ஸ் (பெங்களூரு) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இது தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன. 

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,800 பேர் பணி நியமனம்


பள்ளி கல்வித் துறையில், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களில், 1,800 பேர், விரைவில், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கல்வித் துறையில், பணியின் போது மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, படிப்படியாக, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. 2001 வரை விண்ணப்பித்த, 400க்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, 2009 வரை காத்திருக்கும், 500 பேருக்கு, விரைவில் வேலைவாய்ப்பு வழங்க, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, விண்ணப்ப சரிபார்ப்பு பணி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடந்து வருகிறது.

"தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர், சரிபார்ப்பு பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம், உறுதி செய்து கொள்ளலாம்" என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ஆக., 25ம் தேதி நடக்கும் "குரூப்-4" தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறைக்கு, 1,300 இடங்கள் ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதன், 17 ஜூலை, 2013

கடலியல் எனப்படும் ஓசனோகிராபி

 படிப்பவருக்கு ஆர்வத்தை மேலும் மேலும் துõண்டக்கூடிய துறை இது. பெருங்கடல் பற்றிய படிப்பு என்பதால் எப்போதும் கடலில் தான் இருக்க வேண்டுமோ என எண்ண வேண்டாம். கடலோரங்கள், கடல் நீர், கடல் படுகை, ஆற்றல் வளங்கள், உயிர்வளங்கள், என கடல் தொடர்பான பலவற்றைப் பற்றியும் ஆழமாக படிப்பதே இத்துறை. உயிரியல், வேதியியல், நிலவியல், நிலஇயற்பியல், கணிதம், பொறியியல் என அனைத்துத் திறன்களும் இப்படிப்பு படிப்பவருக்கு தேவைப்படுகிறது.

கடலியல் கெமிக்கல் ஓசனோகிராபி, ஜியாலஜிகல் ஓசனோகிராபி, பயாலஜிகல் ஓசனோகிராபி, பிசிகல் ஓசனோகிராபி என சிறப்புப் படிப்புப் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. கடலுக்கு அடியிலுள்ள வேதியியலைப் படிப்பது கெமிக்கல் ஓசனோகிராபி. கடல் மட்டத்திற்கு அடியிலுள்ள பூமியின் மேற்பரப்பைப் பற்றிப் படிப்பது ஜியாலஜிகல் ஓசனோகிராபி. கடல்களுக்கு அடியிலுள்ள உயிர்களைப் பற்றி, அதாவது, மரைன் லைப் பற்றிப் படிப்பது பயாலஜிகல் ஓசனோகிராபி. அலைகள், தட்பவெப்பம், உப்புத் தன்மை போன்றவற்றைப் பற்றிப் படிப்பது பிசிகல் ஓசனோகிராபி.

பேக்கேஜிங், மரைன் மார்க்கெட்டிங் மற்றும் மரைன் ஏற்றுமதி போன்ற துறைகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் சிறப்பான வேலை வாய்ப்புகள் இந்தப் படிப்பை முடிப்பவருக்குக் கிடைக்கின்றன. மேலும் ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா, தட்பவெப்பத் துறைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் அமைப்புகளிலும் நல்ல வேலைகளைப் பெற முடிகிறது.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பெற்ற கிராமம்

மகாராஷ்டிராவில் பழங்குடியின கிராமத்துக்கு, நாடு சுதந்திரம் அடைந்த, 65 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, மின்சார வசதி கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியை, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கிராம மக்கள் கொண்டாடினர்.

மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின் பிருத்விராஜ் சவான், முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள, அடர்ந்த வன மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு நடுவில், கரான்சி என்ற குக்கிராமம் உள்ளது.

சிம்னி விளக்குகள்:
பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், மின்சார வசதியே இல்லை. மின்சாரம் இல்லாததால், தெரு விளக்குகள் இருப்பது இல்லை. வீடுகளில், மண்ணெண்ணெய் மூலம் எரியும், சிம்னி விளக்குகள் தான், கண் சிமிட்டும். தங்கள் கிராமத்துக்கு, மின்வசதி செய்து தரக் கோரி, இந்த கிராம மக்கள், ஒவ்வொரு அலுவலகமாக படியேறியும் பயன் கிடைக்கவில்லை."அடர்ந்த மலை மற்றும் வனப் பகுதிகளுக்கு நடுவில், மின் கம்பங்களை அமைத்தால் மட்டுமே, மின்சார வசதியை ஏற்படுத்த முடியும். அது, இப்போது சாத்தியமில்லை' எனக் கூறி, அதிகாரிகள், தட்டி கழித்து வந்தனர்.இந்நிலையில், கடும் முயற்சி, போராட்டங்கள் காரணமாக, நாடு சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக, இந்த கிராமத்துக்கு தற்போது, மின்சார வசதி கிடைத்துள்ளது. இதற்கான துவக்க விழா, சமீபத்தில் நடந்தது. முதல் முறையாக, தங்கள் கிராமத்துக்கு மின்சார வசதி கிடைத்துள்ளதை, அந்த கிராம மக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மகிழ்ச்சி:
மகாராஷ்டிரா மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கரான்சி கிராமம், இதுவரை இருளில் மூழ்கியிருந்தது. கிராம மக்களின் தொடர் முயற்சி காரணமாக, தற்போது, மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதற்காக, மின்துறை அதிகாரிகள், மிகவும் சிரமப்பட்டனர். இந்த கிராமத்துக்கு மின்வசதி கிடைத்ததில், அங்குள்ள மக்களை விட, நாங்கள் தான் அதிகம் சந்தோஷப்படுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார். 

வீட்டுமனை கேட்டு குவிந்த மக்கள்


வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகம் திக்குமுக்காடியது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஞ்சாயத்து யூனியனுகுட்பட்ட வேகுபட்டியில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு (சர்வே எண்:234/2) இடத்தில், அதே பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித்தொழில் செய்துவரும், 50 குடும்பத்தினர் குடிசைகள் அமைத்து, ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர். குடியிருப்புகளுக்கு பட்டா இல்லாததால், மின் இணைப்பு உள்ளிட்ட சலுகைகள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

நீர்நிலை புறம்போக்கு என்பதால் பட்டா வழங்க வருவாய்த்துறையினர் மறுத்து வருகின்றனர். நீர்நிலை புறம்போக்கு பகுதி என்பதை, நஞ்சை அல்லது தரிசு என வகைமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே, பட்டா வழங்குவதாக கூறியுள்ளனர்.இதையடுத்து நீர்நிலை புறம்போக்கு இடத்தை வகை மாற்றம் செய்வதற்காக, தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமாறு வேகுபட்டி பஞ்சாயத்து நிர்வாத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட பஞ்சாயத்து நிர்வாகம், தொடர்புடைய நீர்நிலை புறம்போக்கு இடத்தை தரிசு நிலமாக வகைமாற்றம் செய்து ஆணை பிறப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.மாதங்கள் பல கடந்தும் இதுவரை வகைமாற்றம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த வேகுபட்டி கிராம மக்கள், பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுபோன்று புதுக்கோட்டை நகராட்சிகுட்பட்ட சந்தைப் பேட்டையில் குடிசைகள் அமைத்து ஆண்டாண்டு காலமாக குடியிருந்து, துப்புரவுத்தொழில் செய்துவரும் குறவர் மற்றும் அருந்ததியினர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மக்கள், தங்களுடைய குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இவ்வாறு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வேகுபட்டி கிராம மக்கள் மற்றும் புதுக்கோட்டை நகர்ப்பகுதி மக்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து முற்றுகையிட்டதால், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் நேற்று திக்குமுக்காடியது. இவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனோகரன் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிகல் காலி இடங்கள்

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனமாகும்.  மின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் 1987ல் நிறுவப்பட்டது.

இந்த நிறுவனத்தின் குஜராத் கிளையில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகளும் காலி இடங்களும்
என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஸ்டைபண்டரி காலி இடங்கள் டிப்ளமோ ஹோல்டர், பி.எஸ்.சி., ஹோல்டர், பிளாண்ட் ஆபரேட்டர், பிட்டர்  மெஷின்ஸ்ட் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன.  இவற்றில் முதல் பிரிவில் 21 இடங்களும், இரண்டாவது பிரிவில் 21 இடங்களும், பிளாண்ட் ஆபரேட்டர் பிரிவில் 45 இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 49 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்
முதல் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராகவும், மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

டிப்ளமோ ஹோல்டர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது கெமிக்கல் பிரிவில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று வருட டிப்ளமோ படிப்பை தொடர்புடைய துறையில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரண்டாவது பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்.சி., படிப்பை இயற்பியல் அல்லது வேதியியலில் முடித்திருக்க வேண்டும்.  பிளான்ட் ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ப்ளஸ்டூவிற்கு நிகரான படிப்பை முறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும்.

மெஷினிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் அல்லது மெஷினிஸ்ட் பிரிவில் ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.  மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் உயரம் குறைந்த பட்சம் 160 செ.மி.,யும், எடை குறைந்த பட்சம் 45.05 கிலோவும் இருக்க வேண்டும்.

பிற தகவல்கள்
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 31.07.2013க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 31.07.2013

இணையதள முகவரி: www.npcil.nic.in/main/JobsRecent.aspx

கர்ப்பிணிகளுக்கு இலவச மருத்துவ வசதி: மத்திய அரசு திட்டம்

"கர்ப்பிணி பெண்களுக்கு, இலவச மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி ஆகியவற்றை மத்திய அரசு வழங்கும்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

ஜெய்ப்பூரில், நிருபர்களுக்கு பேட்டியளித்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் கூறியதாவது: ஜனனி சுரக்ஷா திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு, பிரசவத்தின் போது, இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு பின் தாய் மற்றும் சேய் நலனை பேணி காக்க, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

 பிறந்த பச்சிளம் குழந்தைக்கு, ஓராண்டு காலத்திற்கு தேவையான இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படும். 16 வயது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, ரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். புதிதாக நியமிக்கப்படும் டாக்டர்கள், கிராமப்புறங்களில் பணியாற்ற மறுக்கின்றனர். இதை தடுக்க, எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான களப்பயிற்சியை, கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் வகையில், நடைமுறை கொண்டு வரப்படும். தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் நியமிக்கப்படும் டாக்டர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கூடுதல் சம்பளம், சலுகையாக வழங்கப்படும். இவ்வாறு, குலாம் நபி ஆசாத் கூறினார்.

திங்கள், 15 ஜூலை, 2013

அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவருக்கு பல்வேறு உதவிகள்

  "அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிக்கும், பி.சி., எம்.பி.சி., சீர்மரபின மாணவ, மாணவியருக்கு, அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது' என, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்படி படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.


எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படும் உதவித்தொகையை பெற, முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர்களின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்குள் இருக்க வேண்டும். உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்களை மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் வழங்க வேண்டும்.
மேலும் விபரம் அறிய, தஞ்சை கலெக்டர் அலுவலகத்திலுள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.

மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு அடுத்த ஆண்டுக்குள் நேரடி விமான சேவை

"மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை அடுத்த ஆண்டுக்குள் துவக்கப்படும்,''என, மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டையில் அவர் கூறுகையில்,"" மதுரை ஏர்போர்ட்டை விரிவுபடுத்தி, 12 ஆயிரம் அடிக்கு புதிய "ரன் வே' அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு தேவைப்படும் 615 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு கையகப்படுத்தி கொடுத்தால், உடனடியாக "ரன் வே' அமைக்கும் பணி துவக்கப்படும். இதற்காக, ஏர்போர்ட் அருகே உள்ள மதுரை- அருப்புக்கோட்டை ரோட்டிற்கு, மாற்று வழி அமைக்க வேண்டும்.


 மதுரை - சிங்கப்பூர், துபாய் நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை துவங்க, ஏர் இந்தியா நிறுவனத்துடன் பேசப்பட்டுள்ளது. பைலட் உட்பட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், அடுத்த ஆண்டிற்குள் இந்த விமான சேவை துவக்கப்படும்,'' என்றார்.

ஞாயிறு, 14 ஜூலை, 2013

இன்று இரவு 12 மணியோடு தந்தி சேவை வரலாறாகிறது

நூற்றி அறுபது ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்த தந்தி சேவை, இன்று இரவு, 12:00 மணியோடு நிறைவு பெறுகிறது.

இந்தியாவில், மிகப் பழமையான சேவைகளில் ஒன்று, தந்தி சேவை. 1850ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான தந்தி சேவை, கிழக்கு இந்திய கம்பெனியின் பயன்பாட்டுக்கு மட்டும், முதலில் இருந்தது. பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு, 1853ல், தந்தி சேவை அறிமுகமானது. 


1854ல், தந்தி சேவைக்கு தனித் துறை துவங்கப்பட்டது. 1855ல், "இந்திய தந்தி சட்டம்' உருவாக்கப்பட்டது. இணையதளம் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், தந்தியின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்தது. சில அரசுப் பணிகளுக்காக மட்டுமே, தந்தி சேவை புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில், "தந்தி சேவை, ஜூலை, 15ம் தேதியுடன் நிறுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. "மிகப் பழமையான மற்றும் சட்ட அங்கீகாரம் பெற்ற, தந்தி சேவையை நிறுத்தக் கூடாது. மக்களுக்கான சேவையில், லாப நஷ்ட கணக்கு பார்க்காமல், சேவையைத் தொடர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பல தரப்புகளிலிருந்து கோரிக்கை எழுந்தது. 


தமிழகத்தில், ஐகோர்ட்டிலும் வழக்கு பதியப்பட்டு, அது தள்ளுபடியானது. ஆனால், தந்தி சேவையைத் தொடர, மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், திட்டமிட்டபடி, ஜூலை, 15ம் தேதியுடன், தந்தி சேவை நிறைவு பெறுகிறது. பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க, சென்னை மாவட்டச் செயலர், ஸ்ரீதர் சுப்ரமணியன் கூறுகையில், ""இன்று நள்ளிரவு, 12:00 மணியுடன், தந்தி சேவை, முற்றிலும் நிறுத்தப்படும். தந்தி சேவையில் ஈடுபட்ட ஊழியர்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், வேறு பணிகளுக்கு மாற்றப்படுகின்றனர்,'' என்றார்.

பின்தங்கிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் விரைவில் சிறப்பு வகுப்பு

தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் பலர், படிப்பில் ஆர்வமின்மை, குறிப்பிட்ட பாடத்தில் பின்தங்கி இருத்தல் உள்ளிட்ட காரணங்களால், கல்லூரி படிப்பை பாதியில் கைவிடுகின்றனர்.

இம்மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்த உள்ளது. முதல் கட்டமாக, 25 கல்லூரிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக, தலா, ஒரு கல்லூரிக்கு, 1.25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளில், எந்தெந்த பாடத்தில் மாணவர் அதிகம் தோல்வியடைகின்றனர்; எந்தெந்த பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுக்கின்றனர் உள்ளிட்ட விவரம் சேகரிக்கப்படும். இம்மாணவருக்கு, தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சிக்கு, கல்லூரி அளவில், மூத்த பேராசிரியர், பொறுப்பாசிரியராக நியமிக்கப்படுவர். வரும் கல்விஆண்டில், இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. கல்லூரி வகுப்பு முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும், சிறப்பு வகுப்பு நடத்தப்படும்.

இதுகுறித்து, உயர்கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தில், பல்கலை மானிய குழுவின், நிதி உதவியை பெறாத கல்லூரிகள், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின் தங்கியுள்ள கல்லூரிகள் மட்டுமே நிதி பெற தகுதியானவை.

கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள் பலர், பல பாடங்களில்,"அரியர்" வைக்கின்றனர். இதனால், பட்டப் படிப்பை முடித்தும், சான்றிதழ் பெற முடியாமல், வேலைவாய்ப்பிலும் பெரும் பின்னடைவை சந்திக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

சனி, 13 ஜூலை, 2013

முதல் மலாலா விருதை இந்திய மாணவி ரஷியா சுல்தானாவிற்கு வழங்கியது ஐ.நா.


பெண் குழந்தை கல்விக்காக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள முதல் மலாலா விருது இந்தியாவை சேர்ந்த 15 வயது மாணவி ரசியா சுல்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ரசியா சுல்தான் 48 பெண் குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்தற்காக அவர் இந்த விருதை பெறுகிறார். விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசியா சுல்தானின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரஷியா சுல்தான் மீரட்டில் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக 5 வயதாக இருக்கும் போதே வேலைக்கு சென்றார். இவரை அரசு சாரா நிறுவனம் ஒன்று மீட்டு கல்வி வழங்கி வருகிறது.
தற்போது பள்ளியில் படித்து வரும் இவர், அந்நிறுவனத்துடன் இணைந்து கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார்.

முன்னதாக தனது 16வது பிறந்த நாளையோட்டி ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் மலாலா யூசப்சாய் உரையாற்றினார். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா இருந்தால் உலகையே மாற்றிவிடலாம் என மலாலா நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானில் பெண் கல்விக்கு எதிரான தலிபான்கள் நடத்திய தாக்குதலை சந்தித்த மலாலாவை பெருமைப்படுத்தும் விதமாக ஜூலை 12ந் தேதியை மலாலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. வரும் காலங்களில் மலாலாவின் அனைத்து சமுதாய கல்வி பணிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடன்குளம் முதல் அணுஉலையில் மின்உற்பத்தி துவக்கம்

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் அணுஉலையில் கட்டுமானப்பணிகள் முழுமை பெற்று கடந்த 2011ல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்ப அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் அணுசக்திக்கழகம் அனுமதி கோரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுஉலை எதிர்ப்புக்குழுவினர் 2011ல் போராட்டத்தை துவக்கினர்.அணுஉலை எதிர்ப்புக்குழுவினர் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்களால் உலையில் மின்உற்பத்தியை துவக்க மேற்கொள்ளப்படவிருந்த பணிகள் முடங்கின. கூடன்குளம் முதல் அணு உலையில் யுரேனியம் நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பரில் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.

முதல் அணுஉலையில் 75 டன் எடை கொண்ட 163 பண்டல்களில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பும் பணி செப்டம்பர் இறுதியில் துவங்கி அக்டோபர் 3ம் தேதி முடிவடைந்தது.சோதனை ஓட்டம் துவக்கப்படவிருந்த நிலையில் "பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு சார்பில் அணு உலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முறையான ஆய்வு செய்து மக்களின் பீதியை போக்க வேண்டும், அணுஉலை செயல்பட தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை நீதிபதிகள் விசாரித்து, கூடன்குளம் அணு உலையில் 17 அம்ச பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டனர். இதற்கு பின்னர் கடந்த மார்ச்சில் அணுசக்திக்கழக அதிகாரிகள் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தினர். சோதனையோட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையில், கூடன்குளம் அணு மின்நிலையத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அணுஉலையை இயக்குவதற்கு தடை விதிக்க முடியாது என கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கை கடந்த மே 6ம் தேதி சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.பின்னர் முதல் அணுஉலையில் நடந்த சோதனைகளின் போது வால்வுகளில் கசிவு ஏற்பட்டது. இதை இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் சரிசெய்தனர். இதுதொடர்பான ஆய்வுஅறிக்கைகள் அணு சக்திக்கழகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையக்குழுவினரும், விஞ்ஞானிகளும் கூடன்குளம் முதல் அணுஉலையில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கான அறிக்கை ஒழுங்குமுறை ஆணைய உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து முதல் அணுஉலையில் மின்உற்பத்தியை துவக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் பட்டாச்சார்யா 11ம் தேதி அனுமதி வழங்கினார்.

அணுப்பிளவு வினை
இதன்படி, முதல் அணுஉலையில் "கிரிட்டிக்காலிட்டி' எனப்படும் தொடர் அணுப்பிளவு வினையை 11ம் தேதி நள்ளிரவு 11.50 மணிக்கு ரஷ்ய விஞ்ஞானிகள் துவக்கினர். தொடர் அணுப்பிளவு வினை 2 நாட்கள் நடக்கும். தொடர் அணுப்பிளவின் போது ஏற்படும் வெப்பத்தால் அணுக்கலனை சுற்றி இருக்கும் தண்ணீர் நீராவியாக மாற்றப்பட்டு அதன் மூலம் டர்பன் இயக்கப்பட்டு மின்உற்பத்தி துவக்கப்படும்.
ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் தற்போது செய்யப்படும் அணுப்பிளவு வினையின் வேகம் நாளடைவில் அதிகரிக்கப்பட்டு அதிக வெப்ப ஆற்றலை உருவாக்கி அதை மின்ஆற்றலாக மாற்றி மின்உற்பத்தி துவக்கப்படும். படிப்படியாக மின்உற்பத்தி அதிகரிக்கும். சுதந்திரதினம் ஆக.,15க்குள் 300 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் வருகை
அணுசக்திக்கழகம், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், ரஷ்ய விஞ்ஞானிகள் தொடர் அணுப்பிளவு வினையை தீவிரமாக கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஓரிரு நாட்களில் அணுசக்திக்கழகம், ஒழுங்குமுறை ஆணைய உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள் கூடன்குளம் வரவுள்ளனர். பாதுகாப்பான முறையில் மின்உற்பத்தி நடப்பதை இவர்கள் உறுதி செய்த பின் உலைகளில் மின்உற்பத்தி சகஜமாக நடக்க துவங்கும்.

1000 போலீசார்
அணுஉலையில் மின்உற்பத்தியை துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்ப்புக்குழுவால் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க கூடன்குளத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அணுமின்நிலையம் முன்பு 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அணு மின்நிலையத்திற்குள் செல்லும் ஊழியர்கள், அலுவலர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கூடன்குளத்தை சுற்றியுள்ள செக்போஸ்ட்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். டி.ஐ.ஜி., சுமித்சரண், எஸ்.பி., விஜயேந்திர பிதரி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

அமைச்சருக்கு சவால்
அணுஉலை எதிர்ப்புக்குழுவினர் இடிந்தகரையில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். அணுஉலை எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் கூறிய போது, ""அணுஉலையில் மின்உற்பத்தியை துவக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 17 பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 12 அம்சங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்உற்பத்தியை துவக்குவது ஆபத்தை ஏற்படுத்தும்.

அணுமின்நிலைய நிர்வாகம் மின்உற்பத்தியை துவக்குவதாக கூறுவது வெறும் வதந்தி. 45 நாட்களில் ஆயிரம் மெகாவாட் கிடைக்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகிறார். இதுபோல நடந்தால் நாங்கள் நடத்தி வரும் போராட்டத்தை உடனே வாபஸ் பெறுவோம். அப்படி மின் உற்பத்தி இல்லை எனில் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் இருந்து விலக அமைச்சர் தயாரா. மக்களிடம் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்'' என தெரிவித்தார்.

வெள்ளி, 12 ஜூலை, 2013

சுற்றுச்சூழலியல் சிறப்புப் படிப்புகள்

வெகு வேகமாக வளரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றால் இன்று சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை அறிவோம். இயற்கை மற்றும் சமூக அறிவியல்களின் ஒருங்கிணைப்பாக சுற்றுச்சூழலியல் விளங்குகிறது. சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் உயிரியலாளர்கள், சுற்றுச்சூழல் இன்ஜினியர்கள், சுற்றுச்சூழல் மாதிரி வடிவமைப்பாளர்கள், சுற்றுச்சூழல் மீடியாத் துறையினர் என இன்று இத்துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழல் சமநிலை, பயோடைவர்சிடி மற்றும் வேஸ்ட்லேண்ட் மேனேஜ்மென்ட் என்னும் இலக்குகளை நோக்கி இவர்களின் பணி அமைகிறது.

இத்துறையில் ஆய்வுப் படிப்புகளை பல பல்கலைக்கழகங்கள் தருகின்றன. சமீப காலமாக சில கல்வி நிறுவனங்கள் இத் துறையில் பி.எஸ்சி. மற்றும் எம்.எஸ்சி. படிப்புகளைத் தருகின்றன. நல்ல சம்பளத்தையும் சிறப்பான எதிர்காலத்தையும் இத் துறை தருவதால் இப்படிப்புகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெகராடூனில் உள்ள வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, புதுடில்லி யிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி யிலுள்ள ஜமியா ஹம்டார்ட் பல்கலைக்கழகம், பந்த் நகரிலுள்ள ஜி.பி. பந்த் விவசாய பல்கலைக்கழகம் ஆகியவை இத் துறையில் சிறப்புப் படிப்புகளைத் தரும் நிறுவனங்களாகும்.

தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கு அரசாணை : ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்

தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அரசு போக்குவரத்துக் கழக தொ.மு.ச., அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுச் செயலாளர் தர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் சம்பந்தமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் என்பதை ஐந்தாண்டாக மாற்றம் செய்தும், நலிந்த நிலையில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மாற்றி அமைக்கவும் (தனியாருக்கு விற்கவும்) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை உடனடியாக ரத்து செய்யவேண்டும். தொழிலாளர்களின் வேலைக்கும், வாழ்வுக்கும் தமிழக அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும். அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி நேரடியாக போராட்டம் நடத்த தொ.மு.ச., திட்டமிட்டுள்ளது.

கட்டாய கல்வி சட்டம்: சீட் கொடுக்க பள்ளிகள் மறுப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 56,682 இடங்கள் இருந்த போதும், 18,946 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இது, 33.42 சதவீதம் மட்டுமே. தமிழகத்தில் உள்ள 1,012 தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு, இடம் கொடுக்க மறுத்துள்ளன. இந்த பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசு, 2009ல், 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், எட்டாம் வகுப்பு வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்க, சட்டம் கொண்டு வந்தது.

இந்த சட்டத்தின்படி, சிறுபான்மையினர் அல்லாத மற்ற அனைத்து வகை தனியார் பள்ளிகளும், சேர்க்கை நிலை வகுப்பில் (எல்.கே.ஜி., அல்லது ஆறாம் வகுப்பு) உள்ள மொத்த இடங்களில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய, சமுதாயத்தில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். குழந்தைகளுக்கான கல்விச் செலவை, தமிழக அரசிடம் இருந்து, பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த சட்டம், தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, ஆர்.டி.இ., சட்டம் குறித்தும், அதன் பல்வேறு அம்சங்கள் குறித்தும், கல்வித் துறை, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அதிகாரிகள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் உட்பட, பல தரப்பினருக்கும், சட்டத்தை பற்றி விளக்கியதுடன், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய முறைகள் குறித்தும், அதிகாரிகளுக்கு, பல்வேறு கட்டங்களில் கல்வித்துறை விளக்கி கூறியது.

முக்கியமாக, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களை அழைத்து, மாவட்ட வாரியாக கூட்டங்களை போட்டு, அதிகாரிகள் விளக்கி கூறினர். எனினும், கல்வியாண்டு துவக்கத்தில், பெரிய தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ., ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பம் வழங்குவதை, இருட்டடிப்பு செய்தன.

மேலும், இந்த ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, பல பெற்றோர் தயங்கவும் செய்தனர். மற்றொரு பக்கம், பல பெற்றோருக்கு, ஆர்.டி.இ., இட ஒதுக்கீடு குறித்த விவரங்களும் தெரியாத நிலை இருந்தது. இதன் காரணமாக, 3,737 தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, 56,682 இடங்களில், 18,946 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன; இது, 33.42 சதவீதம்.

1,012 தனியார் பள்ளிகள், இடம் கொடுக்க மறுத்துள்ளன. "இந்த பள்ளிகள் மீது, துறை ரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், நடப்பு கல்வியாண்டில், 18,946 மாணவர், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்" என, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், பிச்சை தெரிவித்து உள்ளார்.

நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு, சிறுபான்மையினர் அல்லாத, தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்புகளில், 25 சதவீத இடங்கள் வழங்க, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், வழி வகை செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில், ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவ, மாணவியர் சேர்வதற்கு வசதியாக, தனியார் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கவும், மாணவரை சேர்க்கவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கடந்த மே, 9ம் தேதி வரை, 6,128 மாணவர் சேர்ந்தனர். பொதுவாக, மாணவர் சேர்க்கை, மே, ஜூன் மாதங்களில், அதிகம் நடைபெறும். இதை கருத்தில் கொண்டும், ஆர்.டி.இ., ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை, குறைந்த அளவில் இருந்ததை கருத்தில் கொண்டும், இந்த பிரிவின் கீழ் மாணவர் சேர்வதற்கான காலக்கெடு, ஜூன், 20ம் தேதி வரை, நீட்டிப்பு செய்யப்பட்டது.

மேலும், சில பள்ளி நிர்வாகங்கள், விண்ணப்பங்களை அளிப்பதில், சுணக்கம் காட்டுவதாக, அவ்வப்போது தகவல் பெறப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமே விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்க, பெற்றோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, காலக்கெடு நீட்டிப்பு காரணமாக, கூடுதலாக, 12, 818 மாணவர்கள், ஆர்.டி.இ., இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்தனர். மொத்தத்தில், நடப்பு கல்வி ஆண்டில், 18, 946 மாணவர், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்து, பயனடைந்து உள்ளனர். இவ்வாறு, பிச்சை தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 ஜூலை, 2013

வேலைவாய்ப்பு தரும் ஹியுமானிட்டிஸ் படிப்புகள்

கலை பாடப்பிரிவு என்பது தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், தத்துவவியல் போன்ற பாடங்கள் மட்டுமே என மாணவர்கள் நினைக்கின்றனர்.

இதையும் தாண்டி பேஷன், சுற்றுலா, இன்டீரியர் டிசைன், வெளிநாட்டு மொழிகள், ஆர்க்கியாலஜி, கம்யூனிகேஷன் போன்ற பல படிப்புகள் உள்ளன. இவை ஹியுமானிட்டிஸ் படிப்புகள் என அழைக்கப்படுகிறது. தற்போது இப்படிப்புகள் மீது தற்போது மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது.

பெரும்பாலான மாணவர்கள் பிளஸ் 2 படிப்பை முடித்த பின், இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தேர்வு செய்கின்றனர். இதனால் இத்துறைகளில் அதிகளவில் போட்டி நிலவுகிறது. ஆனால் அதே நேரத்தில் "ஹியுமானிட்டிஸ்" படிப்புகளுக்கு போட்டிகளும் குறைவு; வேலைவாய்ப்பும் அதிகம்.

இப்படிப்புகள் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார இடைவெளிக்கு பாலமாக விளங்குகின்றன. வேகமாக வளரும் டூரிஸம், பேஷன் மற்றும் மீடியா போன்ற படிப்புகள், மனிதவியல் மற்றும் வரலாறு போன்ற பாரம்பரியமிக்க படிப்புகளுடன் ஒப்பிடும் போது முற்றிலும் வேறுபடுகின்றன.

மதம் மற்றும் பண்பாடு தொடர்புடைய படிப்புகள் தற்போது பிரமலமடைந்துள்ளன. பல பெரு நிறுவனங்களில் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்ச், ஜாப்பனிஸ் போன்ற மொழிகளுக்கு, மொழிபெயர்ப்புத் துறையில் வேலை வாய்ப்புகள் இருப்பதால், இந்த மொழிகளைக் கற்பதில் மாணவர்களுக்கு ஆர்வம் பெருகியுள்ளது.

டூரிஸம், மீடியாவுக்கு எப்போதும் கிராக்கி அதிகம். இசை, நாடக, நடனப் பயிற்சி படிப்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய படிப்புகளாக உள்ளது. காலமாற்றத்தில் புதிய படிப்புகளை தேர்வு செய்வதன் மூலம் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.

"ஹியுமானிட்டிஸ்" படிப்புகள் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.

சிறையில் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

ஒரு நபர் சிறையிலோ அல்லது போலீஸ் கஸ்டடியிலோ இருந்தால், அந்த நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்படும் எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்க நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று அடுத்த அதிரடியை காட்டியுள்ளது சுப்ரீம் கோர்ட்.

கடந்த 2004ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்த போது, சிறையில் இருக்கும் நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும்படி, பாட்னா ஐகோர்ட், தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டது. இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், தேர்தல் பணிகள் துவங்கி விட்டதால், போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்து விட்டது. இதையடுத்து, சிறையில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட பாட்னா ஐகோர்ட் தடை விதித்தது. பாட்னா ஐகோர்ட்டின் இந்த உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் அப்போது இடைக்கால தடை விதித்தது. பாட்னா ஐகோர்ட்டின் உத்தரவு சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக, சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பாட்னா ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், ஒரு நபர் ஓட்டளிப்பது என்பது அந்த நபருக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமை. அந்த நபர் குற்ற வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் இருந்தாலோ அல்லது போலீஸ் கஸ்டடியில் இருந்தாலோ அவர், தேர்தலின் போது ஓட்டளிக்க இயலாமல் போகிறது. அவ்வாறு ஓட்டளிக்க இயலாதவர், தேர்தலில் போட்டியிடவும் தகுதியில்லாத நபராகிறார். அத்தகைய நபர்களை சட்டம், தற்காலிகமாக தேர்தல் நடைமுறைகளில் இருந்து நீக்கி விடுகிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், தேர்தலின் போது ஒரு நபர் சிறையிலோ அல்லது போலீஸ் கஸ்டடியில் இருந்தாலோ அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு காரணமாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி, கடந்த ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. மேலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் இந்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளருக்கு அமீரகத்தில் வரவேற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக அமைப்பாளர் பேராசிரியர் .தஸ்ரிப் ஜஹான் அமீரகம் வந்துள்ளார் . அவருக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ,துபாய் முதீனா பார்க்கில் உள்ள கராச்சி தர்பார் கூட்ட அரங்கில் அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி தலைமையில் ,பொதுசெயலாளர் முஹம்மது தாஹா , பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .

துபாய் மண்டல  செயலாளர் முதுவை ஹிதாயத் , கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா , விழாக்குழு செயலாளர் பரகத் அலி , மக்கள் தொடர்பு செயலாளர் ஹமீது யாசீன் ,தேரா பகுதி செயலாளர் சிந்தா , ஈமான் சங்க நிர்வாகி முகைதீன் அப்துல் காதிர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

திங்கள், 8 ஜூலை, 2013

செயலற்ற நிலையில் கடல்சார் பல்கலைக்கழகம்; பரிதாப நிலையில் மாணவர்கள்


தகுதியான, நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற குறைகளை மறைத்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை, ஆண்டுதோறும் கடல்சார் படிப்புகளில் சேர்த்து, கடல்சார் பல்கலை, மோசடி செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல்கலையில் சேரும் மாணவர்களின் கடல்சார் பணி, கனவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், இந்திய கடல்சார் பல்கலை இயங்கி வருகிறது. கடந்த, 2008ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலை, பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, திக்கு முக்காடி வருகிறது. இந்த பல்கலை சார்பில், நாட்டின், பல்வேறு பகுதிகளில், ஏழு கடல்சார் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், சென்னை, கொச்சின், கண்டலா துறைமுகம், கோல்கட்டா, மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய ஆறு இடங்களில், பல்கலை வளாகங்கள் இயங்கி வருகின்றன.

பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்துடன், 38 தனியார் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. தனியார் கல்வி நிறுவனங்கள், அதிக முதலீட்டில், நிறைவான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளன.

ஆனால், கடல்சார் கல்வி நிறுவனங்களுக்கு எல்லாம் வழிகாட்ட வேண்டிய பல்கலையின் நிலைமை, மிக மோசமாக உள்ளது.பல்கலையிலும், அதன் சார்பு நிறுவனங்களிலும், தகுதியான, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளும் மோசமாக உள்ளன. ஆனால், இதை அனைத்தையும் மறைத்து, மாணவர்களை தொடர்ந்து மோசடி செய்து வருவதாக, துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மத்தியில், நடப்பு கல்வி ஆண்டில், பி.டெக்., (மரைன் இன்ஜினியரிங்), பி.எஸ்சி., (நாட்டிகல் சயின்ஸ்) உள்ளிட்ட பல்வேறு இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வை, வரும் 8ம் தேதி முதல், 15ம் தேதி வரை, பல்கலை வளாகத்தில் நடத்துவதற்கு, பல்கலை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த படிப்புகளில் சேர்வதற்காக, கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் தேர்வு பெற்று, 7,800 பேர், கடல்சார் படிப்புகளில் சேர, முன் வந்துள்ளனர்.ஆனால், பல்கலை மற்றும் பல்கலை வளாகங்களில் உள்ள நிறுவனங்களில், 3,200 மாணவர்களைமட்டுமே சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, துறை வல்லுனர்கள் கூறியதாவது: கடல்சார் பல்கலையின், சென்னை மையத்தில், ஆசிரியர்களின் நிலை, படுமோசமாக உள்ளது. கடந்த ஆண்டுகளை விட, ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைந்துவிட்டது. பல்கலைக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, ஆசிரியர்கள், பணி பாதுகாப்பு கருதி, சென்னை ஐகோர்ட்டை அணுகினர்.

இதில், ஆசிரியர்களுக்கு சாதகமாக, ஐகோர்ட் உத்தரவு வந்ததால், எரிச்சல் அடைந்த பல்கலை, 20 ஆசிரியர்களை, சென்னை அல்லாத பிற இடங்களில் உள்ள பல்கலை நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளது. இதனால், ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் சரிந்துவிட்டது. இவ்வாறு, துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.

பெயர் வெளியிட விரும்பாத, பல்கலையின், மூத்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "நிரந்தர ஆசிரியர் நியமனம் தொடர்பாக, பல்கலை நிர்வாகத்திற்கும், கப்பல் துறை அமைச்சகத்திற்கும் இடையே, பெரும் பனிப்போர் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே, முந்தைய துணைவேந்தர் ரகுராம், தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததற்குப் பிறகு, பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், சென்னையில் வேலை செய்ய, யாருக்குமே விருப்பம் இல்லை," என்றார்.

இதற்கு நடுவே, பல்கலையின், "கேம்பஸ்இன்டர்வியூ"வும், மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பல்கலையை விட, தரமான மாணவர்களை, தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்குகின்றன. தனியார் கடல்சார் கல்வி நிறுவனங்களில், நிரந்தர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். உள்கட்டமைப்பு வசதிகளும், முழுமையான அளவில் உள்ளன.இதனால், கடல்சார் துறை வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனங்களின் பார்வை, தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

இதற்கு மாறாக, பல்கலையில் சேரும் மாணவர்கள், படிப்பை முடிப்பதே, சிக்கலாக இருக்கும் நிலை எழுந்துள்ளது. இதனால், அவர்களின் கடல்சார் பணி கனவும், கனவாகவே மாறும் அபாயம் எழுந்துள்ளது.தவிரவும் ஏற்கனவே, டி.என்.எஸ்., கோர்சில் படித்த ஏறக்குறைய 2,000 மாணவர்கள், படிப்பின் ஒரு அங்கமாக, 18 மாத காலம் கப்பலில் வேலை செய்ய இயலாத பரிதாப நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவின் திட்டத்தை தடுக்க உச்சநீதிமன்றம் வரை செல்கிறார் ஜெயலலிதா : கருணாநிதி


 சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றினால் நமது எதிர்கால சந்ததியினருக்கு பலன் தரும் என்ற காரணத்தினால் இந்த திட்டம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., போராடி வருகிறது என தி.மு.க., தலைவர் கருணாநிதி நாகையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூறினார்.

சேதுசமுத்திர திட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க.,தரப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாகப்பட்டினத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்; தமிழகத்தில் இந்த சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் நன்மைகள் ஏராளம் கிடைக்கும். இதன் மூலம் வாணிகம் பெருகும். வெளிநாடுகளில் தமிழக வியாபாரமும், தமிழகத்தில் வெளிநாட்டு வியாபாரமும் நடக்கும்.

ஒரு சிறிய பஞ்சாயத்துக்கு ஒரு திட்டம் வந்தாலே கவுன்சிலர் முதல் தலைவர்கள் என அனைவரும் வரவேற்பர். மகிழ்ச்சி அடைவர். ஆனால் மாநிலத்திற்கு நன்மை தரும் திட்டத்தை வேண்டாம் என்று தமிழக அரசு சொல்வது வேடிக்கையாக உள்ளது. அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள அம்மையார், அண்ணாவின் திட்டத்தை தடுக்க உச்சநீதிமன்றம் வரை செல்கிறார். இதைவிட இது போன்று துரோகத்தை யாராலும் அண்ணாவுக்கு செய்ய முடியாது. ஆனால் அண்ணாவின் பெயரில் கட்சி இருக்கிறது.

மீனவர்களுக்கு நன்மை தராது, மீன் வளம் பாதிக்கும் என தூண்டி விடப்படுகிறது. மீனவர்களுக்கு ஆபத்து இல்லை. செல்வம் கொழிக்கும், வளம் , வாய்ப்புகள் பெருகும். மீன் உற்பத்தி பெருகும். தமிழகம் வளர்ச்சி பெறும்.

சேது சமுத்திர திட்டம் கொண்ட வரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல. இங்கு இருக்கும் கட்சி நிர்வாகிகளின் விருப்பம் அல்ல. அண்ணா விரும்பிய திட்டம். எம்.ஜி.ஆர் விரும்பிய திட்டம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பலன் கிடைக்கப்போவது எனக்கல்ல. எனக்கு 90 வயதாகிறது. வருங்கால சமுதாயம் வாழ வேண்டும் என நான் கனவு காண வேண்டாமா? இது தவறா? ஒரு கிழவன் ஒரு மாங்கொட்டையை மண்ணில் புதைத்து கொண்டிருந்தான். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள ஒருவன் என்னய்யா இது , எப்போது மரமாகி, காயாகி , பலன் தரப்போகுது ? என்று ஏளனமாக கேட்டானாம். இதற்கு இந்த கிழவன் சொன்னான். “ இப்போது நீ உண்ணுகிறாயே இந்த மாம்பழம், உனது தாத்தனும், பூட்டனும் விதைத்தது. இது போல இது இந்த மாங்கொட்டை மரமாகி, பழமாகி எதிர்கால சந்ததியினருக்கு பலன் தரும் இதனால் தான் நான் விதைக்கிறேன் ”என்றார். இது போல நமது எதிர்கால சந்ததியினர் வாழத்தான் சேதுசமுத்திர திட்டம் கொண்டு வரவேண்டும் என்கிறேன்.

எனது வாழ்நாளில் எத்தனையோ சாதித்துள்ளேன். நான் சாதித்து காட்ட வேண்டிய திட்டங்களில் சேது சமுத்திர திட்டமும் ஒன்று . இதற்கு என்னோடு அனைவரும் பாடுபட வேண்டும். பாடுபட வாருங்கள் என அழைக்கின்றேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

வெள்ளி, 5 ஜூலை, 2013

கல்வி முறையில் மாற்றம் வேண்டும் : உச்ச நீதிமன்றம்


"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மகரிஷி மகேஷ் யோகி விஸ்வ வித்யாலயா என்ற கல்வி நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு, நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பி.எஸ்.சவுகானைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்" முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை, முந்தைய நிலையை விட, இப்போது அதிகரித்துள்ளது. கல்வியறிவு குறைவாக இருந்த போது, மனித மாண்பு சிறப்பாக இருந்தது. இப்போது, கல்வியறிவு அதிகரித்து உள்ளது; மனித மாண்பு குறைந்து விட்டது.

இதற்கு காரணம், கல்வி முறையில் உள்ள சிக்கல் தான். கல்வி கற்பதற்கான குறிக்கோள் எட்டப்படவில்லை; எனவே, நாட்டின் கல்வி முறையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பாளையில் கருத்தாளர்களுக்கான கருத்தரங்கம் நேற்று ஆரம்பமானது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒவ்வொரு பாட வாரியாக பயிற்சிகள் நடத்தப்படுகிறது.


இந்த பயிற்சிக்கான முதன்மை கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆரம்பமானது. முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரி பாய் தலைமை வகித்தார்.

ஆர்.எம்.எஸ்.ஏ உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வரவேற்றார். முனைஞ்சிபட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கவின் துவக்கி வைத்தார். ஆர்.எம்.எஸ்.ஏ ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகராஜன், செல்வராஜன் பயிற்சி குறித்து விளக்கமளித்தனர்.


நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள் தொகுத்து வழங்கினார். கருத்தாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
இப்பயிற்சி இன்றும் (5ம் தேதி) தொடர்ந்து நடக்கிறது. இப்பயிற்சி பெறும் கருத்தாளர்கள் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை 9 மற்றும் 10ம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்றனர்.

வியாழன், 4 ஜூலை, 2013

தமிழ்நாட்டில் பால்வள தொழில் நுட்பம் (DAIRY TECHNOLOGY ) பிரிவில் படிப்புகளைத் தரும் கல்லூரிகள்

அண்ணாமலை பல்கலைக்கழகம்,

சி.எம்.சி., வேலூர்,

எம்.எஸ்.சுவாமிநாதன் ரிசர்ச் பவுண்டேசன், சென்னை,

மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை,

என்.டி.டி.பி., ஈரோடு,

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்,

விவசாய கல்லூரி மற்றும் ஆய்வு மையம், கோயம்புத்தூர்,

தமிழ்நாடு கால்நடை அறிவியல் கல்லூரி, சென்னை,

கால்நடை கல்லூரி மற்றும் ஆய்வு மையம், நாமக்கல்,

சென்னை கால்நடை கல்லூரி, சென்னை,

இன்ஸ்டிடியூட் ஆப் அனிமல் நியூட்ரிசன், காட்டுப்பாக்கம்,

 பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம், ஈரோடு,

விவசாயிகள் பயிற்சி மையம், காட்டாங்குளத்தூர்

ஆகியவற்றில் பால்வளம் தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன

24 அமைப்புகளின் கூட்டமைப்பு எனும் பெயரில் நடக்கும் அத்துமீறல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் --- எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி .


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! விரைந்து ஓடுகிற ஓட்டத்தில் சில பேர் சில துண்டுச் சீட்டுகளை வீசிவிட்டு ஓடிவிடுவார்கள். அவர்கள் போய்ச் சேர வேண்டிய இடங்களுக்கும் போய்சேர்ந்துவிடுவார்கள். ஆனால், துண்டுச் சீட்டுகளின் சேட்டை கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கிவிடும். அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் புயலாய் உருவெடுத்து பூசல்களை உருவாக்கி சலனமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிற சமூகத்தையே அலைக்கழித்துவிடுகிற நிகழ்வுகளும் நடந்துவிடும். யார் காரணம்? என்று அறிந்து அவர்களிடம் போய்க் கேட்டால் ‘‘நாங்கள் ஓடுகிற ஓட்டத்தில் எந்தச் சீட்டை எறிந்தோம் எனத் தெரியவில்லை; யார் அவைகளை எடுத்துப் படிக்கச் சொன்னது?’’ என்று கேட்பார்கள்.

பிறைநெஞ்சே! அதைப் போலத்தான் நம் சமுதாயத்தில் எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைப்புச் செய்கிறோம் எனக் கூறிக் கொண்டு ‘இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு’’ என்ற பெயரில் இயங்குவதாகச் சொல்லி, ஓடுகிற ஓட்டத்தில் சம்பந்தமில்லாமல் நம் இயக்கப் பெயரை நமது தலைமையின் அனுமதியின்றியே பயன்படுத்தி துண்டுச் சீட்டுகளைப் பரப்பிவிட்டு அண்மையில் கோவை நகரில் ஒரு பூசலை உருவாக்கியிருக்கிறார்கள். கூட்டமைப்பின் பொதுக் கூட்ட பிரசுரத்தில் ஒரு தனிநபரின் பெயரை ‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’’ என அடையாளப்படுத்தியுள்ளதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்களாக கோவை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் தலைமைக்குத் தகவல் தந்தார்கள்.

நானும் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்களும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் அப்போலோ ஏ.கே. முஹம்மது ஹனீபா அவர்களிடம் விளக்கமாய் பேசினோம்; தனக்கு தெரிவிக்காமலேயே நோட்டீஸ் போடப்பட்டதாகவும் உடனே தலையிட்டு நோட்டீஸ் விநியோகத்தைத் தடுத்து நிறுத்திவிடுவதாகவும், முடிந்தால் இப்போதே வேறு நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்வதாகவும் சொல்லி எங்களை அமைதிப்படுத்தினார். இது முதல் தடவையும் அல்ல. ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இதுபோன்று வேண்டுமென்றே நமது இயக்கத்தின் பெயரை வம்புக்கு இழுத்து, பிறகு வருத்தம் தெரிவித்து இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. மீண்டும் அதே விளையாட்டை கோவை நிகழ்ச்சியிலும் ஏன் காட்டியிருக்கிறார்கள்? என்றுதான் புரியவில்லை. நாங்கள் இருவரும் விளக்கமாய் பேசிய பிறகும், அடுத்து மூன்று நாட்களுக்குப் பிறகு நிகழ்வுற்ற அந்த நிகழ்ச்சியில் இவரே தலைமை தாங்கி, அந்த தனிநபரின் பெயரைச் சொல்லி உரையாற்ற அழைக்கிறபோது ‘‘தேசிய பொதுச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’’ என்றே அழைத்திருக்கிறார் என்றால் ‘ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் சமுதாயத்தில் குழப்பம் செய்யத் தொடங்கிவிட்டார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நாம் எதிலும் தெளிவாக இருக்க விரும்புகிறோம். இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பில் நாம் இல்லை. அதனால் அதற்கு நாம் எதிர்ப்பும் இல்லை. இக்கூட்டமைப்பில் 22 அமைப்புகள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் இத்தனை அமைப்புகள் இருக்கின்றன என்று சொன்னால் அதனால் பெருமை என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம் சமுதாயத்தில் 60 அமைப்புகள், இயக்கங்கள் இருக்கின்றனவா? என்று இப்போது ஏளனம் பேசுபவர்கள் அதிகமாகிவிட்டனர் இதுதான் நிதர்சனமான உண்மை.

முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதில் யாரையும்விட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறைந்ததல்ல. ஆனால், சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பில் நாம் இணைந்திருக்க முடியாததற்கு முக்கிய காரணங்கள் உண்டு. 1. முஸ்லிம் சமுதாயத்தில் மஹல்லா ஜமாஅத் எனும் பாரம்பரிய கட்டமைப்பு எல்லா ஊர்களிலும் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அதனைச் சிதைப்பதற்கோ, பிளவுபடுத்துவதற்கோ, தனி திருமண பதிவு (தப்தர்), தனி கப்ருஸ்தான் என தனித்தனியாக உருவாக்கிக்கொண்டு போட்டி ஜமாஅத் முறையை உண்டாக்குவதற்கோ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு காலத்திலும் உடன்படாது. மஹல்லா ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்டு, ஒற்றுமையைப் பேணி வாழ்கிற வாழ்க்கைதான் இஸ்லாம் காட்டுகிற வாழ்வுமுறை. இவ்வாழ்வு முறைக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய எந்தச் செயலையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் ஏற்காது. 2. மார்க்க விஷயங்களில் மார்க்க அறிஞர் பெருமக்களான சங்கைமிகு உலமாக்களை மதித்து அவர்களின் வழிகாட்டுதலை, மார்க்கச் சட்ட விளக்கங்களை ஏற்றுச் செயல்பட வேண்டும். அவரவர்களின் சிற்றறிவுக்கேற்ப புதுப்புது எதிர்ப்புகளையும், நவீன ஆய்வுகளையும் தெரிவித்துக் கொண்டு குழப்பங்கள் உருவாக்குவதை நாம் அனுமதிக்கவியலாது.

மேற்குறிப்பிட்ட இரண்டு நிலைபாடுகளிலும் நம்மைப் போன்று தெளிவாகவும், உறுதியாகவும் இருந்துவிட்டால் நமக்கு கருத்து வேறுபாடு இல்லை. கூட்டமைப்பில் அத்தகைய உறுதிப்பாடு ஒட்டுமொத்தமாக இல்லாததால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அந்த கூட்டமைப்பில் இல்லை என்கிறோம். தனிப்பட்ட முறையில் நாம் யாருக்கும் எதிரியுமல்ல; பகையுமல்ல. நம்முடைய இந்த நிலைபாட்டை தெளிவாக்கிய பிறகும், சென்ற மாதம் இதே போன்ற ஒரு நிகழ்ச்சியில் முஸ்லிம் லீகின் பெயரை வேண்டுமென்றே பயன்படுத்தி, நம்முடைய அதிருப்தியைக் காட்டிய பின் ‘‘இனிமேல் அப்படி நடவாமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று சொல்லப்பட்டது. இப்போது கோவையிலும் அதே போன்று வேண்டுமென்றே பயன்படுத்தியது குழப்பம் செய்வதற்கான பிடிவாதத்தையே காட்டுகிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் தொலைபேசி மூலம் மிகவும் கண்டிப்புடன் பேசிய பிறகும், அவரும் திருத்திக் கொள்வதாக உறுதியளித்த பிறகும் அவரே மேடையில் தலைமையேற்று நடத்திய நிகழ்ச்சியில் ‘‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர்’’ என்று குறிப்பிட்டு ஒரு தனிநபரை பேசுவதற்கு அழைத்து அங்குள்ள நம்முடைய மாவட்ட நிர்வாகிகளை மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறார். இப்படி வேண்டுமென்றே குழப்பத்தை உருவாக்குகிற இந்த நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கூட்ட மேடையை முற்றுகையிடப் போவதாக நம்மிடம் அனுமதி கேட்ட மாவட்ட நிர்வாகிகளை நாம் அமைதிப்படுத்தியிருக்கிறோம். ‘‘முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு’’ என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தில் குழப்பத்தை உருவாக்குவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

ஒரு அரசியல் இயக்கத்தை அனுமதித்து அங்கீகரிப்பதும், அதனை முறைப்படி அறிவிப்பதும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உரித்தான உரிமை. அதன்படி ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ இயக்கத்தைப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஏற்று, கேரள மாநிலத்தில் 5 அமைச்சர்களையும், 2 எம்.பி.க்களையும், 20 சட்டமன்ற உறுப்பினர்களையும் மத்திய அரசின் அமைச்சரவையில் ஒருவர் இடம் பெற்றிருப்பதையும் கருத்தில் கொண்டு அரசியல் அங்கீகாரம் வழங்கி தனிச் சின்னமாக ‘‘ஏணி’’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பையும் புறந்தள்ளி எந்த தனிநபரோ, எந்த அமைப்போ அத்துமீறுமானால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய்விடும் என்பதை மட்டும் இப்போது சொல்லி வைக்க விரும்புகிறோம். அரசியல் பணிகளில் தூய்மை, வாய்மை, நேர்மை எனும் நேர் கோட்டுப் பாதையினை வகுத்தளித்து, சமுதாயப் பணிகளில் உண்மை, பணிவு, துணிவு போன்ற அருங்குணங்களையே தனதாக்கிக்கொண்டு வாழ்ந்து மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் நமக்குக் கற்றுத்தந்த பாடங்கள்தான் இன்று முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையிலும் மிளிர்கின்றன, இப்போதும் தொடர்கின்றன; இதனை எவரும் மறுத்திட முடியாது. அனைவரையும் அரவணைத்துக் கொண்டு அன்பு பாராட்டி, நேசக்கரம் நீட்டி, பாச உணர்வுகளைப் பகிர்ந்து வல்ல இறைவனுக்கு மட்டுமே அஞ்சியவர்களாக, அவனிடமே உதவி கோரியவர்களாக நாம் நமது பயணத்தைத் தொடர்கிறோம். இப்படித் தொடர்கிற நமது பயணத்தை எவரும் கோழைகளின் பயணம் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். பயணத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டியதாகிவிடுகிறதா? அவைகளை எப்படி எதிர்கொண்டு சந்திப்பது என்பதையும் அறிந்தே இருக்கிறோம். இருந்தபோதிலும், நிதானமும், நியாய உணர்வும், அடக்கமும், அமைதியும் நம்மை முன்னெடுத்துச் செல்கின்றன. அதனாலேயே சீண்டாதீர்கள் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைப்பது நல்லது என எண்ணி நமது வழியில் பயணத்தைத் தொடர்வோம். இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்,
எம். அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்,பிறைமேடை