Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 13 நவம்பர், 2012

போலி சாமியாரை செருப்பால் அடித்த பெண்கள்


ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் வசித்து வருபவர் சீனிவாச ராவ், குடும்பச் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டார். ஆறு மாதங்களுக்கு முன், விசாகப்பட்டினத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர், சீனிவாச ராவுக்கு அறிமுகம் ஆனார்.

அப்போது, "நான் சாமியார், எனக்கு மாய மந்திர வித்தைகள் தெரியும்; உங்களுக்கு ஏற்பட்டுள்ள பணக் கஷ்டத்தை போக்க, ஒரே வழி, பூமியில் வைக்கப்பட்டுள்ள, புதையலை கண்டுபிடிப்பது தான்' என்று, சீனிவாச ராவிடம் பாஸ்கர் கூறினார்."மந்திரங்கள் ஓதி பூஜை செய்தால், புதையல் உள்ள இடத்தைக் கண்டு பிடித்து விடலாம்' என்றும் தெரிவித்தார்.பாஸ்கர் பேச்சை நம்பிய சீனிவாச ராவ், விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்று, தன் வீட்டில், ஐந்து மாதங்களாக புதையலை தேடி, மாய மந்திர பூஜைகள் செய்தார்.

பூஜைக்காக சீனிவாச ராவ், இதுவரை, 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். ஆனால், புதையல் மட்டும் கிடைக்கவில்லை.இதில், கோபமடைந்த சீனிவாச ராவ் குடும்பத்தினர், இதுகுறித்து, தங்களின் அடுக்குமாடி குடியிருப்பில், வசிக்கும் மற்றவர்களிடம் தெரிவித்தனர். கோபமடைந்த அப்பகுதி பெண்கள், மோசடி செய்த பாஸ்கரை நிற்க வைத்து, செருப்பால் அடித்து உதைத்து, விஜயவாடா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக