Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 30 ஜூன், 2013

இஸ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு பா.ஜ.க . அலறுவது ஏன்? காங்கிரஸ் கேள்வி

"பா.ஜ., கட்சியினர், எந்த தவறும் செய்யவில்லை என்றால், எதற்காக, சி.பி.ஐ., விசாரணையை பார்த்து, அலற வேண்டும்,'' என, காங்., செய்தி தொடர்பாளர், பக்த சரண் தாஸ், கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்., செய்தி தொடர்பாளர், பக்த சரண் தாஸ் கூறியதாவது: குஜராத்தில் நடந்த, இஸ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை சிக்க வைப்பதற்காக, சி.பி.ஐ.,யை, மத்திய அரசு, தவறாக பயன்படுத்துவதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள், கவலை தெரிவித்துள்ளனர். 


பா.ஜ., கட்சியினர், எந்த தவறும் செய்யவில்லை என்றால், எதற்காக, சி.பி.ஐ., விசாரணையை பார்த்து, அவர்கள் அலற வேண்டும்? சட்டம், அதன் கடமையைச் செய்யும்போது, அதைப் பார்த்து, ஏன் பயப்பட வேண்டும்? வழக்கு என்று வந்து விட்டால், விசாரணை, கைது என்பது போன்ற நடைமுறைகள், வழக்கமானதே. 

குற்றம் செய்யாதவர்கள், அதைப் பார்த்து, பயப்பட வேண்டிய அவசியமில்லை. குஜராத் மாநில, நீர்வளத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பாபுபாய் பொக்கிரியாவுக்கு, ஊழல் வழக்கில், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும், அவர், அமைச்சர் பதவியில் தொடருவது எப்படி என்பது பற்றி, பா.ஜ., தலைவர்கள் தான், விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு, பக்த சரண் தாஸ் கூறினார்.

சுற்றுலா பயணிகளை கவர்வதில் உலக அளவில் தாஜ்மகாலுக்கு 3 வது இடம்

இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான தாஜ்மகால் உலகில் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த தலங்கள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

‘டிரிப் அட்வைசர்‘ என்ற இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தளம் சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா தலங்கள் குறித்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பட்டியலை தயாரித்துள்ளது. அவர்களின் கருத்துக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் 25 முக்திய சுற்றுலாத் தலங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தலங்களுக்கு 2013-ம் ஆண்டுக்கான ‘டிராவலர்ஸ் சாய்ஸ் அட்ராக்சன்‘ விருதுகள் வழங்கப்படும். பெரு நாட்டில் உள்ள மட்சு பிட்சு மற்றும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆகியவை முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளன.

யுனெஸ்கோ 1983-ம் ஆண்டு தாஜ்மகாலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து மட்டும் 2 லட்சம் பேர் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 29 ஜூன், 2013

அடிப்படை வசதிகள் எதுவுமில்லை.. அரசுப்பள்ளிக்கு பூட்டு..!

தமிழக கல்வி அமைச்சர் வைகை செல்வன் அவர்களின் அருப்புக்கோட்டைக்கு பக்கத்து தொகுதியான விளாத்திகுளம் தொகுதியில்தான் இந்தசம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் பூதலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டகிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

போதிய கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியிலும். அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்திலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

வகுப்புகளில் கரும்பலகைகள் இல்லாமல் சுவரில் எழுதி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதால் மழை பெய்தால் பள்ளிக்கு விடுமுறை விடும் சூழ்நிலை உள்ளது.

மேல்நிலையில் கணிதம் மற்றும் வரலாறு பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டது. ஆனால் கணித பாடபிரிவுக்கு மட்டும் 2 ஆசிரியர்கள் நியமனம்செய்யப்பட்டனர். வரலாறு பாட பிரிவுக்கு ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை.

ரூ. 53 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி இன்னமும் கட்டி முடித்தபாடில்லை.

இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பெற்றோர்களும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து மாணவ,மாணவிகளை வெளியே அனுப்பிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு விட்டனர்.

வெள்ளி, 28 ஜூன், 2013

அடிப்படை வசதி இல்லாத பள்ளிகளை போலீசார் தத்தெடுத்தனர்

மதுரை மாவட்டத்தில் போதிய அடிப்படை வசதியின்றி செயல்படும் பள்ளிகளை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி மாவட்ட போலீசார் தத்தெடுத்தனர்.

வசதியின்றி செயல்படும் பள்ளிகள்
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், மதுரை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் பட்டியலை போலீசார் தயாரித்தனர். அதன்படி, பல்வேறு பள்ளிகள் அடங்கிய பெயர் பட்டியல் போலீஸ் சூப்பிரண்டு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முடிவில், பழங்காநத்தம் வசந்தநகரில் உள்ள தியாகராசர் உயர்நிலைப்பள்ளி, சோழவந்தான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தத்தெடுக்கப்பட்டன. அதன்மூலம் அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளையும், அங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உரிய ஆலோசனைகளையும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதிக மதிப்பெண்
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறுகையில், 10, 12–ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக கல்வித்துறையின் ஒத்துழைப்பை கோரி உள்ளோம்.மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும். இதன்மூலம் பள்ளியில் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

பதிவு மையங்கள்
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக, பொதுமக்களுக்கு உதவும் வகையில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வாக்காளர் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம் –6),

பெயர் நீக்கல் (படிவம் –7), பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்தல் (படிவம் –8), வாக்காளர் பட்டியலில் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் (படிவம் 8ஏ), குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம் –6ஏ), வாக்காளர் அட்டை நகல் பெறுதல் (படிவம் 001சி) ஆகிய 6 பணிகளை இந்த வாக்காளர் பதிவு மைய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

விண்ணப்பிக்கலாம்
வாக்காளர் பதிவு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். அனைத்து கோரிக்கைகளுக்கான விண்ணப்பங்களையும், வாக்காளர் பதிவு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் இந்த மையங்களிலேயே கொடுக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மனுதாரர் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், வயது மற்றும் குடியிருப்புக்கு ஆதாரமாக கல்வி சான்றுகள், பிறப்பு சான்று, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வருமான வரி கணக்கு அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அடையாள அட்டை போன்றவற்றையும் ஆதார ஆவணங்களாக பயன்படுத்தலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சி.சமயமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிப்பு

21ம் நூற்றாண்டில் எழுச்சி பெறும் துறைகளுள் ஒன்றாக இருப்பது ஈவன்ட் மேனேஜ்மென்ட். முன்பு போல அல்லாமல் இன்று எந்த விழாவை எடுத்தாலும் அதை மிக பிரம்மாண்டமாகவும் மனதை கவருவதாகவும் நடத்த வேண்டியிருக்கிறது.

அரசியல் கட்சிகளின் மாநாடுகள் நடக்கும் விதத்தைப் பார்த்தால் மிரட்சியாகவே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இன்று எல்லாமே பெரிய அளவில் பிரம்மாண்டமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. எல்லா விழாக்களுமே ரெகார்ட் செய்யப்பட்டு ஓரிரு நாட்களிலேயே அவை ஒளிபரப்பப்படுகின்றன. எனவே நேரில் பார்ப்பவரைத் தவிர டிவியில் பார்ப்பவர் எண்ணிக்கை தான் பல லட்சக்கணக்கில் இருக்கிறது. டிவியிலும் நேரிலும் நாம் பார்க்கும் விருது வழங்கும் விழா, முக்கிய மேளாக்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து நடத்தும் மேலாண்மையைத் தான் ஈவண்ட் மேனேஜ்மென்ட் எனக் கூறுகிறார்கள்.

முறையான எந்த ஈவண்ட் மேனேஜ்மென்ட் படிப்பும் படிக்காமல் எத்தனை பேர் அனாயசமாக இது போன்ற மெகா திருவிழாக்களை நடத்துவதை நாம் பார்த்து வந்துள்ளோம்? எனினும் இன்றைய காலத்தின் கட்டாயம் இந்த ஈவன்ட் மேனேஜ்மென்ட். ஒரு நிகழ்ச்சியின் ஒவ்வொரு சிறு அசைவும் தெளிவாக திட்டமிடப்பட்டு பிரமாதமாக செயல்படுத்தப்படுவதற்கு ஈவன்ட் மேனேஜ்மென்ட் தான் மிகவும் உதவுகிறது. திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள், நிறுவனங்களின் மாநாடுகள், செமினார்கள், கருத்தரங்குகள், புதிய பொருட்களை அறிமுகம் செய்யும் விழாக்கள் என அனைத்து ஷோக்களுக்கும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் இன்று அத்தியாவசியமாகியுள்ளது. பிரபலமானவர்களோடும் புகழ் பெற்ற பிரமுகர்களோடும் ஈவன்ட் மேனேஜர்கள் தோளோடு தோள் சேர்த்து பழகுகிறார்கள்.

விழா நடத்த விழைபவர்கள் ஈவன்ட் மேனேஜிங் நிறுவனங்களை அணுகியவுடன் அந்த நிறுவனம் துவக்கத்தில் புராஜக்ட் ரிபோர்ட் ஒன்றை தயார் செய்து தருகிறது. எவ்வளவு செலவாகும்? என்னென்ன அம்சங்கள் தேவை? எத்தனை நாளில் அதை தயார் செய்யலாம் போன்ற அனைத்து விபரங்களும் ஒரு புளூபிரின்ட் போல அந்த அறிக்கையில் தரப்படுகின்றன. விழா நடத்த விரும்புபவர்கள் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன் திட்டம் செயலாக்கத் துவங்குகிறது.

ஈவண்ட் மேனேஜிங் துறையில் நுழைய அடிப்படையில் உங்களுக்கு சில திறன்களும் குணாதிசயங்களும் தேவை.

* தலைமை தாங்கும் பண்பு

* யாரையும் நயம்பட பேசி மசிய வைக்கும் திறன

* எளிதாகப் பழகும் திறன

* ஒன்றிணைக்கும் திறன

* மார்க்கெட்டிங் மற்றும் வாணிப உத்திகளைப் பெற்றிருப்பத

* லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடு செய்யும் திறன்கள

* எதிர்பாராமல் ஏற்படும் திருப்பங்களை லாவகமாக கையாளும் திறன

* பகுத்தாராயும் திறன், நுண் திறன் மற்றும் பிரச்னைகளை கையாளும் திறன்

இத் துறையில் சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பி.ஜி. டிப்ளமோ படிப்புகள் தரப்படுகின்றன. பொதுவாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிப்புகள் மும்பை, டில்லி, கோல்கட்டா போன்ற மாநகரங்களில் தான் நேரடிப் படிப்புகளாக நடத்தப்படுகின்றன.

வியாழன், 27 ஜூன், 2013

நெல்லையில் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 நெல்லையில் கவுன்சிலிங்கிற்கு முன்பாகவே நடக்கும் இடமாறுதல் நடவடிக்கையை கண்டித்து கல்லூரி ஆசியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் கடந்த ஆண்டு முறையான அறிவிப்பிற்கு பின் நடந்தது.

இந்த ஆண்டு கவுன்சிலிங் அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஆசிரியர்கள் காத்திருதனர். இந்நிலையில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கவுன்சிலிங்கிற்கு முன்னதாகவே இடமாறுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் நேற்று ஆசிரியர்கள் வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி முன் நடந்த போராட்டத்திற்கு கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் பேராசிரியை வான்மதி தலைமை வகித்தார். செயலாளர் விஜிலா ரூபி முன்னிலை வகித்தார். ஆர்ப்õபாட்டத்தில் பங்கேற்றக ஆசிரியர்கள் கவுன்சிலிங் அறிவிப்பு இல்லாமல் நடக்கும் இடமாறுதல் செய்யும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுபோல் சுரண்டை அரசு கல்லூரியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ. படிப்பு


ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் + எம்.பி.ஏ., படிப்பைப் படிக்க நினைப்பது மிகவும் புத்திசாலித்தனமான செயல். இதை நடத்தும் சில கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

* வினோத் குப்தா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், ஐ.ஐ.டி., காரக்பூர்

* சைலேஸ் மேத்தா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், ஐ.ஐ.டி., மும்பை

* நர்ஸி மோஞ்சி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் ஹையர் ஸ்டடிஸ், என்.ஐ.எம்.எஸ்., மும்பை

* லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ

* குருஷேத்ரா பல்கலைக்கழகம், குருசேத்ரா

* தேவி அகில்யா விஸ்வவித்யாலயா, இந்தூர்

* பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிலானி

* மகரிஷி தயானந்தர் பல்கலைக்கழகம், ரோடக்

ராஜ்யசபா தேர்தல் முடிவு: திமுக வெற்றி ,தேமுதிக தோல்வி


தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடை பெற்றது.  முற்பகல் 11.25க்கு முதல்வர் ஜெயலலிதா முதல் வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்பு அடைந்தது. 2 மணி 18 நிமிடங்கள் நடந்த இந்த வாக்குப் பதிவின்போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 231 பேர் வாக்களித்தனர். பாமக உறுப்பினர்கள் 3 பேர் வாக்குப் பதிவில் கலந்து கொள்ளவில்லை.

2.30 மணிக்கு வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

அதிமுக சார்பில் போட்டியிட்ட மைத்ரேயன், அர்ஜூனன், ரத்தினவேல், லட்சுமணன் ஆகிய நால்வரும் வெற்றி பெற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட டி.ராஜா வெற்றி பெற்றார். மீண்டும் ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட டி.ராஜா வெற்றி பெற்றார். மீண்டும் ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 22 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

புதன், 26 ஜூன், 2013

50 வயதில் அரசு வேலையை இழந்தவர் இழப்பீடு கோரி வழக்கு

ராமநாதபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முருகேசு (வயது50). தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு படித்த இவர் தனது கல்வி தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1985–ம் ஆண்டு பதிவு செய்து வைத்திருந்தார்.

பரமக்குடி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனத்திற்கு பதிவு மூப்பு அடிப்படையில் நபர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

கடும் அதிர்ச்சி
இதன்படி பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலகத்தின் சார்பில் முதல் இடத்தில் உள்ள முருகேசுவிற்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு 8.6.2012 அன்று பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளிக்கு வருமாறு 31.5.2012 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அவருக்கு 18.6.2012 அன்று தான் தாமதமாக கடிதம் கிடைத்துள்ளது.

இதனால் முருகேசு அதிர்ச்சி அடைந்தார். உடனே பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். நேர்முகத்தேர்வு முடிந்து விட்டதால் எதுவும் செய்யமுடியாது என்று கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. 50 வயது வரை காத்திருந்து பதிவு மூப்பில் முதல் இடத்தில் இருந்தும் தாமதமாக வந்த கடிதத்தால் அரசு வேலை கைநழுவிப்போனதால் முருகேசு மனம் உடைந்தார்.

இழப்பீடு கோரி வழக்கு
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு மனு செய்தார். ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், மாநில உயர்கல்வி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோரின் சேவை குறைபாட்டால் தனக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு பறிபோய் உள்ளது.

இதற்காகவும் மனஉளைச்சலுக்காகவும் ரூ.19 லட்சத்து 40 ஆயிரம் இழப்பீடு கோரி முருகேசு ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் முருகேசு வழக்கு தொடர்ந்துள்ளார்.

குற்றாலத்தில் சீசன் ரம்மியமாக உள்ளது

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதாலும், குளுமையான சூழல் நிலவியதாலும் நேற்று சீசன் அருமையாக இருந்தது.

மழை குறைந்தது
நெல்லை மாவட்டம் குற்றாலம் மலையில் மழை நீடித்ததால் மெயின் அருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் நேற்று காலையில் அருவிகளில் வெள்ளம் குறைந்தது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளிப்பதற்கு ஏதுவாக தண்ணீர் கொட்டியது. நேற்று காலை முதல் ஏராளமானவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மெயின்அருவி மட்டுமின்றி ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

சீசன் அருமை
பகலில் விட்டு விட்டு வெயில் காய்ந்தது. குளிர்ந்த காற்று வீசியது. இடையிடையே சாரல் மழையும் பன்னீர் தெளிப்பது போன்று தூவியது. நேற்று முழுவதும் அருமையான சீசன் நிலவியது.

பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்

இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி, தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 50 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். நமது கல்வித்துறை திட்டங்களில் கற்பிக்கும் திறன் குறைந்து வருவதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடிப்படை திறன்களை கற்றுக் கொடுக்க கல்வித்துறை தவறுவதாகவும், புரிந்து கொள்ளாது மனப்பாடம் செய்து எழுதுவது நாகரிகமாக மாறி விட்டதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

செவ்வாய், 25 ஜூன், 2013

புதிய நீட்ஸ் திட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்க வழிகாட்டி கருத்தரங்கு திருநெல்வேலியில் நாளை நடக்கிறது


தமிழக அரசின் புதிய நீட்ஸ் திட்டத்தில் இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு கலெக்டர் சி.சமயமூர்த்தி தலைமையில் நாளை  நடக்கிறது. இது குறித்து நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

புதிய கடன் திட்டம்
தமிழக முதல்–அமைச்சர் இளைஞர்களுக்கு தொடங்க மானியத்துடன் கூடிய சுய தொழிற் கடனான ரூ.1 கோடி வரை வழங்கும் “நீட்ஸ்“ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோர் தகுதி பெறுகின்ற இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழிகள் தொடங்க அதிக பட்ச முதலீடு ரூ.1 கோடி வரையிலும் வங்கிகள் வழியாக கடனுதவி வழங்கப்படுகிறது. திட்ட முதலீட்டில் 25 சதவீதத்துக்கு மிகாமலும், அதிக பட்சமாக ரூ.25 லட்சம் வரையும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு சிப்காட், சிப்கோ போன்றவற்றில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

கருத்தரங்கு
குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி தொடங்கிய முதல் 6 ஆண்டுகளுக்கு நிறுவனம் செலுத்திய வாட் வரி முழுவதும் மானியமாக வழங்கப்படும். உற்பத்தி தொடங்கிய முதல் 3 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தில் 20 சதவீதம் மானியம் வழங்கப்படும். உற்பத்தி சார்ந்த பயன்பாட்டுக்கான நிறுவனங்கள் ஜெனேட்டர் வாங்கினால் முதலீட்டில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. முறையான கடன்தவணையை திருப்பி செலுத்தும் நிறுவனங்களுக்கு 3 சதவீதம் பின்முனை வட்டி வழங்கப்படும். தமிழக அரசின் புதிய நீட்ஸ் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வழிகாட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கருத்தரங்கத்துக்கு கலெக்டர் சி.சமயமூர்த்தி தலைமை தாங்குகிறார். தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் நெல்லை மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

லாஜிஸ்டிக்ஸ் துறை பணி வாய்ப்புகள்


இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறை அடுத்த 2 ஆண்டுகளில் 4 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய வாணிபத்தை மேற்கொள்ளும் துறையாக மாறவிருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன. இத்துறையில் அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்குள் 4 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளதாக துறைத் தகவல்கள் கூறுகின்றன. இத் துறை சமீப காலமாக வெகுவேகமாக வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. எனினும் இத் துறைக்குத் தேவைப்படும் திறனாளர்கள் கிடைப்பது
கடுமையான சிரமமாக இருக்கிறது.

சப்ளை செயின் மேனேஜ்மென்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் போன்ற லாஜிஸ்டிக்ஸ் படிப்புகளைப் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது. ஐ.டி. துறையுடன் ஒப்பிடுகையில் இத் துறையில் தரப்படும் ஊதியமும் குறைவாகவே இருக்கிறது. இதனால் திறன் பற்றாக்குறை உருவாகியிருக்கிறது. எனினும் இத் துறையில் தற்போது இடை நிலைப் பணிகளில் நிதி, மார்க்கெட்டிங் மற்றும் மனித வளத் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இத் துறை பற்றிய தகவல்கள் இன்னமும் பரவலாக அறியப்படாததால் தேவைப்படும் திறமைசாலி ஊழியர்கள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது. இத் துறை சமீப காலம் வரை, தனிநபர் அல்லது ஒரே குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் தொழிலாகவே இருந்து வந்துள்ளது. சமீப காலமாக, பன்னாட்டு நிறுவனங்கள் இதில் நுழைந்து செயல்படத் துவங்கியபின் தான் இத் துறை ஓரளவு கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


திங்கள், 24 ஜூன், 2013

டிப்ளமோ, டிகிரி தகுதிக்கு மெட்ராஸ் ஃபெர்டிலைசரில் பணி


மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னிக்கல் உதவியாளர்

காலியிடங்கள்: 65

கல்வித்தகுதி: கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் - எலெக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ அல்லது வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.8.500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.9,500 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2013

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.madrasfert.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பெங்களூர் ஐ.பி.ஏ.பி., தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள்


இன்ஸ்டிடியூட் ஆப் பயோஇன்பர்மேடிக்ஸ் அண்டு அப்ளைடு பயோடெக்னாலஜி நிறுவனமானது கர்நாடகா அரசும் ஐ.சி.ஐ.சி.ஐ., பாங்கும் இணைந்து நடத்தும் பயோ இன்பர்மேடிக்ஸ் கல்வி நிறுவனம். இது 4 விதமான படிப்புகளைத் தருகிறது.
* போஸ்ட்கிராஜூவேட் டிப்ளமோ இன் பயோஇன்பர் மேடிக்ஸ் - 18 மாதப் படிப்பு
* போஸ்ட்கிராஜூவேட் டிப்ளமோ இன் கெமிஇன்பர் மேடிக்ஸ் - 18 மாதப் படிப்பு
* சர்டிபிகேட்/டிப்ளமோ இன் பயோ டெக்னிக்ஸ் - 8/14 மாதப் படிப்பு
* அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் ஆர்கானிக் சின்தசிஸ் - 9 மாதம்
இந்தப் படிப்புகள் வரும் நவம்பரில் துவங்க இருக்கின்றன.

லைப் சயின்ஸ், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், பார்மசி, மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் போன்ற ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருப்போர் முதல் படிப்பில் சேரலாம்.  வேதியியலில் எம்.எஸ்சி., பார்மசியில் பட்டப்படிப்பு/பட்ட மேற்படிப்பு, கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ.,/பி.டெக்., படித்திருப்போர் 2வது படிப்பில் சேரலாம்.

லைப் சயின்சில் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜியில் பி.டெக்., மற்றும் எம்.பி.பி.எஸ்., படித்திருப்போர் 4வது படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பில் நுழைவுத் தேர்வு மூலமாக மட்டுமே சேர முடியும். இந்தத் தேர்வானது சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா, மும்பை மற்றும் புதுடில்லியில் நடத்தப்படவுள்ளது.

இந்த நிறுவனத்தின் முகவரி:
Institute of Bioinformatics and Applied Biotechnology,
G5 Tech Park Mahal, ITPB,
White Field Road, Bangalore 560 066.
www.ibab.ac.in

ஞாயிறு, 23 ஜூன், 2013

காணாமல் போன அரசு தொகுப்பு வீடுகள்கண்டுபிடிக்க கோரி கலெக்டரிடம் மனு

பெருங்கோட்டூர் தெற்கு காலனியைச் சேர்ந்த சந்தனகுமார் கலெக்டர் சமயமூர்த்தியிடம் கொடுத்துள்ள புகாரில்,கூறியிருப்பாதாவது: குருவிகுளம் யூனியனில் உள்ள பெருங்கோட்டூர் பஞ்சாயத்தில், பஞ்சாயத்து நிதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு தொகுப்பு வீடுகளில் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்ட 8 தொகுப்பு வீடுகளை காணவில்லை.

திருமணம் ஆகாமல் முதியோர் உதவித் தொகை பெறும் ஒருவருக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கப்பட்டுள்ளது. கட்சா வீடு வழங்கிய வகையில் 15 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து பணம் வங்கியில் இருந்து காசோலை மூலம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலையில் பணிக்கு வராதவர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கி உள்ளவர்களின் பெயர்களில் வேலை செய்ததாக மோசடியாக வருகை பதிவேடு தயார் செய்து பஞ்சாயத்து பணம் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது. அரசு பணியில் உள்ள ஒருவருக்கு அரசு தொகுப்பு வீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நபருக்கு கட்சா வீடும், அரசு தொகுப்பு வீடும் வழங்கப்பட்டுள்ளது. பெருங்கோட்டூர் மற்றும் பி.ஆலங்குளம் கிராமங்களில் ஊனமுற்றோர் அல்லாத நபர்களின் பெயர்களை ஊனமுற்றவர்களாக பட்டியல் தயார் செய்து தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி மோசடியாக பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சந்தனகுமார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 21 ஜூன், 2013

என்னை கொலை செய்ய கம்யூனிஸ்டுகள் சதி : மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள, ஊராட்சி தேர்தலையொட்டி, வடக்கு, 24 பர்கானா மாவட்டத்தில் பிரசாரம் செய்த மம்தா பானர்ஜி, கூட்டத்தில் பேசியதாவது:கடந்த சில தினங்களுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியான பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்க சென்றிருந்தேன். அப்போது, என்னை, மாவோயிஸ்டுகளின் உதவியுடன் அங்கேயே தீர்த்துக் கட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர். இது, எனக்கு உளவுப்பிரிவினர் அளித்த தகவல். இதற்கெல்லாம் நான் பயந்துவிட மாட்டேன். என்னை அழித்துவிட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்ற, கம்யூனிஸ்டுகளின் கனவு ஒருபோதும் பலிக்காது.

கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி, காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளும் ஒன்று சேர்ந்து, என் அரசக்கு எதிரான வேலையில் ஈடுபட்டு வருகின்றன. என்னுடன், இந்த மண்ணின் மக்கள் இருக்கும் வரை, என் தலைமுடியைக் கூட யாராலும் தொட முடியாது.

நான் எந்த தவறும் செய்ததில்லை. சாவதற்கு நான் பயப்படவில்லை. இங்கு நடக்கும் கற்பழிப்புகள், கொலைகள் போன்றவற்றிலிருந்து ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகளிடம், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, மம்தா பானர்ஜி கூறினார்.

பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகளை மூட முயற்சியா?

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 10க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை மூடுவதற்கான, ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக, பல்வேறு மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு பிரிவுகளில், சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, 20 பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை மூடுவதற்கான, ஆயத்த பணிகளில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, சென்னை, பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் மேல்நிலை பள்ளியில், நடந்த கலந்தாய்வில், பார்வையற்ற மாணவர்களின் பார்வைத் திறனை பரிசோதிக்கவும், அதன் அடிப்படையில் முழுமையாக பார்வையற்றவர்களைத் தவிர, மிக மிகக் குறைவாக பார்வை தெரிந்தால் கூட சேர்க்கை மறுக்க, பல்வேறு முயற்சிகள் நடந்து வருவதாகவும், குற்றம்சாட்டி வருகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமை பாதுகாப்போர் நலச் சங்க செயலர், நம்புராஜன் கூறியதாவது: சென்னை, பூந்தமல்லியில், பார்வையற்றோருக்கு, புக் பைண்டிங், டிரில்லிங், பைலிங் போன்ற பயிற்சிகளும், காதுகேளாதோருக்கு, பிட்டர், டர்னர், வெல்டிங் உள்ளிட்ட, ஐ.டி.ஐ., பயிற்சிகளும், உடல் ஊனமுற்றோருக்கு பல விதமான பணிகளை அளிக்க, மாற்றுத் திறனாளி நலத்துறை, பார்வையற்றோர் தொழிற்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது.

இதில், புக் பைண்டிங் பயிற்சியைத் தவிர மற்ற பயிற்சிகளை ஏற்கனவே, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை நிறுத்தி விட்டது. இந்த ஆண்டு இதற்கான பயிற்சியையும் நிறுத்தி, திட்டத்தையே முடக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள, மொத்த மாற்றுத் திறனாளி குழந்தைகளின் விகிதாசார அடிப்படையில் பார்த்தால், தற்போது இயக்கப்படும் சிறப்புப் பள்ளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகும்.

குறிப்பாக, கிராமப்புற, எளிய, அறியாமையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க, மாற்றுத் திறனாளி நலத்துறை எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இருக்கும் ஒரு சில பள்ளிகளையும் மூட முயற்சிக்கும் பட்சத்தில், அது மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராகவே அமையும். எனவே, இப்பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் தயக்கம் :20 ஆயிரம் இடங்களுக்கு 4,500 விண்ணப்பம்


இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், வெறும், 4,500 பேர் மட்டும், விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில், 550 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்காக, மே, 27 முதல், கடந்த, 12ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. கடைசி நாள் வரை, 5,000 விண்ணப்பங்கள் விற்பனை ஆனபோதும், 4,500 விண்ணப்பங்கள் மட்டுமே, பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டன.

விண்ணப்பித்த அனைவருக்கும், இடம் உறுதி என்ற நிலை உள்ளது. எனினும், 4,500 பேரும், கலந்தாய்வுக்கு வருவார்களா என்பது தான், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறைக்கு, சந்தேகமாக உள்ளது. 10 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை, "ஆப்சென்ட்&' ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே, 3,000 மாணவர்கள், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தாலே, பெரிய சாதனையாக இருக்கும் என, துறை வட்டாரங்கள் கருதுகின்றன. குறைந்த மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதால், அனைவருக்கும், "ஆன்-லைன்" மூலம் கலந்தாய்வை நடத்த, இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.

விண்ணப்பித்த மாணவ, மாணவியரை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு வரவழைத்து, கலந்தாய்வை நடத்தி, சேர்க்கை உத்தரவை வழங்க, இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு வரை, திருச்சியில், கலந்தாய்வு நடந்தது. அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், திருச்சிக்கு சென்று வந்தனர். தற்போது, முதல் முறையாக, "ஆன்-லைன்" மூலம், கலந்தாய்வு நடக்க இருப்பதால், மாணவர்கள், தங்கள் மாவட்ட தலைநகரில் உள்ள, சி.இ.ஓ., அலுவலகத்திற்கு சென்றால் போதும். கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம், ஓரிரு நாளில் வெளியிட உள்ளது.

ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்பவர்கள், ஐந்தாம் வகுப்பு வரையான பள்ளிகளில், ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றலாம். ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணி இடங்கள், மிகவும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

அப்படியே, தேர்ச்சி பெற்றாலும், மாநில அளவில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தான், வேலை கிடைக்கும். இதுபோன்ற சிக்கல்கள் காரணமாக, ஆசிரியர் பயிற்சி படிப்பை, மாணவர்கள், ஒதுக்கியுள்ளனர்.

வியாழன், 20 ஜூன், 2013

குஜராத்தில் பல்கலைகழக தொழிலாளர்கள் ஊதியம் வழக்கக் கோரி தீக்குளிக்க முயற்சி

குஜராத்தில், பணி நிரந்தரம் செய்யக் கோரியும், சரியான முறையில் ஊதியம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.

 ஜூனாகட் விவசாய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும், பணியாளர்கள்,  தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென, மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். பின், விடுவிக்கப்பட்டனர்.

இன்ஜினியரிங் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் - அண்ணா பல்கலை கழகம் வெளியீடு

அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜுன் 21ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளன. இந்நிலையில், கடந்த 2011-12 கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட பொறியியல் கல்லூரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறந்த கல்லூரி எது? எந்த அடிப்படையில் கல்லூரியை தேர்வு செய்யலாம்? உள்ளிட்ட பலவிதமான கேள்விகளுடன், மாணவர்கள் உச்சகட்ட குழப்பத்தில் இருக்கும் நேரம், இந்த கவுன்சிலிங் நேரம். இந்த நேரத்தில்தான், இந்த பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2011-2012ம் கல்வியாண்டில், அகடமிக் அளவில், எந்தெந்த கல்லூரி எப்படி செயல்பட்டுள்ளது என்பதைப் பற்றி, அண்ணா பல்கலை வெளியிட்ட பட்டியல், மாணவர்களுக்கு பெரியளவில் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் முடிவெடுப்பது சற்று எளிதாக இருக்கும என்று நம்பப்படுகிறது.

இக்கல்லூரிகள் பற்றிய விபரங்கள் அறிய http://www.annauniv.edu/acaper/acaper.html என்ற வலைதளம் செல்க.

மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய் விமான சேவை : மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய்க்கு விமான சேவை வழங்க உத்தரவிடக்கோரி தாக்கலான வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை கீழக்குயில்குடி வக்கீல் விஜயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: ராயல் ஏர்போர்ஸ் சார்பில், இரண்டாம் உலகப்போரின்போது 1942 ல் மதுரையில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. பயணிகள் போக்குவரத்து 1956 ல் துவங்கியது. போயிங் (737) விமானம் 1970 ல் இயக்கப்பட்டது.

தற்போது, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மதுரை, திண்டுக்கல் உட்பட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை, பெங்கரூரு வேலைக்குச் செல்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய்க்கு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய செல்கின்றனர்.மதுரையிலிருந்து சர்வதேச விமானங்கள் இயக்க போதிய வசதிகள் இல்லை என, சிவில் விமான போக்குவரத்துத்துறை முதலில் தெரிவித்தது. ஆனால், மதுரை விமான நிலையத்தில் 130 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் அமைத்தனர். முனையம் 2010 நவம்பரில் செயல்பட துவங்கியது. அப்போது, மதுரையிலிருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்றனர். மிகின் லங்கா விமான சேவை 2012 டிசம்பரில் துவங்கியது. குடியேற்றம் (இமிகிரேஷன்), சுங்கப்பிரிவு அலுவலகங்கள் செயல்பட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் சிங்கப்பூர், துபாய் விமான சேவையை ஜனவரியில் 10 ஆயிரத்து 134 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். மதுரை விமான நிலையம் ஜனவரியில் 7171 பயணிகளை கையாண்டுள்ளது. மதுரை அருகே கொடைக்கானல், மூணாறு உள்ளதால் சுற்றுலா வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. மதுரையிலிருந்து 3 மெட்ரோ நகரங்களுக்கு விமான சேவை உள்ளது.

மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய்க்கு விமானங்கள் இயக்க வலியுறுத்தி, சிவில் விமான போக்குவரத்துத்துறை செயலாளருக்கு மனு செய்தேன். மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் ஏப்.,9 ல் வலியுறுத்தினேன். விமான நிலைய ஆணைய தலைவருக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வந்தது. மதுரையிலிருந்து சிங்கப்பூர், துபாய்க்கு விமான சேவை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கே.பி.எஸ்.பழனிவேல்ராஜன் ஆஜரானார். சிவில் விமான போக்குவரத்துத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்கள் ஒத்திவைத்தனர். 

புதன், 19 ஜூன், 2013

பனாத்வாலாவும்...பதர்களும்...! - வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்

"குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா’’. இவர் 20 கோடி இந்திய முஸ்லிம்களின் குரலையும் தம் நாவின் நரம்புகளாக்கி வைத்திருந்தவர். உயிரனைய ஷரிஅத் சட்டங்களுக்கு இந்திய அரசாலும், நீதிமன்றங்களாலும் துரும்பளவேனும் பாதிப்பு ஏற்பட இருந்த தருணங்களிலெல்லாம் சிலிர்த்தெழுந்து தம் சிம்ம கர்ஜனையால் இந்திய பாராளுமன்றத்தை அதிர வைத்தவர். இந்திய நாட்டின் சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மகுடம் சூட்டப்பட்டவர். தாய்ச் சபையின் மணிவிழா மாநாட்டில் இலட்சோப இலட்சம் லீகர்களின் அணிவகுப்பு மரியாதையை பெருமை பொங்க நெஞ்சு நிமிர்த்தி """"சலாம்’’ கூறி ஏற்றுக் கொண்டவர். 25.6.2008- ல் இம் மண்ணுலகை விட்டு மறைந்து 5 வருடங்கள் ஆகிறது.

பனாத்வாலா அவர்கள் குஜராத் மாநிலம் கட்ச் பகுதி மேமன் முஸ்லிம்கள் குடும்பத்தைச் சார்ந்தவர். 15.8.1933ல் மும்பையில் பிறந்தார். மெத்தப்படித்தவர் ஆசிரியராக தொண்டுகள் ஆற்றி வந்தவர். முழுநேர சமுதாய அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொள்வதற்காக ஆசிரியர் பணியை உதறியவர். 1960 ல் மும்பை முஸ்லிம் லீகின் பொதுச்செயலாளர் ஆனார். 1967ல் முதன் முதலாக மராட்டிய மாநில சட்டசபைக்கு முஸ்லிம் லீகின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1972ல் இரண்டாவது முறை சட்டசபை உறுப்பினரானார். தம் 10 வருட சட்டமன்ற பணியில் பல்வேறு விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து அதிசயத்தக்க விதத்தில் வாதங்களை முன்வைத்தார். இவர் பங்கு கொள்ளாத விவாதங்களே இல்லை. என்னும் அளவிற்கு அனைத்து துறைகளுக்கான விவாதங்களிலும், குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரை பாதிக்கும் அனைத்து விவாதங்களிலும் பங்கெடுத்தவர். மராட்டிய மாநில முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை பற்றிய தனிநபர் தீர்மானம், முஸ்லிம் தனியார் சட்டம் குறித்தான விவாதம், பசுவதை தடுப்புச்சட்ட விவாதம் - அவுரங்கபாத் மற்றும் நாக்பூர் மதக் கலவரங்களை பற்றிய விவாதம் - வந்தே மாதரம் பாடல் பற்றிய சர்ச்சைக்குள்ளான விவாதம் - குடும்ப கட்டுப்பாடு திட்டம் குறித்தான விவாதம் - கட்டாய குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை குறித்த விவாதம் ஆகியவை வரலாற்றின் பக்கங்களில் என்றும் அவர் புகழ் பாடும் விவாதங்களாகும்.

இது தவிர கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர் தேவை, மக்களின் அடிப்படை தேவைகள் பற்றிய விவாதங்களிலும் பங்கெடுத்து ஆக்கப்பூர்வமான தன் விவாதங்களை அழகாக முன்னெடுத்து வைத்தவர்.

இவரின் வாத திறமையும், சமுதாயம் குறித்த பார்வையும், மராட்டிய மாநிலத்திற்கு மட்டுமே குடத்திலிட்ட விளக்கு போல் இருந்துவிட கூடாது என்பதற்காக இவரை குன்றின் மேல் ஏற்றிய விளக்காக 1977ல் முஸ்லிம் லீக் இவரை கேரள மாநிலம் பொன்னானி பாராளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்தது. தொடர்ந்து 7 முறை அதே தொகுதியிலிருந்து பாராளு மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மராட்டிய மாநில சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய பணிகளை விட பலமடங்கு அதிகமாக பாராளுமன்றத்தில் ஆற்றினார். இந்தியாவிலே பொது சிவில் சட்டம் கொண்டுவர வகை செய்யும் இந்திய அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவை ரத்து செய்யகோரும் மசோதவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து இந்திய தேசத்தின் அடிப்படையான, வேற்றுமையில் ஒற்றுமை, சமயசார்பின்மை, சமய நல்லிணக்கம், ஆகியவற்றின் இலக்கணத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வகுப்பெடுத்தவர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை தன்மையை காப்பாற்ற வாதாடி வென்றார். அஸ்ஸாம் கலவரங்களில் அப்பாவி முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டு மென கர்ஜனை புரிந்தார். பாபரி மஸ்ஜித் தகர்ப்பிலே பங்கு கொண்டு குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்ட திரு.எல்.கே. அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, குமாரி உமாபாரதி ஆகிய மூவரையும் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்ககோரி வீரச்சமர் புரிந்தார் - """"ராம ஜென்ம பூமி நியாஸ்’’ """"விஷ்வ இந்து பரிஷத்"" ஆகிய அமைப்புகளின் மதவாத பாஸிச நடவடிக்கை களை பாராளுமன்ற விவாதங்களில் தோலுரித்துக் காட்டினார்.

குறிப்பாக ஷாபானு வழக்கின் தீர்ப்பு மூலம் இந்தியாவில் உச்சநீதிமன்றம் ஷரிஅத் சட்டத்தினை கேள்விக்குள்ளாக்கிய போது ஷரிஅத் சட்டத்தை பாதுகாக்க தனிநபர் மசோதா கொண்டுவந்தார். இந்த மசோதா பாராளுமன்றத்தின் 4 கூட்டத்தொடர்களில் ஏழு அமர்வுகளில் கிட்டத்தட்ட 12 மணிநேரம் 21 நிமிடங்கள் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஒரு தனி நபர் மசோதா இவ்வளவு நேரம் விவாதத்திற்குள்ளானது பாராளுமன்ற வரலாறாகும். இந்த விவாதத்தின் போது மத்திய அரசு சார்பில் தாமே இந்த பொருள் குறித்து அரசு அலுவல் மசோதா கொண்டு வருவதாக வாக்களித்து பனாத்வாலா அவர்களின் தனிநபர் மசோதாவை திரும்ப பெற கோரியது. அதன் பின்னர் அன்றைய சட்ட அமைச்சர் திரு. ஏ.கே.சென் அவர்கள் பனாத்வாலா அவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து அதன் பின் முஸ்லிம் பெண்கள் (மணவிலக்குக்கு பின்னரான உரிமைப் பாதுகாப்பு) மசோதாவை தாக்கல் செய்து அதை சட்டமாக்கினார். அன்றைக்கு ஷரீஅத் பாதுகாப்புக்காக பனாத்வாலா அவர்கள் பாராளுமன்றத்திலே தனிநபராக வாதாடிய போதும் இந்திய முஸ்லிம்கள் அனைவரின் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலித்ததன் பலனாகவே இன்று வரை இந்த நாட்டில் ஷரீஅத் சட்டத்திற்கான அபாயங்கள் தலைதூக்காமல் காப்பாற்ற முடிந்தது. இந்த நாட்டின் முஸ்லிம்கள் அனைவரின் ஒரே பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

ஷரீஅத் சட்ட பாதுகாவலர் பனாத்வாலா அவர்களின் ஐந்தாவது நினைவு நாளில் நாம் மீண்டும் ஒரு சோதனையை சந்திக்க தயாராக வேண்டும். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன் றத்தில் திருமதி.பதர் சயீத் என்பவர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். முஸ்லிம் பெண்கள் நலன் குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் என தன் மனுவில் தம்மைப் பற்றி குறிப்பிட்டுள்ள அவர், முஸ்லிம் பெண்களை பாதுகாக்க சரியான சட்டங்கள் இல்லை எனவும், பொது சிவில் சட்டம் கொண்டு வர வழிசெய்யும் அரசியல் சாசனம் பிரிவு 44 இருந்தும் பொதுவான சட்டங்கள் சட்டப்பாதுகாப்புகள் இதுவரை முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை எனவும் குறை கூறுகிறார். முஸ்லிம் மணவிலக்கு குறித்து காஜிகள் வழங்கும் சான்றிதழ்கள் செல்லாது என அறிவிக்க கோரியும். காஜிகளுக்கான அதிகாரமும், தகுதியும் செல்லாது என அறிவிக்க கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஷரீஅத் சட்டங்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை மதிப்புகள் மற்றும் உயரிய சிறப்புகளை கொண்டவை. அவற்றின் எல்லைகளை எந்த ஒரு முஸ்லிமும் மீற முடியாது. இந்த சட்டங்கள் முஸ்லிம்களின் மார்க்க கடமை-முஸ்லிமாக இருப்பதன் அடிப்படை நிபந்தனை. """"இவை அல்லாஹ்வின் சட்டவரம்புகள். அவற்றை நீங்கள் மீற வேண்டாம்.

எவர் அல்லாஹ்வின் சட்டவரம்புகளை மீறுகிறார்களோ அத்தகையோர் தான் அநியாயக்காரர்கள் ( 2 : 229 )

""""உங்கள் மீது அல்லாஹ்வின் கட்டளையாக ( இது விதியாக்கப்பட்டுள்ளது) (4 : 24)

இவை திருமணம் மணவிலக்கு குறித்த சட்டங்களை வகுத்துள்ள புனித குர்ஆனின் ஆயத்துக்கள். இவற்றுக்கு மாறாக எந்த முஸ்லிமும் நடக்க முடியாது. அப்படி மார்க்கச் சட்டங்களை மீறி நடப்பவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் எனவும் புனித மறை எச்சரிக்கிறது. எவர் அல்லாஹ்க்கும் அவனுடைய தூதருக்கும் மறு செய்து அவனுடைய சட்ட வரையறைகளையும் மீறுகிறனோ அவரை நரகத்தில் அவன் புகச்செய்வான் அவர் அதில் நிரந்தமாக இருப்பார் இன்னும் அவருக்கும் இழி தரும் வேதனையும் உண்டு. ( 4 : 14 )

இந்த ஷரிஅத் சட்டங்களை 1937 லேயே இந்திய அரசு (அன்றைய பிரிட்டிஷ் அரசு )ஏற்றுக் கொண்டது. இந்திய முஸ்லிம்களின் வாரிசுரிமை, பெண்களின் சொத்துரிமை, திருமணம், மணவிலக்கு (தலாக், இலா, ஜிகர், லியன்,குலா ) மணக் கொடை,வாழ்க்கை பொருளுதவி, டிரஸ்ட், வக்ப் ஆகிய விவகாரங்களில் ஷரிஅத் சட்டத்தின் படியே முடிவெடுக்கப்பட வேண்டும் என ஷரிஅத் சட்டம் 1937 கூறுகிறது.

இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25 மதவழிப்பட்ட நடவடிக்கைகளை அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாக்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இந்திய முஸ்லிமும் ஷரிஅத் படி நடப்பது அவனுடைய மார்க்க கடமை மட்டுமல்ல, நம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையும் கூட. இந்த ஷரிஅத் சட்டங்களை மெத்த படித்த அறிஞர்கள் தான் இவற்றுக்கான சரியான விளக்கங்களை கூற முடியும். இந்த நாட்டின் நீதிமன்றங்கள் ஷரிஅத் சட்டத்திற்கான வியாக்கியானங்களை தர முடியாது. மார்க்க அறிஞர்களால் மட்டுமே செய்ய முடிந்த காரியம் அது. இந்த மார்க்க அறிஞர்கள் தான் காஜிகள் என்று அழைக்கப்படு கின்றனர். காஜிகள் என்பவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க சட்ட வல்லுனர்கள். முகலாயர் காலத்திலேயே இந்தியாவில் நாடெங்கிலும் காஜிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பிறகு வந்த ஆங்கிலேயர் இந்த காஜிகள் நியமனத்தை தொடர்ந்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க பிரச்சனைகளில் நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலன பணிகளை காஜிகள் செய்து வந்தனர்.

1857 ல் நடைபெற்ற """"சிப்பாய் கலகம்"" என சிறுமைபடுத்தப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்கள் பெரும்பங்கு ஆற்றியது கண்டு பயந்த ஆங்கிலேயர், காஜிகளின் அதிகாரங்களை பறித்தனர். ஆயினும் மார்க்க விஷயங்களில் முஸ்லிம் சமுதாயம் முற்ற முழுக்க காஜிகளின் ஆலோசனைப்படியே நடந்து வந்தது. அதனால் மீண்டும் ஆங்கிலேய அரசு காஜிகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடிவு செய்து 1880 ல் காஜிகள் சட்டத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் அரசாங்கமே காஜிகளை நியமித்தது. இந்த சட்டத்தின் படி காஜிகள் என்பவர்கள் இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு உட்பட்ட திருமணங்கள், சடங்குகளில்- நிகழ்வுகளில் முன் நிற்பார்கள் என்பதே. இந்த சட்டம் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.

ஒரு திருமணமோ, மணவிலக்கோ, பாகப் பிரிவினையோ, இஸ்லாமிய மார்க்க சட்ட விதிகளின் படி முறையாக நடந்ததா இல்லையா என சான்றுரைக்கும் பணியைத்தான் காஜிகள் செய்கிறார்கள். மார்க்க சட்டங்களின்படி ஒரு மண விலக்கு நடந்தது என மார்க்க அறிஞராக உள்ள காஜிகள் தான் சொல்ல முடியும்-மார்க்க சட்டங்கள் தெரியாதவர் செல்ல முடியாது.

இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலே தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கு இந்த மார்க்க அறிஞர்களான காஜிகள் """" மணவிலக்கு மார்க்க சட்டப்படியே நடந்தது"" என சான்றுரைப்பதை தடை செய்யக் கோருகிறது. அப்படியானால் யார் சான்றுரைக்க? நீதிமன்றமா? நீதிமன்றம் சான்றுரைக்க வேண்டுமெனில் மார்க்க சட்டங்கள் என்ன என்பதை தொகுத்து நீதிமன்றத்தின் முன் வைக்க வேண்டியது அரசின் கடமையல்லவா? இன்றைக்கு இந்துக்கள் சட்டம், கிறிஸ்தவர்கள் சட்டம், பார்சிகள் சட்டம் என தனித்தனியே பாராளுமன்றத்தில் நிறைவேற்றி வைத்திருப்பது போலவே முஸ்லிம் தனியார் சட்டங்களையும் தொகுத்து பாராளுமன்றத்தின் மூலம் சட்டமாக கொண்டு வரவேண்டும் என்பது தான் இவர்களின் வாதம். இந்த மார்க்க சட்டங்களெல்லாம் மனிதன் இயற்றியது அல்ல. இறைவன் இறக்கி வைத்தவை என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை. இந்த அடிப்படை மத நம்பிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில முஸ்லிம் தனியார் சட்டங்களை நிறைவேற்ற சொல்வது, இந்திய அரசியல் சாசன பிரிவு 25ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கே முரணானது. இது பொது சிவில் சட்டத்தை புழக்கடை வழியாக கொண்டு வரும் நரித்தனம். உலகக் கல்வியை மெத்தப் படித்த மேதாவிகள் மார்க்க கல்வியை முறையாக படிக்காததால் ஏற்படும் தள்ளாட்டம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் உயரிய தத்துவம். அதன் அடிப்படையை ஆட்டம் காண வைப்பது பொது சிவில் சட்டம் பற்றிய கோரிக்கை. ஷரிஅத்தை கடை பிடிக்காதவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது. எனவே ஷரிஅத்தை பாதிக்கும் இது போன்ற வழக்குகளை எதிர் கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாக இருக்கிறது.

இந்திய நாட்டிலே எப்போதெல்லாம் அரசாலும், நீதிமன்றங்களாலும், அடிப்படை வாதிகளாலும் முஸ்லிம் சமுதாயத்திற்கும், மார்க்க சட்டங்களுக்கும் ஆபத்துகள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு போர்ப்படை வீரனாக முன்னின்று சமர் புரிந்து இச் சமுதாயத்தையும், மார்க்க சட்டங்களையும் காத்து வந்துள்ளது வரலாறு. அதுபோலவே மேற்சொன்ன பொது நல வழக்கிலும் முஸ்லிம் லீக் தன்னை ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு ஷரிஅத் சட்டங்களை பாதுகாக்கும் பணியினை செய்யும். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் சாகிபு முதல் முஜாஹிதே மில்லத் குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா வரை நம் தலைவர்கள் காட்டிச் சென்ற களத்திலே நம் யுத்தம் தொடரும்.

களத்திலிருந்து வீடு சேரும்பேறுநெல்மணிகளுக்கு மட்டுமே- பதர்கள் வீடு சென்று சேருவதில்லை.

செவ்வாய், 18 ஜூன், 2013

கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு

"இன்ஸ்ட்ரக்ட்" எனும் நிறுவனத்தால் குறுகிய கால மாலை நேர படிப்பாக கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு வழங்கப்படுகிறது.

இந்த படிப்பில் கட்டிடக் கட்டுமானத்தை மேற்பார்வையிடுவது, சட்டங்கள், அளவீடுகள், திட்டமிடுதல் போன்றவை பற்றி பாடங்கள் அளிக்கப்படும்.

தகுதி: பி.இ. - சிவில் படித்திருக்க வேண்டும்.

கட்டணம்: 10,900 ரூபாய்

காலம்: 11 வாரங்கள் (ஜூலை முதல் செப்டம்பர் வரை)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.instructindia.com என்ற இணையதளத்தை காணவும்.

புதுக்கோட்டையில் பள்ளி ஆசிரியை கற்பழித்துக் கொலை: உறவினர்கள் போராட்டம் , போலீஸ் தடியடி

புதுக்கோட்டை டவுன் காந்திநகரைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகள் தனபாக்கியம், 24. பெருங்குடி தனியார் நர்சரி பள்ளி ஆசிரியையாக பணியாற்றினார். கடந்த, 15ம் தேதி, பள்ளிக்கு விடுமுறை என்பதால், வீட்டில் இருந்துள்ளார். அன்று காலை, 9:30 மணிக்கு, மொபைல் போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், பெற்றோரிடம், பள்ளிக்குச் செல்வதாக கூறி, சென்றுள்ளார்.

இரவு, 7:00 மணி வரை, வீடு திரும்பாததால், பெற்றோர், பல இடங்களில் தேடிப் பார்த்தனர்; எங்கும் காணவில்லை. இதை அடுத்து, போலீசில் கொடுக்கப்ப்டடது. போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். திருமயம் அடுத்த கண்ணங்காரைக்குடி, கண்மாய்க்கரையில், தனபாக்கியத்தின் உடல் கிடந்தது. தலை, நெற்றி, கழுத்து, மார்பு பகுதிகளில், பலத்த காயத்துடன், நிர்வாண கோலத்தில், கிடந்த உடலை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரை கடத்தி சென்ற மர்ம நபர்கள், கற்பழித்து கொலை செய்து, பிணத்தை வீசிச்சென்றது தெரியவந்தது. இளம்பெண் உடல், நேற்று, பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, பெண்ணின் உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்யக் கோரி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர்.  பெண் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர். கைது செய்தவர்களை விடுவித்தால்தான், பெண்ணின் உடலை பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் தெரிவித்தனர். போலீசார் மறுத்ததால், உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகம், நேற்று மாலை, 4:00 மணிவரை, பரபரப்புடன் காணப்பட்டது.

வழக்கறிஞர்கள் ஏமாற்றுக்காரர்கள் போல, சித்தரிக்கப்படுகின்றனர்; அந்த நிலைமை மாற வேண்டும் : தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர்


காஷ்மீர் பல்கலைக் கழகத்தில், சட்ட மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் கூறியதாவது: சமூகத்திற்காக பாடுபட வேண்டிய பொறுப்பு, வழக்கறிஞர்களுக்கு உள்ளது. அதனால், அவர்கள் சட்ட உதவி பணிகளில், அதிக அளவில் பங்கேற்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கான சிலவற்றை செய்து கொள்வதற்காக, சட்டம் உருவாக்கப்படவில்லை. சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாறி வரும் உலக சூழ்நிலையில், சட்டம் படித்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், அவர்கள் சமுதாயத்திற்காக கொஞ்சமாவது செய்ய வேண்டும்.

கார்ட்டூன்களில் எல்லாம், வழக்கறிஞர்கள், ஏமாற்றுக்காரர்கள் போல, சித்தரிக்கப்படுகின்றனர். அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். சமூக அக்கறை கொண்டவர்கள் வழக்கறிஞர்கள் என்பதை, மக்களுக்கு செயல்பாடுகள் மூலம் காட்ட வேண்டும். புதிதாக சட்டப்படிப்பை முடித்து வருபவர்களை, நாம் ஊக்கப்படுத்தினால், எதிர்காலத்தில், அவர்கள் திறமையான வழக்கறிஞர்களாக வருவர்.

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக, பணியாற்றத் துவங்கிய, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், ஆரம்பத்தில், வழக்குகளில் வாதாட மிகவும் தயங்கினார். "நன்றாக வாதிட வேண்டும்' என, நான் அவரை ஊக்கப்படுத்தினேன். இன்று அவர் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவ்வாறு அல்டமாஸ் கபீர் கூறினார்.

திங்கள், 17 ஜூன், 2013

தமிழ்நாடு வக்ப்வாரிய உறுப்பினர்கள் தேர்தல் : எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வேட்பு மனுதாக்கல்

தமிழ்நாடு வக்ப்வாரிய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற பிரிவு உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தலை தமிழக அரசு வக்பு வாரியம் அறிவிப்பு செய்தது .

இன்று ,காயிதே மில்லத் பேரவை சர்வேதேச ஒருங்கிணைப்பாளரும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் வக்பு வாரிய உறுப்பினருக்கான  தனது வேட்புமனுவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர் முன்னிலையில் தமிழக அரசு தலைமை செயலகத்தில் சிறுபான்மை நலத்துறை இனைசெயலாளரும் தேர்தல் அதிகாரியுமான  சாமிநாதனிடம் தாக்கல் செய்தார் .

நிகழ்ச்சியில் மாநில செயலாளர் திருப்பூர் சத்தார் மற்றும் வக்ப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர் .

கட்டாய திருமண பதிவுச் சட்டத்தை காட்டி இஸ்லாமிய திருமணங்களை தடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் : ஜமாத்துல் உலமா சபை கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்உலமா  சபையின் தலைவர் எம். அப்துல் அஹது காஷிபி தலைமையில் முஸ்லிம்கள் அளித்த மனுவில்:

முஸ்லிம் தனியார் சட்டம் வழங்கிய திருமணச் சட்டத்தின் அடிப்படையில், பெண்கள் பருவத்தை அடைந்துவிட்டாலே, திருமணம் செய்வதற்கு தகுதி பெற்று விடுகிறார்கள். இந்த சட்ட உரிமையை சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ, உச்ச நீதிமன்றமோ பறிக்க முடியாது. இது முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த அடிப்படை உரிமையாகும்.

ஆனால் சமீப காலமாக குழந்தைத் திருமண தடைச் சட்டம் என்ற பெயரில் பருவமடைந்த முஸ்லிம் பெண்களின் திருமணத்தை, மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் தடுத்து நிறுத்தப்படுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய, வாழ்வியல் அடிப்படை உரிமையை சட்டத்தின் காவலர்களே அலட்சியம் செய்வது வேதனையளிக்கிறது. இந்த சட்ட விதிமீறல் இனியும் தொடரக் கூடாது. எனவே இந்த கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்களித்து, பள்ளிவாசல்களில் செய்யும் பதிவையே அரசுப் பதிவாக ஏற்க வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் தற்போது களை கட்டியுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

இதமான காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் பூங்காவை சுற்றி பார்த்து அதன் அழகை கண்டு ரசிக்கின்றனர். தற்போது அவர்களுக்கு கூடுதல் பொழுது போக்கு அம்சமாக படகு சவாரி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

குற்றாலம் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் பெருகிவிட்டதையடுத்து அங்கு படகு சவாரி நேற்று தொடங்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் படகு சவாரியை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் சரத்குமார், நாராயணன், வீட்டு வசதி வாரியத்தலைவர் முருகையாபாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றாலத்தில் படகுசவாரி தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். முதல் நாளிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

தமிழக அமைச்சரவை மாற்றம்: 2 பேர் நீக்கம், 2 பேர் நியமனம்


தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சி.த.செல்லபாபண்டியன், முகமது ஜான் விடுவிக்கப்பட்டு, புதிய அமைச்சர்களாக எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சண்முகநாதனுக்கு சுற்றுலாத்துறையும், அப்துல் ரகீமுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த பச்சைமாலுக்கு தொழிலாளர் நலத்துறையும், பி.செந்தூர் பாண்டியனுக்கு இந்து அறநிலையத்துறையும், எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் தமிழக கவர்னர் ரோசய்யா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் நாளை மாலை 4.45 மணிக்கு பதவியேற்கின்றனர்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

மரைன் இன்ஜினியரிங் படிப்பு


கடல் மற்றும் கடல் சார்ந்தவற்றைப் பற்றி அறிய உதவும் மரைன் இன்ஜினியரிங் துறை இன்று டாப் 10 துறைகளில் ஒன்று என்று கூறலாம். கப்பல் மற்றும் கடல் போக்குவரத்து வாகனங்களுக்கு மிகவும் அடிப்படையான துறையாக விளங்குவதும் இத் துறை தான்.

நாடிகல் ஆர்க்கிடெக்சர் மற்றும் கடல் அறிவியலைப் படிப்பது இது. கப்பல் ஒன்றில் தொழில்நுட்ப மேலாண்மைக்கு பயன்படுவதும் மரைன் இன்ஜினியரிங் தான். கப்பல் ஒன்றின் இயந்திரங்களைத் தேர்வு செய்வது, டிசைன் செய்வது போன்ற அத்தியாவசியப் பணிகளை மரைன் இன்ஜினியர்கள் தான் செய்கிறார்கள். இது போலவே கப்பலின் இன்ஜின் அறையை மேலாண்மை செய்வதும் இவர்கள் தான்.

கரையிலிருந்து தள்ளியே இத்துறைப் பணிகளை ஒருவர் மேற்கொள்வதால் பொதுவாக இத் துறையினர் பெறும் சம்பளமான மிக மிக கவர்ச்சிகரமானதாக அமைகிறது. பொதுவாக இப் படிப்பை முடிப்பவர்கள் வேலையில்லாமல் இருப்பதைக் காண முடியாது. பொதுத்துறை கப்பல் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை கப்பல் நிறுவனங்கள் என எண்ணற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கின்றன.

இத்துறையில் பி.இ., மரைன் இன்ஜினியரிங் படிப்பு தான் முக்கிய படிப்பாக அமைகிறது. மேலும் நாடிகல் சயின்ஸ் பி.இ., படிப்பும் தரப்படுகிறது. இதில் பட்டயப் படிப்பும் சில நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. +2ல் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தைப் படித்திருப்பவர்கள் மட்டுமே இவற்றில் சேர முடியும். நல்ல உடற்தகுதியைப் பெற்றிருப்பதும் முக்கியமான தாகக்கருதப்படுகிறது.

மதுரை அருப்புக்கோட்டை சாலையிலுள்ள ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாடிகல் சயின்ஸ் நிறுவனமானது தமிழ்நாட்டில் இப்படிப்பைத் தரும் முன்னணி நிறுவனமாகும்.

சனி, 15 ஜூன், 2013

தடயறிவியல் (FORENSIC) படிப்புகள்

தடயறிவியல் படிப்பு பெரும்பாலும் மாணவர்களிடையே அதிகம் பிரபலமடையாத படிப்பாகும். அதிகம் பிரபலமடையாவிட்டாலும், ஏராளமான வேலை வாய்ப்பை வழங்கும் படிப்பாக தற்போது இது விளங்குகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு தற்போது குற்றங்களும் வளர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு குற்றத்தையும், அந்தந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் நிபுணர்களைக் கொண்டு  ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே, தற்போது தடயவியல் துறை நிபுணர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும், எம்பிபிஎஸ் தடயறிவியல் படித்து பணியாற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், அத்துறையில் முறையாக மாணவர்களுக்குக் கற்பிக்க ஆளே இல்லாத நிலை நிலவுகிறது.

பல முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படிப்பு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தாத ஒரேக் காரணத்தால் தற்போது பின்தங்கியுள்ள படிப்பாக இருக்கிறது.

ஒரு குற்றம் நடந்த விதத்தை ஆராய்வு செய்யும் முறையான பயிற்சி அளிப்பதே தடயறிவியல் படிப்பாகும்.

நாட்டில் சட்டத்தை நிலைநாட்டவும், குற்றவாளியை குற்றவாளி என நிரூபிக்கவும், குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் தடயவியல் நிபுணர்களின் பணி இன்றியமையாததாக உள்ளது.  மேலும், இப்பணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான அனுபவத்தைத் தரும் என்பதால் எப்போதுமே இத்துறையில் ஆர்வத்தோடு பணியாற்ற இயலும்.

தடய ஆய்வுத் துறையில் உள்ள உட்பிரிவுகள்

தடய ஆய்வு தொல்லியல்

தடயறிவியல் உயிரியியல்

தடயறிவியல் பொருளாதாரவியல்

தடயறிவியல் பொறியியல்

தடயறிவியல் அறிவுத்திறனியல்

தடயறிவியல் மொழியியல்

தடயறிவியல் உளவியல்

தடயறிவியல் திசுவியல்

தடயறிவியல் மானுடவியல்

தடயறிவியல் தொழில்நுட்பவியல்

எம்.டி. தடயறிவியல் மருத்துவம்

எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டில் தடயறிவியல் பாடம் வருகிறது. அதில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் முதுகலை மருத்துவப் படிப்பாக எம்.டி. தடயறிவியல் மருத்துவம் பிரிவை எடுத்துப் படிக்கலாம். இதனை முடிப்பவர்கள் பிரேத பரிசோதனை செய்யலாம். மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றலாம். தமிழகத்தில் இப்படிப்பினை முடித்தவர்களுக்கு தற்போது கடும் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, இப்படிப்பை முடிப்பவர்களுக்கு உடனடி வேலை உறுதி.

பி.எஸ்சி., தடயறிவியல்
பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்துப் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். இதனை தமிழகத்தில் ஒரு சில கல்வி நிறுவனங்களே அளிக்கின்றன. தடய அறிவியல் படிப்பினை வழங்க சிறப்பு கல்வி நிறுவனங்களும் உள்ளன.  அவற்றிலும் இப்படிப்பை மேற்கொள்ளலாம். இதில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பிரிவை தேர்வு செய்து படிக்க வேண்டும். அத்துறையில் அடிப்படை விஷயங்களை இப்படிப்பு கற்றுத்தரும்.

எம்.எஸ்சி., தடயறிவியல்
ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டத்தை அறிவியல் பாடப்பிரிவில் முடித்தவர்கள் எம்.எஸ்சி., தடயறிவியல் படிப்பில் சேரலாம். குறிப்பிட்ட சில பிரிவுகள் இப்படிப்பில் வழங்கப்படும். அதனை தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். தற்போது சைபர் பாரன்சிக் எனப்படும் தொழில்நுட்ப தடயறிவியல் படிப்பிற்கு மாணவர்களிடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதில் எம்.பில். ஆராய்ச்சி என மேற்கொண்டு படித்துக் கொண்டே செல்லலாம்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
ஆசியன் போரன்சிக் சயின்ஸ் அகாடமி, சென்னை

சென்னை பல்கலைக்கழகம், சென்னை

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

குற்றவியல் மற்றும் தடயவியல் துறை நிறுவனம், புது தில்லி

லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ

மத்திய தடயவியல் துறை ஆய்வகம், ஹைதராபாத்

மத்திய தடயவியல் துறை ஆய்வகம், சண்டிகர்

மத்திய தடயவியல் துறை ஆய்வகம், கொல்கட்டா ஆகியவை இத்துறையில் பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன.

பல தொலைநிலைக் கல்வி மையங்கள் தொலைதூரக் கல்வி முறையிலும் இப்படிப்பை வழங்கி வருகின்றன.

தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., சைபர் போரன்சிக்ஸ் அன்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு அங்கு குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, தகவல் தொழில்நுட்ப முறையில் செய்யப்படும் குற்றங்களை கண்டுபிடிக்க நிபுணர்களின் தேவை அதிகரிப்பதற்கேற்ப, அத்துறையில் புதிய மேற்படிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. குற்றங்களை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள கோப்புகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் இப்பாடப்பிரிவில் கற்றுத்தரப்படுகிறது.

தனித்திறன் உள்ள மாணவர்கள்
இப்படிப்பை எல்லோரும் எடுத்துப் படித்து சாதித்துவிட முடியாது. ஒரு பிரச்சினையை அணுகும் முறையில் நீங்கள் மற்றவர்களை விட வேறுபடுகிறீர்களா.. சின்ன சின்ன விஷயங்களைக் கூட தீவிரமாக யோசித்து அதில் உள்ள நுணுக்கங்களை கண்டறியும் ஆற்றல் உள்ளவரா? மிகவும் சிக்கலான பிரச்சினைகளை எளிதாக தீர்வு காணும் திறன் பெற்றவர்களா அவ்வாறு எனில் உங்களுக்கு தடயவியல் படிப்பு நிச்சயம் சிறந்த படிப்பாக அமையும். ஒவ்வொரு வேலையையும் சவாலாக எடுத்துக் கொண்டு பணியாற்றும் திறன் நிச்சயம் இத்துறையில் படித்தவர்களுக்கு இருக்க வேண்டிய ஒன்றாகும்.

வேலை வாய்ப்பு
இத்துறையில் படித்து முடித்து நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவை தற்போது அரசுத் துறைகளில் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் எம்.டி. தடயறிவியல் முடித்து பணியாற்றும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் தடயறிவியல் மருத்துவர்களோ, பேராசிரியர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு தடயறிவியல் துறை நிபுணர்களுக்கு பற்றாக்குறை இருப்பதால் இப்படிப்பை முடித்த உடன் அரசு வேலை வாய்ப்பு பெறலாம் என்பது உறுதியாகிறது.

இதில்லாமல், காவல்துறையிலும், சட்டத்துறையிலும், புலனாய்வு அமைப்புகளிலும் உடனடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள்.பொதுவாக இத்துறையில் பெண் நிபுணர்கள் இருப்பதில்லை என்ற போதும், தற்போது இத்துறையின் சில குறிப்பிட்ட பிரிவுகளில் பெண்களும் படித்து இத்துறையில் சிறந்த பணி வாய்ப்பைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடியை 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக பா.ஜ., அறிவிக்க கூடாது : ஐக்கிய ஜனதாதளம்

தங்களின் அடிப்படை செயல்பாடுகள் குறித்து பா.ஜ., உடனடியாகவும், வெளிப்படையாகவும் பதிலளிக்க வேண்டும்; தனிப்பட்ட வாக்குறுதிகள் எதையும் செய்து விடாது; தனிப்பட்ட ஒருநபர் தனது திறமையால் அனைவரையும் தன் வசப்படுத்தலாம்; ஆனால் அவர் நாட்டின் பிரதமர் பதவிக்கு ஏற்றவராக இருக்க முடியாது; தகுதி அடிப்படையில் பார்த்தால் மோடி பிரதமர் பதவிக்கு ஏற்றவர் அல்ல;

 பா.ஜ., தனது பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க கூடாது; அவ்வாறு செய்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகும் எனது முடிவு குறித்து பரிசீலனை செய்ய தயாராக உள்ளேன்; மோடியை முன்னிறுத்தி கட்சி செயல்படுமானால் பா.ஜ., உடனான ஐக்கிய ஜனதா தளத்தின் 17 ஆண்டு கால உறவு முறிவதை யாராலும் மாற்ற முடியாது; இவ்வாறு பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் முடிவு :
ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து நேற்று முதல் கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. கட்சியின் முடிவு குறித்து நிதிஷ்குமாரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தங்களின் இறுதி முடிவை இன்று (ஜூன் 15ம் தேதி) அறிவிக்க உள்ளதாக சரத் யாதவ் ஏற்கனே தெரிவித்திருந்தார்.

கூட்டணியை ‌காப்பாற்றுவதற்காக ஐக்கிய ஜனதா கட்சியை சமாதானப்படுத்த அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், கட்காரி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வியாழன், 13 ஜூன், 2013

காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வியில் 174 படிப்புகள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் 174 புதிய பாடத்திட்டங்கள் ஜுலை ஒன்றாம் தேதி முதல் துவங்கப்படும் என்று துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியின் வழியில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களல் தொலைதூரக் கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த மையங்களை மேம்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக பல்கலைக்கழக உயர்மட்டக் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இது நல்ல முறையில் செயல்படும் மையங்கள் தொடர்ந்து செயல்படவும், மற்ற மையங்களை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுவாக பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்துக்கு தொலைநிலைக் கல்வி இயக்ககம் தான் முதுகெலும்பு. இந்த இயக்ககத்தை திறம்பட செயல்படுத்தி தரமான கல்வியின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வருவாயை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.

உலகத் தரத்தில் மதுரை பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டங்கள் அமையும் வகையில் நிபுணத்துவம் கொண்ட பேராசிரியரிகள் கொண்ட குழு மூலம் 174 புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த பாடத்திட்டங்களுக்கு பல்கலைக்கழக ஆட்சிக்குழு, ஆட்சி மன்றக் குழு ஆகியவை ஒப்புதல்  அளித்துள்ன. இதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் இந்த புதிய பாடத்திட்டங்கள் தொலைநிலைக் கல்வியில் துவங்கப்படும். இதன் மூலம் மதுரை பல்கலைக்கழகத்தில் தொலைநிலையில் கல்வியில் பயிலும் 1 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றார்.

செவ்வாய், 11 ஜூன், 2013

எம்.எல்.ஏ.,வும் போச்சு; எம்.பி.,யும் போச்சு: பாண்டியன் தலைமையில் இந்திய கம்யூ.,அவலநிலை

ராஜ்யசபா தேர்தலில், ஐந்து இடங்களில் அ.தி.மு.க., போட்டியிடும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பால், தேர்தல் களத்திலிருந்து இந்திய கம்யூ., கட்சி வெளியேற்றப்பட்டு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில், ஒரு எம்.எல்.ஏ., ஒரு எம்.பி., இடங்களை, அ.தி.மு.க.,விடம், பாண்டியன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் இழந்துள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

புதுக்கோட்டை எம்.எல்.ஏ.,வாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு, இடைத் தேர்தல் நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் வாய்ப்புத் தராமல், கூட்டணிக்கு தலைமை வகிக்கும், அ.தி.மு.க., வேட்பாளரை நிறுத்தி வெற்றியும் பெற்றது. ராஜ்யசாபாவில் பதவி முடிவுக்கு வரும், ஆறு எம்.பி.,க்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜாவும் ஒருவர். அந்த இடத்தைத் தக்க வைக்கவேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் விரும்பினர். ஆனால், அந்த இடத்தில் அ.தி.மு.க., வேட்பாளரை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால், ராஜ்யசபா தேர்தலில், இந்திய கம்யூ., கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ராஜ்யசபா தேர்தல்:
ராஜ்யசபா தேர்தலில் காலியாகும் 6 எம்.பி., இடங்களில், 5 இடங்களை வெற்றிபெற அ.தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது. இதில், 4 இடங்களை தன்னிச்சையாகவும், ஒரு இடத்தை கூட்டணிக் கட்சிகளோடும் வெல்ல முடியும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் வெல்லும் இடத்தை, இந்திய கம்யூ., கட்சிக்கு அளிக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், இந்திய கம்யூ., கட்சியில், யார் போட்டியிடுவது என்பதும் விவாதத்துக்கு உள்ளானது. எம்.பி., பதவிக் காலம் முடியும், தேசிய செயலர் டி.ராஜாவை மீண்டும் எம்.பி.,யாக்க வேண்டும் என, ஒரு பிரிவினரும், மாநில செயலர் தா.பாண்டியனை எம்.பி.,யாக்க வேண்டும் என, மற்றொரு பிரிவினரும் வலியுறுத்தியதால், வேட்பாளரை முடிவு செய்வதில் பெரும் பின்னடைவு, கட்சியில் ஏற்பட்டது. அ.தி.மு.க.,வின் ஆதரவைப் பெற்ற பின், வேட்பாளரை முடிவு செய்யலாம் என, முடிவு செய்து, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, கட்சியின் மூத்த தலைவர் பரதன், சுதாகர் ரெட்டி ஆகியோர், சென்னையில் முகாமிட்டனர். ஆனால், இவர்களது சந்திப்பு நடக்கவில்லை . ஆனால், 5 எம்.பி., இடங்களிலும், அ.தி.மு.க.,வே போட்டியிடும் என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை வெளியிட்டார்.

யாருக்கு ஆதரவு:
இதுகுறித்து, இந்திய கம்யூ., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எங்களிடம், ராஜ்யசபா எம்.பி., தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ., பலம் இல்லை. கூட்டணிக் கட்சியின் ஆதரவுடன் தான் போட்டியிட முடியும். கூடுதல் எம்.எல்.ஏ.,க்களை வைத்திருக்கும் அ.தி.மு.க., தானே போட்டியிடுவதாக முடிவு செய்துவிட்டது. இதில், வேறு எந்தக் கருத்தையும் கூறுவதற்கில்லை. எங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டளிப்பதா என்பதை, கட்சி தான் முடிவு செய்யும். அதற்கு, இன்னும் கால அவகாசம் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர் படிப்பு

வயர்லெஸ் சாதனங்களான மொபைல் போன், ரேடியோ போன்றவற்றை பயன்படுத்த தேவையான சமிக்ஞைகளை (சிக்னல்கள்) உருவாக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளை கையாள்பவர்களே ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர்கள். சுருக்கமாக "ஆர்.எப். இன்ஜினியர்கள்" என்று அழைப்படுகிறார்கள்.

நவீன தகவல் தொழில்நுட்பங்களான ஜி.எஸ்.எம்., (குளோபல் சிஸ்டம் பார் மொபைல் கம்யூனிகேசன்), சமிக்ஞைகளை பெற மற்றும் அனுப்ப உதவும் பல்வேறு வகையான ஆன்டனாக்கள் போன்றவற்றை பற்றிய தொழில்நுட்பங்களை ஆர்.எப். இன்ஜினியர்களுக்கு நன்கு தெரியும்.

இது தவிர அதிக திறன் வாய்ந்த டிரான்ஸ்மிட்டர்கள், வயர்லெஸ் கருவிகள் போன்றவற்றின் தொழில்நுட்பங்களை பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்.

தேவையான தகுதிகள்
பிளஸ்2 வில் இயற்பியல் பாடத்தை எடுத்து படித்திருப்பது இத்துறைக்கு தேவையான அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது. பி.இ., எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தவர்களும் ஆர்.எப் இன்ஜினியர்களாக ஆக முடியும். ரேடியோ ப்ரீக்வென்சி சார்ந்த இளநிலை, முதுநிலை, பிஎச்.டி., மற்றும் டிப்ளமோ படிப்புகளை இந்தியாவிலேயே படிக்கலாம். சான்றிதழ் படிப்புகளாகவும் இவை கற்றுத்தரப்படுகின்றது.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புடன் சேர்ந்த பயிற்சியாக இவற்றை வழங்குகின்றன.

வேலைவாய்ப்பு
பெருகி வரும் மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள், எப்.எம் வானொலி நிலையங்கள் ஆகியவற்றில் ஆர்.எப் இன்ஜினியர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் இந்தியாவிலேயே உள்ளது. வெளிநாடு களிலும் இவர்களுக்கு நல்ல மவுசு உள்ளது.

கல்வி நிறுவனங்கள்
* ஐ.ஐ.டி., காரக்பூர்
* ஐ.ஐ.டி., கவுகாத்தி
* மும்பை பல்கலைக்கழகம், மும்பை
* வித்ய விகாஸ் இன்ஸ்டிடியூட், மைசூர்
* பி.என்., கல்லூரி, லக்னோ
* பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
* அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி
* டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி

கடையநல்லூர் சேயன் டிரேடர்ஸ் இல்லத் திருமணம்


திங்கள், 10 ஜூன், 2013

மனித உரிமைகள் தொடர்பான படிப்பு

மனித உரிமைகள் என்பது வேகமாக வளர்ந்து வரும் கல்விப் பிரிவாகவும் மாறியுள்ளது. இப்பிரிவு படிப்புகளை முடிப்பவர் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற முடிகிறது. வெறும் தகுதிகளைத் தாண்டி சிறப்பான தகவல் தொடர்புத் திறன் மற்றும் மேம்பட்ட பொது அறிவைப் பெற்றிருப்போர் இத் துறையில் சிறப்பான சம்பளத்தையும் எதிர்காலத்தையும் பெறுகிறார்கள்.

எனவே மனித உரிமைகள் தொடர்பான படிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில் சந்தேகமில்லை. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலைதூரக் கல்வி முறையில் இப் பிரிவில் 2 ஆண்டுபட்ட மேற்படிப்பைத் தருகிறது. பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net. இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும்.

விண்ணப்பம் பெறும் முகவரி
Indian Institute of Human Rights,
A16, Paryavaran Complex, (HT), SaketMaidangarhi Marg,
New Delhi – 110 030.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலார் அணை நீர்மட்டம் உயர்வு

பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 5 அடியும், சேர்வலார் அணையின் நீர்மட்டம் சுமார் 16 அடியும் அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 53.35 அடியாக இருந்தது.

இந்நிலையில் காரையார் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடி அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி 58.80 அடியானது. அணைக்கு விநாடிக்கு 3609.60 கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. அணைப்பகுதியில் 27 மி.மீ. கீழணையில் 11 மி.மீ. அளவிலும், சேர்வலாரில் 9 மி.மீ, அம்பையில் 13.2 மி.மீ, சேரை., 6 மி.மீ. அளவில் மழையின் அளவு பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் 65.12 அடியாக இருந்த சேர்வலார் அணையின் நீர்மட்டம் நேற்று சுமார் 16 அடி அதிகரித்து 81.04 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.04 அடியானது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்துறை வாய்ப்புகளுக்கான மேம்பட்ட படிப்புகள்

எதிர்கால உலகில், பெரியளவில் வளர்ச்சியடையக்கூடிய சில துறைகளைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். அதன்மூலம் நமது வருங்கால வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

கோஸ்டல் இன்ஜினியரிங் படிப்பு
அரசு ஏஜென்சிகள், உள்ளூர் அத்தாரிட்டிகள் மற்றும் பொறியியல் கன்சல்டன்டுகள் ஆகியோரிடம், கோஸ்டல் இன்ஜினியரிங் பணியை மேற்கொள்ள விரும்பும் பொறியாளர்கள் அல்லது பிசிகல் சயின்டிஸ்டுகள் ஆகியோருக்காக இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.

சமூக மற்றும் பொருளாதார நலன்களை முன்னிட்டு, உலகின் கடற்கரைகளை பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் போன்ற செயல்பாடுகளுடன் சம்பந்தப்பட்டது இந்த கோஸ்டல் இன்ஜினியரிங். இதுதொடர்பாக செயல்படும் நிறுவனங்களில் பணிவாய்ப்பு மற்றும் பணி உயர்வை எதிர்பார்க்கும் பட்டதாரி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கென்று, கோஸ்டல் இன்ஜினியரிங் துறையில் வழங்கப்படும் முதுநிலை படிப்புகள் துணைபுரிகின்றன.

அந்தப் பாடத்திட்டமானது, Wave theory, Coastal processes and modern techniques in coastal data collection, analysis such as GIS and remote sensing, numerical modelling techniques, issues of environmental law and the applications of current coastal defence guidelines போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.

வேளாண் அறிவியல்கள்
வேளாண்மை என்பது மனிதனின் உயிர்வாழ் அடிப்படையான உணவு உற்பத்தி தொடர்பானது மட்டுமின்றி, அவனது ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. எனவே, இதைக் கையாள, முறையான அறிவியல் அடிப்படைகளைக் கையாள வேண்டியுள்ளது.

சுற்றுச்சூழலில் மேற்கொள்ளப்படும் வேளாண் முறைகளின் தாக்கம் பற்றிய பொதுமக்களின் கவலை மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு உள்ளிட்ட சில அம்சங்கள், முக்கிய ஆராய்ச்சி கருத்தாக்கங்களாக உள்ளன.

இவைதவிர, Animal nutrition, plant stress tolerance, nutrient and soil management, composting, crop protection, invertebrate ecology and the health, welfare of livestock போன்றவையும் ஆராய்ச்சிக்கு ஏற்றவையாக உள்ளன.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் தொழில்
இந்த 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில் துறைகளாக, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் வளர்ந்து வருகின்றன. ஒட்டுமொத்த உலக வேலைவாய்ப்பில், 10%க்கும் மேல், இத்துறையில் உள்ளது. இத்துறைகளில், ஒருவரை, மேலாளர் நிலைக்கு உயர்த்தக்கூடிய பொருத்தமான படிப்புகள், இன்றைய நிலையில் பரவலாக வழங்கப்படுகின்றன.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில், தங்களின் மேலாண்மை திறன்களை வளர்த்துக் கொள்ளும் அதேவேளையில், வியூக நிலையை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் நபர்களுக்கு இந்தப் படிப்புகள் பேருதவி புரியும்.

துணைநிலை மீன் உயிரியல்
உலகளாவிய மீன்வள சேமிப்பு குறைந்து வருதல், சுற்றுச்சூழல் மாறுபாட்டால், பல அரிய கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துபோதல், கடலில் ரசாயனம் உள்ளிட்ட பொருட்கள் கலப்பதால் ஏற்படும் மீன்களின் அழிவு போன்றவை, உலகளவில் கவலை தரத்தக்க விஷயங்களாக உள்ளன.

உலகளாவிய மீன்வளம் குறைந்து வரும் அதேநேரத்தில், மீன் உணவிற்கான தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த நூற்றாண்டில், வளர்ப்பு மீன் பெருக்க நடவடிக்கையானது, முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இத்துறையில் பயிற்சிபெற்ற நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது.

மீன்கள் சிறப்பாக வளர்வதற்கான செயற்கை உணவுகளை கண்டுபிடித்தல், மீன்களை தாக்கும் நோய்கள் குறித்து பரிசோதித்தல் மற்றும் அவற்றுக்கான மருந்துகளை கண்டுபிடித்தல் போன்றவை முக்கியமான அம்சங்கள்.

இத்துறை போன்றே பெரிதாக வளர்ந்துவரும் இன்னொரு முக்கிய துறை எதுவெனில், அழகு மீன்கள் மற்றும் நீர்த்தாவர வணிகம். எனவே, இதுதொடர்பான உணவளித்தல், பராமரித்தல், மீன் அருங்காட்சியக மேலாண்மை மற்றும் புதிய தொழில்நுட்ப தாக்கம் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. Fish toxicology என்பதும், இப்படிப்பின் மிக முக்கியமானதொரு அம்சமாக திகழ்கிறது.

தியரடிகல் மற்றும் கம்ப்யூடேஷனல் நியூரோசயின்ஸ்
இந்த பல்அம்ச படிப்புகள், மூளை இயக்கம் பற்றிய கோட்பாடுகள், மூளை நரம்பு செயல்பாட்டின் கணித மற்றும் கம்ப்யூடேஷனல் மாடலிங், நியூரோசயின்ஸ் டேட்டா அனலிசிஸ் தொடர்பான புள்ளியியல் நுட்பங்கள் உள்ளிட்ட பலவிதமான அம்சங்களைப் பற்றிய விரிவான அறிவை இப்படிப்பு வழங்குகிறது.

நியூரோ சயின்ஸ் என்பது, 21ம் நூற்றாண்டின், மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு முக்கிய படிப்பாகும். நடைமுறை ரீதியிலான அணுகுமுறை மற்றும் நுட்பங்கள் இதில் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மூளை நடவடிக்கையை பதிவுசெய்யும் மற்றும் இமேஜிங் செய்யும் செயல்பாடானது, மூளை இயக்கத்தின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றிய விரிவான தரவுகளைத்(datas) தருகிறது.

செல்லுலர், சர்க்யூட் மற்றும் சிஸ்டம் நிலையில், ஒரு மூளையின் நுண்ணிய செயல்பாடுகளைப் பற்றிய பலவிதமான நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வழியேற்படுத்துகிறது.

ஞாயிறு, 9 ஜூன், 2013

மாணவர்களிடம் வரவேற்பு இல்லாததால் பாலிடெக்னிக்கில் 25 படிப்புகள் நிறுத்தம்

தமிழகத்தில், 50 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இக்கல்லூரிகளில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வேதியியல், தோல், அச்சு, நெசவு உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட பாடங்களில், டிப்ளமோ, சான்றிதழ், முதுகலை டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. பாலிடெக்னிக் கல்லூரிகளில், உடனடி வேலை வாய்ப்புளை பெற்று தரும், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர மட்டுமே, மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தோல், அச்சு, நெசவு உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, சொற்ப அளவிலேயே உள்ளது. பல பாலிடெக்னிக் கல்லூரிகளில், அறிவித்துள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு குறைவாகவே, விண்ணப்பங்கள் வந்துள்ளதாக துறையினர் தெரிவித்துள்ளனர்.

சான்றிதழ் படிப்பு, முதுகலை டிப்ளமோ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும், ஆண்டுதோறும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. டிப்ளமோ முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பில், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுப்பதால், முதுகலை டிப்ளமோவில் சேர முன் வருவதில்லை. இப்படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை, 1 சதவீதம் கூட இருப்பதில்லை என, கூறுகின்றனர். கடந்த, ஐந்து ஆண்டுகளாக, முதுகலை படிப்பில் சேர, மாணவர்களின் ஆர்வம் குறைந்ததையடுத்து, 22 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள, வெல்டிங் டெக்னாலஜி, பேக்கரி மற்றும் சாக்லெட் தயாரிப்பு உள்ளிட்ட, 20 முதுகலை டிப்ளமோ பாடங்களை, அரசு நீக்கியுள்ளது. மேலும், இரண்டு டிப்ளமோ படிப்புகள், மூன்று சான்றிதழ் படிப்புகளும் நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடந்தாண்டு, நகரமைப்பு, பவுண்டரி, அச்சு தயாரித்தல், "டிவி' தொழில்நுட்பம் உள்ளிட்ட, 16 படிப்புகளை அரசு கைவிட்டு உள்ளது.

இதுகுறித்து, துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பாலிடெக்னிக் கல்லூரிகளில், ஓராண்டு சான்றிதழ் படிப்புகளை படிக்க, மாணவர்கள் முன் வருவதில்லை. அதற்கு பதில், தொழிற்சாலையில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கும், ஐ.டி.ஐ., படிப்பில் சேரவே, ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சான்றிதழ் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, குறைந்து வருகிறது. மூன்றாண்டு டிப்ளமோ முடிக்கும் மாணவர்கள், மேல்படிப்பில், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். பல மாணவர்கள், தொலைதூர கல்வி வழியாகவும் பொறியியல் படிப்பை தொடருகின்றனர். இதனால், முதுகலை டிப்ளமோவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, சொற்ப அளவிலேயே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சேது சமுத்திர திட்டத்தை முடக்க முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கலைஞரின் 90-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நடந்தது. பகுதி செயலாளர் கோ.ஏகப்பன் தலைமை தாங்கினார்.

வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 1990 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,’’அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை முடக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. 150 ஆண்டு கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட்டு செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அப்போதைய செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்ட தலைவர்களெல்லாம் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆனால், இந்த திட்டத்தை நிறுத்த சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. இதை எதிர்த்து பேசாமல் வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களெல்லாம் மவுனமாக இருப்பது ஏன்?

கடந்த 2 ஆண்டு ஆட்சியில் சட்டமன்றம் முதல்வரின் புகழ்பாடும் அலுவலகமாக செயல்படுகிறது. கேள்வி நேரம் என்பது கேலி பேசும் நேரமாக மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சியைவிட அ.தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்து இருப்பதாக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் போலீஸ் இணைய தளத்தில் பார்த்தால் கடந்த ஒரு ஆண்டில் கற்பழிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்து இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. சமச்சீர் கல்வி தி¢ட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தது.

இதனால் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்து வரும் ஓரே இயக்கம் தி.மு.க. தான்’’என்று தெரிவித்தார்.