கேட் (COMMOM ADMISSION TEST):
இது ஐ.ஐ.எம். எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் நடத்தும் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு. இந்தியாவில் மிக மிகக் கடினமாக தேர்வாக இது கருதப்படுகிறது. பொதுவாக இது நவம்பர்/டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.
எக்ஸ்.ஏ.டி. (XEVIAR'S INSTITUTE ADMISSION TEST):
சேவியர் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் எம்.பி.ஏ. படிப்புக்கான தேர்வு இது. இதுவும் பலத்த போட்டியை உள்ளடக்கியது. பொதுவாக இந்தத் தேர்வுக்கு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகிறது. டிசம்பருக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 50%க்கு குறைவாக பட்டப்படிப்பில் மதிப்பெண் பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வில் தகுதி பெற்றால் சேவியர் குழுமத்தில் உள்ள 41 கல்வி நிறுவனங்கள் நடத்தும் எம்.பி.ஏ. படிப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் பினான்சியல் மேனேஜ்மெண்ட் அண்ட் ரிசர்ச், லிபா, எம்.ஓ.பி.வி. கல்லூரி ஆகியவை எக்ஸ்.ஏ.டி. தகுதி பெற்றவரை தங்களது படிப்பில் அனுமதிக்கின்றன. இந்தியாவில் 31 நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
2 1/2 மணி நேரத்திற்கு நடத்தப்படும் அப்ஜக்டிவ் தேர்வைத் தொடர்ந்து விரிவாக ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் பகுதியும் இடம் பெறும்.
மேட் (MANAGEMENT APTITUDE TEST ):
இதை ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேசன் நடத்துகிறது. இது ஒரு தேசிய நுழைவுத் தேர்வாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கு பொதுவாக இது 4 தடவை நடத்தப்
படுகிறது. கணிதம், அனலிடிகல் திறன், ரீசனிங், பொதுத் திறன் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் அமைகின்றன.
இக்னோ ஓபன்மேட்: இந்தியாவின் புகழ்பெற்ற திறந்தவெளி பல்கலைகழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைகழகம் நடத்தும் எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு இது. இது ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது.
எப்.எம்.எஸ். (FMS):
டில்லி பல்கலைகழகத்தின் எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு இது.
பொதுவாக எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதம், டேட்டா இன்டர்பிரடேசன், லாஜிகல் எபிலிடி போன்றவற்றில் கேள்விகள் அமைகின்றன. 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை இதற்காக நீங்கள் உங்கள் பட்டப்படிப்பு படிக்கும் போதே தயாராகிக் கொண்டு வர வேண்டும். துல்லியமாகவும் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் கேள்விகளுக்கு பதிலளிப்பது மிக மிக அடிப்படையானது. இப்போதிருந்தே நுழைவுத் தேர்வு பாடத் திட்டத்திற் கேற்ப தயாராக வேண்டும். முடிந்தால் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து படிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக