விசாரணை கைதிகளாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். புளியங்குடியில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
புளியங்குடியில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மத்தி, மாநில அரசின் 10 சதவீத இடஒதுக்கீடு கோரியும், சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரியும் மாபெரும் விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது.
காயிதே மில்லத் திடலில் வைத்து நடந்த கூட்டத்திற்கு மைதீன்வாவா தலைமை வகித்தார். நகர தலைவர் செய்யது சுலைமான், மாவட்ட துணைத்தலைவர் மைதீன்பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அப்துல் வகாப் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத், மாவட்ட தலைவர் துராப்ஷா, மாவட்ட செயலாளர்கள் மீரான் மைதீன்,செய்யது முகம்மது, மாவட்ட பொருளாளர் காதர் மைதீன், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்காதர், முன்னாள் நகர செயலாளர் அப்துல் ரகீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட் தீர்மானங்கள்:
1.தென்காசி ரயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடித்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.
2.மத்திய மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
3.பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும்.
4.குடிநீர் இணைப்புகளுக்காக புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றது அப்பணியை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. புதிய இணைப்புகள் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கும் போது பொதுமக்களுக்கு சிரமம் இன்றி நகராட்சி தனது சொந்த செலவில் இணைப்பு வழங்க நகராட்சியை கேட்டுக்கொள்ளப்பட்டது.
5..வலையர் ஊரணியின் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் முகம்மது இஸ்மாயில், மாநில இளைஞர் லீக் துணைச் செயலாளர் முகம்மது அலி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முகம்மது அசன், காயல்பட்டினம் முகம்மது நாசர், கடையநல்லூர் நகர பொருளாளர் கோதரி, ஹைதர் அலி, பக்கீர் மைதீன், புளியங்குடி நகர இளைஞர் லீக் தலைவர் பக்கீர் ஒலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸ் நன்றி கூறினார்.
மத்திய மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வாழ்த்துக்கள். தென்றல் ஹமீது துபாய். (பொட்டல் புதூர்)
பதிலளிநீக்கு