Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

மூணாறில் தமிழ் வழி கல்வி மாணவர்கள் புறக்கணிப்பு?


 கேரள மாநிலம் மூணாறில், தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சில பள்ளிகளில் வகுப்பறையின் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் கடுங்குளிரை சமாளிக்க முடியாமல், மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பழைய மூணாறில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மேல்நிலை பள்ளியில்,1200க்கும் அதிகமான மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் பலர் மூணாறைச் சுற்றி உள்ள, தமிழக வம்சாவழி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள்.

பழமையான இப்பள்ளியில், அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீருக்காக, மாசுபட்ட முதிரைபுழை ஆற்று நீரை மாணவ, மாணவிகள் பயன்படுத்துகின்றனர். திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை உள்ளது.

பல வகுப்பறைகளில் டெஸ்க்குகள், பெஞ்சுகள் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. தமிழ் வழி கல்வி பயிலும், 5ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.

இப்பகுதியில், கடந்த சில நாட்களாக வெப்பம் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ்சாக குறைந்துள்ளது. இதனால், பகலிலும் குளிர் விலகாத நிலையில், வகுப்பறையின் சிமென்ட் தரையில், குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. அந்த குளிர்ந்த தரையில் அமர்ந்து படிக்க முடியாமல், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

சமீபத்தில், பள்ளிக்கு 80 டெஸ்க்குகள் மற்றும் பெஞ்சுகள் வழங்கப்பட்ட போதிலும், 5 ம் வகுப்பு அறை மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ,மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக