Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 13 நவம்பர், 2012

வெறிச்சோடி கிடக்கும் சென்னை


தீபாவளி பயணத்திற்காக, ஒரே நேரத்தில் பயணிகள் புறப்பட்டதால், கடந்த இரு நாட்களாக ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் ஏற்பட்ட நெரிசல், சென்னையில் நேற்று குறைந்தது.

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட பயணிகளால், பஸ், ரயில்களில், கடந்த இரு நாட்களாக கூட்டம் அலைமோதியது. சிறப்பு ரயில்கள், சிறப்பு பஸ்கள் மூலம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆம்னி பஸ்களிலும், ஏராளமான பயணிகள் பயணித்தனர்."கூவி கூவி' அழைப்புநேற்று முன்தினம் இரவு, சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட்ட நீலகிரி மற்றும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில், கூட்டம் குறைவாகவே இருந்தது. எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

ஆனால், சென்னை எழும்பூரில் இருந்து, நேற்று காலை இயக்கப்பட்ட, குருவாயூர் கூடல் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மதியம் இயக்கப்பட்ட வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், கூட்டம்
குறைவாக இருந்தது.சென்ட்ரலிலிருந்து,நேற்று காலை இயக்கப்பட்ட, கோவை எக்ஸ்பிரஸ்,கோவை துரந்தோ எக்ஸ்பிரஸ், மதியம் இயக்கப்பட்ட, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இதே நிலை நீடித்தது.
கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து, தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்து கழக பஸ்களிலும்,நேற்று முன் தினம் இரவு, 11:00 மணிக்கு பிறகு, கூட்டம் குறைவாகவே இருந்தது. நேற்று காலை, 12:00 மணி வரை கூட்டம் இருந்தது. அதன் பிறகு, கண்டக்டர்கள், "கூவி கூவி' பயணிகளை அழைத்து சென்றனர்.

தலைகீழ் மாற்றம்பயணிகள் கூட்டம் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தீபாவளிக்காக முக்கிய நகரங்கள் இடையே, 22 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. பெரும்பாலான பயணிகள், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால், பெரும் நெரிசல் ஏற்படவில்லை.
இத்துடன், போதுமான ரயில்களும், பஸ்களும் இயக்கப்பட்டதால், பயணிகள் நெருக்கடி, நேற்று முன்தினம் இரவுடன் முடிந்தது. நேற்று பகலில் இயக்கப்பட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே
இருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.சென்னை, புறநகர் மின்சார ரயில்களிலும் வழக்கமான நாட்களை விட, நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால், அனைத்து ரயில் நிலையங்களிலும், பயணிகள் இருக்கையில் அமர்ந்து, பயணம் செல்லும் நிலை இருந்தது.வழக்கத்தை விட, நேற்று, தலைகீழாக மாறிய நிலைமையால், முக்கிய சாலைகள் கூட வெறிச்சோடி கிடந்தன. வாகனங்கள் குறைந்த அளவிலேயே சென்றன. ஜவுளிக்கடைகளில், வழக்கமான அளவிலேயே மக்கள் வந்து சென்றனர். சந்தைகளிலும் பெரிதாக கூட்டம் இல்லை. தீவுத்திடலில் அமைக்கப்பட்ட பட்டாசுக் கடைகளில் மட்டும், ஓரளவு கூட்டம் இருந்தது.சென்னையில் வசிப்போர் பெரும்பாலும், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். இவர்கள் தேவையான பொருட்களை ஏற்கனவே வாங்கி விட்டு, தீபாவளியை சொந்த ஊரில், உறவுகளுடன் கொண்டாட சென்று விட்டனர்.சென்னை வாசிகளும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், பொருட்களை வாங்கி கொண்டதால், நேற்று நெரிசல் இன்றி சென்னை வெறிச்சோடி காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக