மதுரை காமராஜ் பல்கலையில் கிளார்க்குகள் உட்பட 211 பணியிடங்கள் நியமனம் செய்வதில், உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று, பல்கலையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
துணைவேந்தர் கல்யாணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பல்கலையில் பல்வேறு கட்டடப் பணிகளை மேற்கொள்ளவும், தேவையான புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து திட்டமிடல் பணிகளுக்கு "கட்டட கமிட்டி" நியமிக்கப்பட்டது.
பல்கலையில் 176 கிளார்க்குகள் உட்பட 211 பணியிடங்களை நிரப்புவதில், உரிய இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். இதில், 51 பணியிடங்கள் "பேக்லாக்" (பின்னடைவு காலியிடங்கள்) அடிப்படையில் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக