விஞ்ஞான உதவியுடன் குற்றச் செயல்களை ஆராய்கிறது தடய அறிவியல். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை லேப்களில் ஆராய்ந்து, கோர்ட்டில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். ரத்தம், எச்சில், ரோமம், டயர்கள் மற்றும் ஷூக்களின் அச்சு, கைரேகை, காலடி தடங்களை சேகரிப்பது குறித்து தடய அறிவியலில் கற்றுத்தருகின்றனர். இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வது பற்றியும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களை சேகரித்து காவல்துறைக்கு தடயவியல் வல்லுனர்கள் உதவுகின்றனர். கோர்ட்டில் எழுப்பப்படும் பல்வேறுவகையான சட்டரீதியான கேள்விகளுக்கு தடயவியல் பதில் தருகிறது. இதற்கு மாணவர்கள் தங்களது அறிவியல் அறிவை குற்ற விசாரணைகளில் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். மெடிக்கல், லேப், பீல்ட் சயின்ஸ் என மூன்று வகையில் தடயவியல் பணியை பிரிக்கலாம்.
காவல்துறை, சட்டஅமலாக்க துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. பாரன்சிக் ஆந்த்ரபாலஜி, பாரன்சிக் ஆர்கியாலஜி, பாரன்சிக் செராலஜி போன்ற பிரிவுகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதை முக்கிய பாடமாக படிக்கலாம். இதன் மூலம் தாங்கள் தேர்வு செய்த துறையில் வேலை வாய்ப்பை பெறலாம்.
30ஏ - காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை என்னும் முகவரியிலுள்ள தடயவியல் துறையிலும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் இத் துறையில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம்.மேலும் ,இந்தியாவில் கீழ்கண்ட கல்விநிலையங்களிலும் படிக்கலாம் ,
Amity University - Noida, Uttar Pradesh
Sam Higginbotom Institute of Agriculture - Allahabad, Uttar Pradesh
Osmania University - Hyderabad, Andhra Pradesh
Dr. Hari Singh Gaur University - Sagar, Madhya Pradesh
Kurukshetra University - Kurukshetra, Haryana
Bundelkhand University - Jhansi, Uttar Pradesh
University Of Saugar - Sagar, Madhya Pradesh
Government Institute of Forensic Science, Aurangabad (Maharashtra)
Institute of Forensic Science, Mumbai (Maharashtra)
Jain University, Bangalore (Karnataka)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக