Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 14 மே, 2013

வாந்தி-பேதிக்கு இந்திய விஞ்ஞானிகள் புதிய மருந்து கண்டுபிடிப்பு


வயிற்றுப் போக்குக்கு எதிராக போராடும் புதிய மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ரோட்டா வைரஸ் தாக்கி உயிரிழக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் லிமிடட் நிறுவனத்தைச் சேர்ந்த இந்திய விஞ்ஞானிகள், ரோடா வைரஸை எதிர்த்து போராடும் புதிய மருந்தினை கண்டுபிடித்து அதனை வெற்றிகரமாக சோதித்தும் பார்த்துவிட்டனர்.
இந்த மருந்தினை, குழந்தைகளுக்கு மூன்று தவணைகளாக கொடுத்தால், அவர்களுக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டு உயிரிழப்பது தவிர்க்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வயிற்றுப் போக்குகளைத் தடுக்கும் வெளிநாட்டு மருந்துகளின் விலையை விட மிகக் குறைந்த விலையில் இது விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த மருந்தினைக் கண்டுபிடிக்க மத்திய அரசும், பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும் இணைந்து சுமார் 100 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது . இம்மருந்து அமெரிக்கா மற்றும் இந்திய ஆய்வுக் கூடங்களில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கண்டுபிடித்துள்ள முதல் புதிய மருந்தான இது விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக