Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 6 மே, 2013

கடல்சார் பல்கலையில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர விண்ணப்பிக்கலாம்


இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில், பி.டெக்., லேட்ரல் என்ட்ரி முறையில் பொறியியல் படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிப்ளமோ படிப்பில் மரைன், மெக்கானிக்கல், நாவல் ஆர்க்கிடெக்சர் எலக்ட்ரிக்கல் ஆகிய படிப்புகளை எடுத்து படித்தவர்கள் பி.டெக்., லேட்ரல் என்ட்ரி முறையில் இரண்டாமாண்டில் சேரலாம்.

விண்ணப்பிப்பவர் பிளஸ் 2வில் (இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம்) உள்ளிட்ட பாடப்பிரிவுகளை எடுத்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.imu.ed.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக