நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழக முஸ்லிம் இளைஞர் கள் விசாரணை என்ற பெயரால் சித்ர வதைக்கு ஆளாக்கப் பட்டுள்ளதை பற்றி மத்திய அரசின் கவனத் திற்கு கொண்டு செல்லவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக்குழு பிரதமரை சந்தித்து முறையிடுவது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் இன்று மே 11 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை பூந்தமல்லி நெடுஞ் சாலையில் உள்ள ஹோட்டல் அபூபேலஸ் நீலகிரி அரங்கில் நடைபெற்றது.
தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹமது சாஹிப் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரி யர்கே.எம். காதர் மொகிதீன், தேசியப் பொருளா ளர் கேரள அமைச்சர் பி.கே. குஞ்ஞாலி குட்டி, தேசிய துணைத் தலை வர்கள் உத்தரப் பிரதேச வழக்கறிஞர் இக்பால் அஹமது,
தேசியச் செயலாளர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம்.பி., அப்துஸ் ஸமது ஸமதானி எம்.எல்.ஏ., டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர், கொல்கத்தா சாஹின் ஷா ஜஹாங்கீர், மகாராஷ்டிரா ஷமீம் சாதிக்,
துணைச் செயலாளர்கள் உத்தரப்பிரதேசம் எம். மத்தீன் கான், பெங்களூர் சிராஜ் இப்ராஹீம் சேட், ஆம்பூர் அப்துல் பாஸித், ராஜஸ்தான் சர்புதீன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. மற்றும் அனைத்து மாநில தலைவர், செயலாளர்கள் விஷேச அழைப்பாளர்கள் உள்ளிட்ட 122 பேர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல்
கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில், பாசிச சக்திகளை வீழ்த்திட மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது என எடுக்கப்பட்ட முடிவை இச்செயற்குழு கூட்டம் மீண்டும் உறுதிபடுத்துகிறது.
நாடாளுமன்ற தேர்தலை தேசிய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சந்திக்க இ. அஹமது சாகிப் தலைமை யில் 11 பேர் கொண்ட அரசியல் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பணிகளை தீவிரப்படுத்த வும், இயக்க நிர்வாகிகளுக்கு வரலாறு அரசியல் மற்றும் அரசு நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்களை அறியச்செய்யும் நோக்கோடு நாடு முழுவதும் பயிலரங்கங்களை நடத்து வதும் என்றும்,பெங்களுரு, டெல்லி, மும்பை, கொல் கத்தா, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஆகிய 6 மண்டலங்களாக பிரித்து இவற்றை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
முஸ்லிம் சிறைவாசிகள்
அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிரந்தர நிவாரண உதவிகளை செய்ய தாரூல் ஹுதாவுடன் இணைந்து பணிகளை துரிதப் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
நாட்டின் பல்வேறு மாநிலங் களில் நீண்ட நாட்களாக விசாரணை சிறைவாசிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை மாவட்ட அளவிலான நீதிபதி களை கொண்டு ஆய்வு செய்து விடுவிப்பதற்கு மத்திய அரசு உரிய தாக்கீது பிறப்பித்தும் அதை மாநிலங்கள் செயல் படுத்தவில்லை. எனவே இந்த சிறைவாசிகள் விஷயத்தில் மத்திய அரசு நேரடி கவனம் செலுத்த வேண்டும்
மேலும், சமீபத்தில் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பந்தமாக தமிழ்நாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு கர்நாடகக்காவல் துறையினரின்சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முஸ்லிம் சிறை வாசிகள் விஷயமாக தேசிய தலைவர் இ. அஹமது தலைமை யில் தேசிய நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக்குழு பிரதமரை சந்தித்து முறையிடு வது என முடிவு செய்யப்பட்டது.
வேலைவாய்ப்பு தேர்வுகளில் அரபு மொழி மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான பொதுத் தேர்வு களில் அரபி மொழி விருப்பப் பாடமாக இருந்தது. ஆனால் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அண்மையில் வெளி யிட்ட அறிவிப்பில், அரபி உள்ளிட்ட வெளிநாட்டு மொழி கள் இனி விருப்பப்பாடமாக இருக்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது முஸ்லிம்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்தியாவில் பள்ளிக்கல்வியிலும், இளங்கலை முதுகலை படிப்புக ளிலும், பல்கலைக்கழகங்க ளிலும் அரபி மொழி பயிற்று விக்கப்படுகிறது. இந்த படிப்பு களுக்கான பட்டங்களை மேல்நிலை கல்வித்துறையும், இந்திய பல்கலைக்கழக வாரிய கவுன்சிலும், பள்ளிக்கல்வி தேர்வு வாரியங்களும் அங்கீ கரித்துள்ளன. இது 2010ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையிலும் தெளிவுப்படுத் தப்பட்டுள்ளது.
மத்திய பள்ளி கல்வி வாரியம் மற்றும் மாநில அரசுகளின் கல்வி வாரியங்கள் அனைத்தும் இந்த பட்டங்களை அங்கீகரித் திருக்கும்போது யூ.பி.எஸ்.சி. திடீரென அரபி மொழியை நீக்கியிருப்பது மத்ரஸா கல்வி மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாகிப் பிரதமர் மன்மோகன்சிங்,ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை மே 09 ம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
எனவே அந்த மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு வேலைவாய்ப்புக்கான தேர்வு களில் மீண்டும் அரபி மொழியை இடம்பெறச்செய்யுமாறு இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது. கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை என்று ஆய்வுகள் திரும்பப் திரும்ப தெரிவித்து வரும் நிலையில் அந்த வாய்ப்பை வழங்குவதற்கு நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்றும், நீதியரசர் ராஜேந்திர சச்சார் பரிந்துரை களை அனைத்து மாநிலங் களும் அமல் படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் இ. அஹமது வலியுறுத்தியதை இக்கூட்டம் கவனத்தில் எடுத்து மத்திய அரசு இக்கோரிiக் கையை ஏற்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
சவூதியில் இந்தியர்கள் வேலைவாய்ப்பு
சவூதி அரேபியாவில் கொண்டுவரப்பட்டுள்ள நிதாகட் திட்டத்தின் மூலம் வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. அங்கு பணிபுரியும் இந்தியர்கள் ஏராளமானோர் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு உருவானதால் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யுமாறு சவூதி அரசிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைமை நேரில் வலியுறுத்தியது
இ. அஹமது சாகிப் மேற்கொண்ட இந்த முயற்சியின் பலனாக சவுதி அரசு இந்திய பணியாளர்கள் வேலை இழப்பதை தடுக்கும் நட வடிக்கைகளை மேற் கொண்டுள்ளது வரவேற்பிக் குரியது.
சவூதியில் பணிபுரியும் இந்திய பணியாளர்களுக்கு எத்தகைய வேலை இழப்பும் ஏற்படாமல் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள சவூதி அரசிடம் தங்கள் முழுமையான செல் வாக்கை தொடர்ந்து பயன் படுத்துமாறு மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள் கிறது. கூட்ட முடிவுகளை விளக்கி தேசிய தலைவர் இ. அஹமது சாகிப், தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக