Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

உதவி கல்வி அலுவலரை கண்டித்து கடையநல்லூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர் சரக கூடுதல் உதவி கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத போக்கை கண்டித்து நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பெண் ஆசிரியர்களை கண்ணியக்குறைவாக நடத்துவது மட்டுமின்றி மெமோ கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும், பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர், ஆசிரியர்களிடையே ஒற்றுமையை சீர்குலைத்து வருவதாகவும், புத்தாண்டு, பொங்கல் போன்ற நாட்களில் 10 முதல் 20 டைரிகளை கேட்டு கட்டாயமாக வாங்குவதாகவும் தொடர்ந்து ஆசிரியர்கள் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக தெரிவித்து கடையநல்லூர் சரக கூடுதல் உதவி கல்வி அலுவலரை கண்டித்து நேற்று கடையநல்லூரில் அனைத்து ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நகர செயலாளர் முத்துசாமி, தமிழக ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் பால்துரை, தமிழ்நாடு தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வட்டார செயலாளர் மருதுபாண்டியன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் மணிமாறன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ், வாசு., ஈஸ்வரன், தென்காசி சரவணன் மற்றும் ஆசிரியர்கள் சார்லஸ், மோதிலால் உட்பட பலர் பேசினர்.கடையநல்லூர் சரக கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்பாட்டத்தில் கடையநல்லூர் சரகம் மற்றும் தென்காசி, வாசுதேவநல்லூர், செங்கோட்டை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக