Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 9 பிப்ரவரி, 2013

அல்லாஹு அக்பர் ! அல்லாஹு அக்பர் ! டாக்டர் ,அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது .


அப்சல்குரு, காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்த இவர் ஐஏஎஸ் தேர்விற்காக தன்னை தயார் செய்து வந்தார். பின்னர் ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கம் கட்சியில் சேர்ந்தார் .

2001ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் டில்லி கோர்ட் அப்சல்குருவிற்கு 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது. பின் 2003ல் டில்லி ஐகோர்ட்டும் இதனை உறுதி செய்தது. இறுதியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த அப்சல்குருவின் மனுவை 2005ம் தள்ளுபடி செய்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் 2006ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில் அப்சல்குருவின் மனைவி தனது கணவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தார். 2006 முதல் நிலுவையில் இருந்த கருணை மனுவை இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.


இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் மும்பை குண்டு வெடிப்பை நிறைவேற்றிய கசாபிற்கு  அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எங்கள் இதயசுத்தியோடு வரவேற்கின்றோம் .

இந்திய பாராளுமன்றத்தை தாக்கிய வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்ட டாக்டர்.அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டதை ,இந்திய உச்சநீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு வரவேற்கின்றோம் .

அதே நேரத்தில் ,இந்திய அரசியல் சாசன சட்டம் அனைவருக்கும் சமமே என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இருக்கின்றோம் . நவீன யுக இந்தியாவிற்கு அடித்தளமிட்டு சென்ற ராஜீவ் காந்தி அவர்களின் கொலைக்கு காரணமானவர்களுக்கு இதுவரை தூக்கு தண்டனை வழங்கப்படாதது ஏன் ?அதனை எப்போது நிறைவேற்றுவீர்கள் ?

உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் ,இந்தியா ஜனநாயக நாடா ? அல்லது ராணுவ ஆட்சி நடக்கும் நாடா ? என்று கேள்விக்கணையை தொடுக்கும் வகையில் ,வயிற்றில் இருந்த சிசுவை கூட விட்டுவைக்காமல் 3000 கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்து ,குஜராத்திலே உலக அதி பயங்கரவாதத்தை அரங்கேற்றிய குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை வழங்கும் இந்த நாட்டு நீதிமன்றம் ?

உலகமே ,அதிசயித்து பார்க்கும் வகையில் ,இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தையும் ,உச்ச நீதிமன்றத்தையும் மதிக்காமல் அயோத்தியில் பாப்ரி மஸ்ஜிதை இடித்து தரை மட்டமாக்கிவிட்டு ,நாடு முழுவதும் சிறுபான்மை இஸ்லாமிய சமுதாய மக்களை ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டது மட்டுமின்றி ,அவர்களை தனிமை படுத்த முயற்சித்த காவி பயங்கரவாதிகளுக்கு என்று வழங்கப்படும் தண்டனை ?

குற்றாவளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் , அதில் பாகுபாடு காட்டக் கூடாது . இன்னும் ,நம்புகிறோம் ,பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளையும் ,பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளையும் , குஜராத்  இனப்படுகொலை குற்றவாளிகளையும் ,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு குற்றவாளிகளையும் மிக விரைவில் தண்டித்து ,இந்தியாவின் இறையாண்மையை இந்திய பாராளுமன்றமும் ,உச்ச நீதிமன்றமும் காப்பாற்றும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக