Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 1 ஏப்ரல், 2013

புற்று நோய் மருந்து ஏழைகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கும்


சுவிஸ் நாட்டின் நோவர்ட்டிஸ் நிறுவனம் இந்தியாவில் கேன்சர் நோய் குணப்படுத்தும் மருந்துக்கு காப்புரிமை கேட்டு தொடரப்பட்ட அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதுடன், தயாரிப்பு நிறுவனங்களும் அதிகமாகும் .

கேன்சர் நோய் குணப்படுத்தும் மருந்து தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக சுவிஸ் நாட்டின் நோவர்ட்டிஸ் திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் கேன்சர் நோய் மருந்து விற்பனைக்கு தனக்கென காப்புரிமை தர வேண்டும் என சென்னையில் செயல்படும் இன்ட்லக்சுவல் புராப்பர்ட்டி அப்பலட் ( ஐ.பி.ஏ.பி) யில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்த நிறுவனம் அப்பீல் செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 6 ஆண்டு காலமாக நடந்தது. தலைமை நீதிபதி அல்டாப் ஆலம் தலைமையில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் நோவர்ட்டிஸ் நிறுவனம் தனது ஆய்வு குறித்த விவரங்களை முழுமையாக கோர்ட்டில் தெரிவிக்கவில்லை என்றும், இந்த மருந்து ஒரு மாதத்திற்கான செலவு 1, 2 லட்சம் குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் வேதியியல் மருந்து பொது தயாரிப்பில் காப்புரிமை வழங்கப்பட்டால் ஏனைய நிறுவனங்கள் பாதிக்கும் என்றும் ,மேலும் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்காமல் போய்விடுவதை கோர்ட் ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தி மனுவை தள்ளுபடி செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக