Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 1 ஏப்ரல், 2013

முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (02/04/2013) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 21 நகரங்களில் பேரணி; 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் அணி திரள்கின்றனர்


கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி யும், தமிழ் நாட்டில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரியும், பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டியும், நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரியும் வரும் ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய் கிழமை தமிழகத் தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறு கின்றன. ஒரே நாளில் நடைபெறும் இந்நிகழ்ச்சி களில் தமிழகம் முழுவதும் லட்சத்திற்கு மேற்பட்டோர் அணி திரள்கின்றனர்.

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி முப்பெரும் கோரிக்கை பேரணிகள் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல்லில் நடை பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏப் 2ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங் கள் ஒரே நாளில் நடை பெறுகின்றன. பேரணி நடைபெறும் ஊர்கள்

திருவள்ளுர், திருவண்ணா மலை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பூர், கடலூர், நாகப்பட்டி னம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி,மதுரை, விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, கன் னியாகுமரி ஆகிய மாவட்டங் களில் பேரணி நடைபெறுகின் றன. பேரணி முடிவில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெறுகின்றன.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள்:
பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊர்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெறு கின்றன. சென்னை, திருநெல்வேலி, கோவை, காஞ்சிபுரம், தருமபுரி, நாமக்கல்,ஈரோடு, புதுக் கோட்டை, அரியலூர், விருது நகர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

சென்னையில் தலைவர் பேராசிரியர் தலைமை:
சென்னையில் 2ம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வடசென்னை மாவட்ட தலைவர் எம். ஜெய்னுல் ஆப்தீன், செயலாளர் ஏ.எச்.எம். இஸ்மாயில், பொருளாளர் கேப்டன் பஷீர் அஹமது, தென்சென்னை மாவட்ட தலைவர் பூவை எம்.எஸ். முஸ்தபா, செயலாளர் ஏ. ஹைதர் அலிகான், பொருளாளர் மடுவை பீர் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற் பாடுகளை மிகச் சிறப்பான செய்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் மாநில பொதுச்செயலாளர்:
தூத்துக்குடியில் பழைய துறைமுகம் முன்பிலிருந்து பிரமாண்டமான பேரணி புறப் படுகிறது இப்பேரணிக்கு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தலைமை ஏற்கிறார்.

கோவையில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.:
கோவையில் மாநகர காவல் துறை ஆணையர் அலுவகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான்எம்.பி., தலைமை ஏற்கிறார்.

இராமநாதபுரத்தில் மாநில பொருளாளர் :
இராமநாதபுரத்தில் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது.

இதே போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் மாநில நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறு கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக