Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 31 மே, 2013

நெல்லையில் பரபரப்பு, இடைநிலை ஆசிரியர்கள் திடீர் தர்ணா போராட்டம், கவுன்சிலிங்கில் காலி பணியிடங்கள் மறைப்பு

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் பாளை லயோலா கான்வென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் கவுன்சிலிங் நடந்தது. மொத்தம் 18 காலியிடங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான இடைநிலை ஆசிரியர்கள் இக்கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.
ஆனால் கவுன்சிலிங் ஆரம்பமான போது மாவட்டத்தில் 11 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பு ஆசிரிய, ஆசிரியைகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து காலி பணியிடங்களும் காட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவுன்சிலிங்கை ஆசிரியர்கள் புறக்கணித்தனர். தொடர்ந்து வெளியே வந்து திடீர் தர்ணா போராட்டத்தையும் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பத்மாவதி, சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மாவட்டத்தில் 15 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே காட்டிய காலி பணியிடங்களை விட கூடுதலாக 4 காலி பணியிடங்கள் காட்டப்பட்டன.
தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு ஆசிரிய, ஆசிரியைகள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். போராட்டத்தின் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் முருகேன்,ரமேஷ், சுடலைமணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஆரோக்கியராஜ், மருது, ஜான்துரைசாமி, பிரபு கட்டாரி, ரமேஷ், சார்லஸ், மோதிலால், மகேந்திரன்,, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பாபு, சீனிவாசன், தமிழக ஆசிரியர் கூட்டணி சாம் மாணிக்கராஜ், தமிழ்நாடு அனைத்து இடைநிலை ஆசிரியர் சங்கம் கிப்சன் உட்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஆசிரிய சங்கத்தினர் கூறும் போது, ""மாவட்டத்தில் முழுமையாக காலி பணியிடங்கள் காட்டப்படவில்லை. போராட்டம் நடத்தியதை தொடர்ந்து கூடுதலாக சில பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் 5 காலி பணியிடங்களும் கவுன்சிலிங் மூலம் நிரப்பபடவில்லை. களக்காடு, வள்ளியூர், செட்டிகுளம், மதகனேரி, பண்டாரக்குளம் உட்பட பல காலி பணியிடங்கள் காட்டப்படவில்லை.கவுன்சிலிங்கில் அனைத்து காலி பணியிடங்களையும் தெரிவித்து நேர்மையான, நியாயமான முறையில் கவுன்சிலிங் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்'' என்றனர்.
நேற்று மதியம் ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. இன்று (31ம் தேதி) இடைநிலை ஆசிரியர்கள் வெளி மாவட்ட அளவிலான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.

பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து நெல்லை மாவட்ட மாணவிகள் சாதனை

தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லை மாணவிகள், மாநிலத்தின் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

நெல்லை ஸ்ரீ ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளி மாணவி சோனியா, 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை பாலமுருகன், திசையன்விளையில் சித்தா டாக்டராக உள்ளார். தாய் பபிதா தேவி, நெல்லை மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டாக டி.வி.,யை ஒதுக்கி வைத்து விட்டு படித்ததும், பள்ளியில் தொடர்ந்து பரீட்சை எழுதியதுமே தனது வெற்றிக்கு காரணம் என்கிறார் சோனியா.

இதே போல், பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவி, ஷெர்லின் பொன் ஜெபா, 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தை நெல்லை ஸ்ரீ ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் 496. இவரது தந்தை சத்தி எல்.ஐ.சி., அதிகாரியாக உள்ளார். தாய் லட்சுமி பிரபா, கருவூல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சுருதியின் தம்பி ஷ்யாமும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தார். அவர் 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழிக்கு கொலை மிரட்டல் கடிதம்

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் , ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு அமைப்பு சார்பில் வந்த கடிதத்தில், பல முறை நிதியுதவி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும், ஆனால் இதற்கு எந்தவித பதிலும் தரப்படவில்லை. எந்த நேரத்திலும் உங்களை தாக்குவோம். தங்களால் எந்த நேரத்திலும் உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

வியாழன், 30 மே, 2013

மத்திய அரசின் மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகை

மத்திய அரசின் மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை சார்பில், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

குறைந்தது 55 விழுக்காடு மதிப்பெண் எடுத்து 2011ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகை பெறும் மாணவர்களுக்கு 11ம் வகுப்பில் 6 ஆயிரம் ரூபாயும், 12ம் வகுப்பில் 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவும், மேலும் விவரங்கள் அறியவும் www.maef.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

பொறியியல், மேலாண்மை பட்டதாரிகளுக்கு நல்ல பணி வாய்ப்புகள்

உலகெங்கிலுமுள்ள பல பணியாளர்கள், ஒவ்வொரு மாதமும், தாங்கள் பெறுகின்ற ஊதிய காசோலைகளின் மீது எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள் என்பது இயல்பே. ஆனால், அமெரிக்காவிலுள்ள அஈக ஐணஞி என்ற நிறுவனம்தான், இதுபோன்ற ஊதிய காசோலை தொடர்பான செயல்பாடுகளுக்கு பொறுப்பான நிறுவனம் என்ற உண்மை பலருக்கும் தெரியாது.

அமெரிக்க பணியாளர்கள் 6 பேரில் ஒருவருக்கும், உலகின் பிற நாட்டு பணியாளர்கள் 1 கோடி பேருக்குமான ஊதிய காசோலை செயல்பாட்டை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

இதுபோன்ற எளிமையான மனிதவள நடவடிக்கையை அவுட்சோர்சிங் விட்டுவிடுவதால், உலகெங்கிலுமுள்ள பலவிதமான வணிக நிறுவனங்கள், தங்களின் நேரம் மற்றும் பணம் ஆகியவற்றை சேமிக்கின்றன. மேலே சொன்ன ADP Inc எனும் நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமானது, பணியாளர் தொடர்பான பலவிதமான நடவடிக்கைகளில் உதவி புரிகின்றன. பணியமர்த்துவதிலிருந்து, பணி ஓய்வுபெறும் வரை அவை அடங்கும்.

பலவிதமான பணிகள்
ADP நிறுவனத்தின் பணிகள் பலவிதமானவை. அவர்களின் RUN என்ற ப்ரோகிராம், சிறிய நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு payroll சேவையாகும். ஒரு நிறுவனம், தனது payroll குறித்த தகவலை, web access அல்லது மொபைல் மூலமாக அனுப்புகிறது மற்றும் அதை ADP செயல்படுத்துகிறது. இதற்கு தனி சாப்ட்வேர் தேவையில்லை. இந்த ADP நிறுவனம், அர்ப்பணிப்பு மற்றும் உயர்தொழில்நுட்ப அம்சங்களுடன், ஒரு நிறுவனத்தின் HR and benefits ஆகியவற்றிலிருந்து, pre-employment சேவைகளான recruiting and screening போன்ற பணிகள் வரை உதவி புரிகிறது.

இந்தியா, ஒரு தொழில்நுட்ப பிராந்தியம்
ஒரு நிறுவனத்தின் வெற்றியானது, அதன் தொழில்நுட்ப செயல்பாட்டை மையமாக வைத்தே தீர்மானிக்கப்படுவதால், இந்தியாவில் அமைந்திருக்கும் ADP-ன் Global In-House மையமான(GIC), ADP Private Limited, இதுதொடர்பான முக்கிய பங்களிப்பை செய்கிறது.  GIC என்பது வெறுமனே ஒரு back office processing unit யூனிட் மட்டுமல்ல. உலகளாவிய வர்த்தகத்திற்கு ஒரு முக்கியப் பங்கினையும் ஆற்றுகிறது. ஐதராபாத் மற்றும் புனேவில், உலகத்தரம் வாய்ந்த வசதி வாய்ப்புகளை, ADP Private Limited இயக்குகிறது. இதன்மூலமாக, இதனோடு இணைந்த நிறுவனங்களுக்கு, பலவிதமான செயல்பாடுகள், துறைகள் மற்றும் தொழில்நுட்பங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

தற்போதைய நிலையில், இந்நிறுவனம், BPO/KPO, RIM and R&D போன்ற தன்னுடைய வணிகப் பிரிவுகளில், புதிதாக படிப்பை முடித்த மாணவர்களை பணியமர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

வளாக பணிவாய்ப்பு
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலிருந்தும், நாட்டின் முதன்மையான வணிகப் பள்ளிகளிலிருந்தும், தனக்கான ஆட்களை பணியமர்த்துகிறது. பொறியியல் பிரிவைப் பொறுத்தவரை, அனைத்து circuit பிரிவுகள் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களையும், மேலாண்மை படிப்பை பொறுத்தவரை, மார்க்கெடிங், எச்.ஆர்., பைனான்ஸ் மற்றும் ஆபரேஷன்ஸ் போன்ற பிரிவுகளில் ஸ்பெஷலைசேஷன் செய்தவர்களையும் பணிக்கு எடுத்துக்கொள்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனம், அதிகளவிலான பொறியியல் மாணவர்களை, இந்நிறுவனம் பணிக்கு எடுத்துக்கொள்கிறது. வளாக ஆளெடுப்பு செயல்பாடானது, வழக்கமாக, 2 முதல் 3 சுற்றுகளைக் கொண்டது. Quantitative, aptitude & verbal திறன்கள் சோதிக்கப்படுகின்றன. மேலும், டெக்னிக்கல் மற்றும் எச்.ஆர்., சுற்றுக்களும் உண்டு.

துறையை தாண்டிய அறிவு
இந்நிறுவனத்திற்கான ஆளெடுப்பு நடைமுறையானது அதிகளவிலான அறிவுத்திறன் எதிர்பார்ப்பைக் கொண்டது. எனவே, ஒரு மாணவர், தொழில்நுட்ப அறிவுடன், குவான்டிடேடிவ் திறன்கள், aptitude, ஆளுமைத்திறன், மென்திறன்கள் மற்றும் நல்ல தகவல்தொடர்பு திறன் போன்றவைகளையும் பெற்றிருக்க வேண்டும்.

சவாலான பணி நிலைகள்
நிறுவனங்களைப் பொறுத்து, R&D துறையில், பல்வேறான பணி நிலைகள் உள்ளன. SAP testing, SAP functional consultant, SAP ABAP, Java developer, automation testing, siebel tester, oracle developer, mobile tester and user interface developer போன்றவையே அவை.

அதேசமயம், மேலாண்மை படிப்பை முடித்தவர்கள், business analyst, consultants, project leaders, operation manager and project manager போன்ற பணி பொறுப்புகளை எதிர்பார்க்கலாம்.

வளாகத்தை தாண்டி...
பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்காத மாணவர்கள்கூட, Pehchaan, the internal employee referal programme, ADP&'s LinkedIn page போன்ற job portals மூலமாக, ADP -ல் பணி வாய்ப்புகளைப் பெறலாம்

ஓரியண்டேஷன்
ADP நிறுவனத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்தவர்கள், தங்களின் குடும்பத்தினரை, நிறுவனத்திற்கு அழைத்து வரும்படி கேட்டுகக்கொள்ளப்படுவார்கள். அங்கே அவர்கள், ADP உறுப்பினர்கள் மற்றும் மூத்த பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். மேலும், குறைகளை தெரிவித்தல், வழிகாட்டுதலைப் பெறுதல், மேம்பாட்டிற்கான சிந்தனை பரிமாற்றங்களை மேற்கொள்ளல் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் இச்சமயத்தில் வழங்கப்படும்.

பணியில் சேரும் நடைமுறைகள் தவிர்த்த, மூன்று நாள் ஓரியண்டேஷன் நிகழ்ச்சியானது, வரவேற்பு உணவு, சுற்றுலா மற்றும் வணிக முக்கியஸ்தர்களின் உரைகள், ADP மேலாண்மை இயக்குநருடன் 3 மணிநேர கலந்துரையாடல் போன்ற அம்சங்களைக் கொண்டது.

புதியவர்களுக்கான வளர்ச்சிப் பாதை
வணிக நடவடிக்கைகளைப் பொறுத்து, ஒரு புதிய பணியாளரின் வளர்ச்சிப் பாதை அமைகிறது. ஒரு சாதாரண குழு உறுப்பினர் என்ற நிலையிலிருந்து, ப்ராஜெக்ட் தலைவர், subject matter experts, architects போன்ற பணி நிலைகளுக்கு உயரும் வாய்ப்புகளும் இருக்கிறது. மேலும், தங்களின் திறமையை நிரூபிக்கும் வகையில், பல்வேறான வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

ஊதியம்
ADP தரும் சம்பளமானது, சில முன்னணி ஐ.டி., நிறுவனங்களின் சம்பளத்தைவிட அதிகம். நல்ல பணி சூழல், கணிசமான சம்பள உயர்வு, வாழ்க்கை - பணி சமநிலை போன்றவை, ADP -ல் குறிப்பிடத்தக்கவை என்று தற்போதைய பணியாளர்கள் திருப்தி தெரிவிக்கிறார்கள். மேலும், சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புகள் ஏற்படுவதோடு, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் பஞ்சமில்லை என்றே சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்யசபா தேர்தலால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உட்கட்சி சண்டை?

ஜூலை மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலால், இந்திய கம்யூ., கட்சியில், உட்கட்சி சண்டை உருவாகியுள்ளது. கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியனின், அணுகுமுறையால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள், தி.மு.க., - கனிமொழி, திருச்சி சிவா, அ.தி.மு.க., - இளவரசன், மைத்ரேயன், காங்., - ஞானதேசிகன், இ.கம்யூ., - டி.ராஜா ஆகியோரது பதவிக் காலம், ஜூலை, 24ம் தேதியுடன் முடிகிறது. காலியாகும், 6 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தலில், அ.தி.மு.க., 4 எம்.பி.,க்களை பெற்று விடும்; கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், 5 வது எம்.பி.,யையும் வென்று விடும்.
கூட்டணிக் கட்சிகள் பலத்துடன் வெற்றி பெறும், எம்.பி., பதவியை, இந்திய கம்யூ., தேசிய செயலர் டி.ராஜாவுக்கு அளித்து, அவரை மீண்டும் எம்.பி., ஆக்க வேண்டும் என்பது, அக்கட்சியில், பரவலாக உள்ள கருத்து. ஆனால், தனக்கு, எம்.பி., பதவி வேண்டும் என, மாநில செயலர் தா.பாண்டியன் விரும்புவதாக, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.

கைவிடப்பட்ட ஜெ., சந்திப்பு: ராஜ்யசபா எம்.பி., ஒருவரை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கள் தேவை. இந்திய கம்யூ., கட்சிக்கு, 8 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின், 10 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை திரட்டினாலும், மேலும், 16 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. இதற்கு, அ.தி.மு.க.,வின் ஆதரவு அவசியம். எனவே, அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதாவை, இம்மாதம், 20ம் தேதி சந்திக்க, இந்திய கம்யூ., பொதுச் செயலர் பரதன் திட்டமிட்டிருந்தார். இதற்காக, ஜெயலலிதாவைச் சந்திக்க, நேரம் வாங்கித் தர, நேரம் கேட்டிருந்தார். ஆனால், தா.பாண்டியன், வெளிநாடு சென்று விட்டதால், ஜெயலலிதாவை சந்திக்கும் முயற்சியை, பரதன் கைவிட்டார்.

மாநிலக்குழு கூட்டம்: இந்திய கம்யூ., கட்சியின், தமிழ் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை, சென்னையில் நடக்கிறது. இக்கூட்டத்தில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்து, மத்திய தலைமைக்கு பரிந்துரைக்க உள்ளதாக, கட்சியின் மூத்த மாநில நிர்வாகி ஒருவர் கூறினார்.
கட்சியின், மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம், ஜூன், 2 ல், டில்லியில் நடக்கிறது. இதில், தமிழ் மாநில நிர்வாகக் குழு பரிந்துரைக்கும் வேட்பாளரை ஏற்று, இறுதி அறிவிப்பு வெளியாகும் என, தெரிகிறது.

புதன், 29 மே, 2013

திருநெல்வேலியில் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் துவக்கம் குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் விரைவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்படுகிறது.

நெல்லை மாநகராட்சி ராமையன்பட்டியில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்குள்ள குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக கலெக்டர் சமயமூர்த்தியிடம், புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ராமையன்பட்டி குப்பை கிடங்கை நேற்று நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
குப்பை கிடங்கில் வருங்காலங்களில் இதுபோன்ற தீ எரிவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பைகள் பகுதி, பகுதிகளாக பிரிக்கப்பட்டு கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை கொட்டும் பகுதிகளை சுற்றி தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்படும். இதன் மூலம் திடீர் தீ விபத்துக்கள் தடுக்கப்படும்.

குப்பைகளில் வரும் கழிவுகள் பிரிக்கப்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக கொட்டப்படும். மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. குப்பை கிடங்கில் பணியாற்றும் பணியாளர்கள் கவனத்துடன் பணியாற்றி தீ ஏற்படாத வகையில் தடுக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மோகன், பி.ஆர்.ஓ மாரியப்பன், தீயணைப்பு அலுவலர் பத்மகுமார், உதவி தீயணைப்பு அலுவுவலர் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அணைகளில் தண்ணீர் தட்டுப்பாடால் விவசாயிகள் அவதி

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் அணைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டு வரும் நிலையில் கார்சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். பிசான சாகுபடியும் ஏமாற்றிவிட்ட நிலையில் கார் சாகுபடியும் பொய்த்துவிடுமோ என்ற ஏக்கத்தினால் விவசாயிகள் பெரும் ஆதங்கத்துடன் காணப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை மழை பொய்த்துவிட்ட நிலையில் வறட்சி மாவட்டமாக நெல்லை மாவட்டமும் அறிவிக்கப்பட்டது. இதனிடையில் கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரை சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பிசான சாகுபடி நிலங்கள் போதுமான பருவமழையின்றி தரிசாக விடப்பட்டன. இத்தொகுதியில் உள்ள கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய அணைகளுக்குட்பட்ட பாசன விவசாயிகள் பிசான சாகுபடியை போதுமான முறையில் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அணைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் கூட விளைந்த பயிரை அறுவடை செய்ய பெரும்பாடுபட்டனர்.

இதனிடையில் தற்போது இத்தொகுதியில் உள்ள கருப்பாநதி அணை முற்றிலுமாக வறண்டு வரும் ‹ழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அடவிநயினார் அணைக்கட்டின் நீர்மட்டமும் இதே நிலையில் தான் காணப்பட்டு வருகிறது. குண்டாறு அணைக்கட்டை பொறுத்தவரை கார்சாகு போதுமான தண்ணீர் இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. இதனால் கடையநல்லூர் பகுதியில் கார் சாகுபடி செய்ய விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை மேற்கொள்ள முதற்கட்ட பணியாக துவங்கவேண்டிய நாற்றுபாவும் பணிகள் கூட ஒரு சில இடங்களில்தான் காண முடிகிறது.

பருவழையும் கைகொடுக்காத நிலையில், கார் சாகுபடிக்கான மழையும் இல்லாததால் விவசாயிகள் பெரும் ஏக்கத்துடன் இருந்து வருகின்றனர்.

காது கேளாதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்?

தமிழகத்தில், 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. இது, தேசிய அளவைவிட, மூன்று மடங்கு அதிகம் என, ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

சென்னை, இ.என்.டி., ஆராய்ச்சி அறக்கட்டளை, 2003 முதல், 2012 வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் செவித்திறன் குறைபாடு குறித்த பரிசோதனை முகாமை நடத்தியது. மொத்தம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சராசரியாக, 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு, செவித்திறன் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. ஆண், பெண் என, இருபாலின குழந்தைகளிலும், இந்த குறைபாடு சரிசமமாகவே உள்ளது. இது, தேசிய சராசரி அளவைவிட, மூன்று மடங்கும், சர்வதேச அளவைவிட, ஆறு மடங்கும் அதிகம் என, தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, அறக்கட்டளை நிர்வாக இயக்குனர், மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 120க்கும் மேற்பட்ட, கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில், பரிசோதனை முகாம் நடத்தினோம்.

இதில், செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்டோரில், மூன்றில், இரண்டு பங்கு குழந்தைகளின் பெற்றோர், சொந்தத்தில் திருமணம் செய்துக் கொண்டவர்கள் என்பது தெரியவந்தது.

குறைபிரசவம், குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை, கருவில் மற்றும் குழந்தை பிறந்த பின் ஏற்படும் தொற்று போன்றவை, குழந்தைகளின் செவித்திறன் குறைபாடிற்கு காரணங்கள்.இளம் தலைமுறையினர், நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்துக் கொள்வதை தவிர்ப்பது, இக்குறைபாட்டை வரும் முன் தடுக்க, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றால், காதுகேளாத குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறுவதை தடுக்கலாம். இவ்வாறு, மோகன் காமேஸ்வரன் கூறினார்.

செவ்வாய், 28 மே, 2013

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் கல்விக் கடன் கிடைக்கிறது

பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு மட்டுமல்ல, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்க வங்கிகள் தயாராகவே உள்ளன. பி.காம்., பி.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கும் வங்கிகளில் இப்போது கல்விக் கடன் தாராளமாக வழங்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தப் படிப்புகளை முடித்தவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க மறுக்கும் நிலை இருக்கிறது. அதனால், இந்த மாணவர்கள் சற்றுப் போராடத்தான் வேண்டியிருக்கும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு.

எவ்வளவு கடன் கிடைக்கும்?
ரூ.4 லட்சம் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். ரூ. 4 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரை கடன் பெற, பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க வேண்டி இருக்கும்.

 ரூ.7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என அனைத்துக்கும் பொருந்தும்.

எப்படி வாங்குவது?
பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கியில் கல்விக் கடன் பெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து, கல்விக் கடன் வாங்கிக் கொள்ள வேண்டும்.

கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்சூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர் லேப்-டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று "போனஃபைட்' சான்றிதழில் குறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய காசோலை, கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

கடனை திருப்பிச் செலுத்துவது எப்போது?
படிப்பு முடிந்து ஓர் ஆண்டுக்கு பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனை செலுத்த ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது.

வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.

விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1 சதவீத வட்டி குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் சுமையைக் குறைத்துக் கொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்
கல்லூரி "போனோஃபைட்' சான்றிதழ், கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம் உள்ளிட்டவை தேவைப்படும். வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும்.

முக்கிய அம்சங்கள்
மாணவர்கள் ஒரு பாடத்தில்கூட தோல்வியடைந்து விடக்கூடாது. ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக்கு கடன் தருவதை நிறுத்திவிடும் வாய்ப்புள்ளது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும்  எழுதி பாஸ் ஆன பிறகுதான் கடன் கிடைக்கும் என்ற விதிமுறை உள்ளது.

ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டிவரும்.

வரிச் சலுகைகள்
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.

கடன் தர தயக்கம்
கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசின் விதி. இருப்பினும், இந்த விதியை பெரும்பாலான வங்கிகள் பின்பற்றுவதில்லை.

உதாரணத்துக்கு எம்.பி.ஏ. படிப்பதற்கு ரூ.2 லட்சம் செலவாகிறது என்றால் விதிகளின்படி உத்தரவாதம் இல்லாமல் வங்கிக் கடன் வழங்க வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் : துணைவேந்தர் எம்.ராஜாராம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம்.ராஜாராம் (54) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். தாற்காலிக துணைவேந்தர் காளிராஜ் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும். வேலைவாய்ப்பை உறுதிசெய்தாலே அனைத்துப் பொறியியல் காலிப்பணியிடங்களும் நிரம்பிவிடும்.

அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகங்களில் உள்ள பேராசிரியர்களின் தரத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை சிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார் அவர்.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த ராஜாராம், ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் அவர் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார்.

இதற்கு முன்பு திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் அவர் இருந்துள்ளார்.

நெல்லையில் நாளை (29/05/2013) தனியார் வேலைவாய்ப்புசந்தை

நெல்லையில் நாளை (29ம் தேதி) தனியார் வேலைவாய்ப்புசந்தை நிகழ்ச்சி நடக்கிறது.நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்சார்பில் நாளை (29ம் தேதி) தனியார் வேலைவாய்ப்புசந்தை நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் , பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் விற்பனை பிரதிநிதி, தையல், ஆசிரிய பயிற்றுனர், செக்யூரிட்டி உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்தசந்தையில் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். தனியார் வேலைவாய்ப்பின் பயனாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று கலெக்டர்சமயமூர்த்தி தெரிவித்தார்.

திங்கள், 27 மே, 2013

பொறியியல் கல்லூரிகளின் விவரம்

தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில் என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதைத் தேர்வு செய்வது என்பதுதான்.

இந்த கேள்விகளுக்கு விடை காணும் வகையில், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் மாவட்ட வாரியாக அமைந்துள்ள கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள வசதிகள், படிப்புகள் குறித்து அனைத்துத் தகவல்களும் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பொறியியல் கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கல்லூரிகளின் விவரங்களைக் காண http://www.annauniv.edu/vac2013/collsel.html  என்ற வலைதளத்தை பார்க்கலாம்.

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லை முதல் சென்னை வரை தண்ணீர் இன்றி பயணம் பயணிகள் கடும் அவதி

திருச்செந்தூரில் இருந்து தமிழகத்தின் தலைநகரமாம் சென்னைக்கு தினமும் இரவு 7.45 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16736) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு 7.45 மணிக்கு வழக்கம் போல் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டது.

அப்போது ரெயிலில் ஏ.சி. பெட்டியை தவிர மற்ற அனைத்து பெட்டிகளிலும் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர் காலியாகி விட்டது. பயணிகளின் உற்சாகம் பறிபோனது.

ரெயிலில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் கழிவறைகளுக்கு சென்று இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் திண்டாடினார்கள். இது குறித்து பயணிகள் ரெயில் என்ஜின் டிரைவரிடம் முறையிட்டனர். ஆனால் எந்த பயனும் இல்லை.

பயணிகள் மிகுந்த சிரமம்
மதுரை, திருச்சி போன்ற முக்கிய ரெயில் நிலையங்களிலாவது தண்ணீர் நிரப்பப்படும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அங்கும் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் இரவு முடிந்து அதிகாலை நேரத்தில் பயணிகள் காலைக் கடன்களை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஆனால் கழிவறைகளில் தண்ணீர் இல்லை. இதனால் பயணிகள் தண்ணீர் இன்றி காலைக் கடன்களை கழித்தனர். இதனால் கழிவறைகளில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் பயணிகள் ரெயிலில் உட்கார முடியாமல் மிகுந்த சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர்.

நிம்மதி பெருமூச்சு
பின்னர்  காலை 8.35 மணியளவில் ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அடைந்த போது, ரெயிலில் ஒன்றிரண்டு பெட்டிகளுக்கு மட்டுமே தண்ணீர் நிரப்பினர். பெரும்பான்மையான பெட்டிகளில் தண்ணீர் சிறிதும் இன்றி பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் காலை 11.50 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தனர்.

இதுகுறித்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்–7 பெட்டியில் பயணம் செய்த திருவேற்காட்டை சேர்ந்த கற்பகம் கூறும்போது:–

நெல்லை வரை ரெயிலில் தண்ணீர் இருந்தது. அதன்பிறகு தண்ணீர் வரவில்லை. ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் ரெயில் நிற்கும்போது, தண்ணீர் நிரப்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்.

அதோடு அல்லாமல் நானும் என் சகோதரிக்கும் ஆர்.ஏ.சி. டிக்கெட் தான் கிடைத்திருந்தது. டிக்கெட் பரிசோதகர் வராததால் படுக்கை வசதி இன்றி மிகுந்த சிரமத்துடன் வந்து சேர்ந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாலிமர் இன்ஜினியரிங் படிப்பு

பாலிமர்களை உற்பத்தி செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றில் கெமிக்கல் இன்ஜினியரிங்கின் கோட்பாடுகளையும் விதிகளையும் பாலிமர் இன்ஜினியர்கள் பயன்படுத்துகிறார்கள். இதற்காக பிளான்ட் டிசைன், பிராசஸ் டிசைன், தெர்மோடைனமிக்ஸ், போக்குவரத்து அம்சங்கள் ஆகிய தத்துவங்களை பாலிமர் இன்ஜினியர்கள் ஆராய்கிறார்கள். பிளாஸ்டிக் மற்றம் பாலிமர் உற்பத்தியை இவர்கள் கண்காணிக்கிறார்கள். உற்பத்தித் தளத்தில் பிளாஸ்டிக் மோல்டர்களையும் டெக்னீஷியன்களையும் கண்காணிப்பவர்களும் இவர்களே.

இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை என இரு பிரிவுகளிலுமே பல்வேறு படிப்புகள் உள்ளன. இளநிலையில் பி.இ., பி.டெக். மற்றும் முதுநிலையில் எம்.டெக். என்றும் படிப்புகள் உள்ளன. பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள் பாலிமர் இன்ஜினியரிங்கில் பி.இ., பி.டெக். படிப்பில் சேரலாம். பாலிமர் இன்ஜினியரிங் மற்றும் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் என இந்தப் படிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன. இதைப் படித்தவர்கள் பாலிமர் உற்பத்தித் தளங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் நேரடியாகப் பணி புரியலாம். இந்தப் படிப்புகளில் சேர மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை எழுதி அவற்றில் வெற்றி பெற வேண்டும்.

எம்.டெக்கில் பாலிமர் இன்ஜினியரிங்/பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்பதற்கு பாலிமர் இன்ஜினியரிங் அல்லது பிளாஸ்டிக் டெக்னாலஜி அல்லது ரப்பர் டெக்னாலஜி அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ. பி.டெக். படித்திருக்க வேண்டும். இயற்பியல் அல்லது வேதியியலில் எம்.எஸ்சி. படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இத் துறையில் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வில் தகுதி பெற்றவருக்கு கல்வி வாய்ப்பைத் தருகின்றன.

இத் துறையில் படிப்பை முடிப்பவருக்கு பாலிமர் உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் தொழிற்சாலைகளில் புரடக்ஷன் சூப்பர்வைசர், குவாலிடி கன்ட்ரோல் இன்ஸ்பெக்டர், புரடக்ஷன் பிளானர், மோல்டு டிசைனர் என்னும் பல பணிகள் கிடைக்கின்றன. பொதுத் துறை மற்றும் தனியார் பிளாஸ்டிக் நிறுவனங்களிலும் நல்ல வேலைகள் கிடைக்கின்றன. உற்பத்தித் தொழில் நிறுவனங்களான பிளாஸ்டிக், ஆட்டோமோடிவ், எலக்ட்ரானிக்ஸ், ஏரோஸ்பேஸ், பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களிலும் நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பாலிமர் இன்ஜினியர்கள், பாலிமர் டெக்னாலஜிஸ்டுகள், பாலிமர் சயின்டிஸ்டுகளுக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆய்வகம், பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பிளான்டுகள், வெவ்வேறு மாநிலங்களிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம், பாலிமர் கழகங்கள், பெட்ரோலியம் கன்சர்வேஷன் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா, பெட்ரோ பைல்ஸ் கோவாபரேடிவ் லிமிடெட் போன்ற அரசுத் துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது.

இயற்கை வளங்கள் குறைவாகிக் கொண்டே வரும் இந்த நாட்களில் மாற்று உபயோகப் பொருளான பாலிமரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் பாலிமர் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை அதிக முக்கியத்துவம் வாய்ந்த் துறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்த இன்கிரிமென்ட், படிகள், பயன்கள் என பல வகைகளிலும் பாலிமர் இன்ஜினியர்களின் ஊதியம் சிறப்பாக அமைகிறது. பி.இ., பி.டெக். முடித்து பணியில் சேரும் பாலிமர் இன்ஜினியர்கள் துவக்கத்தில் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.

அனுபவம், தகுதி, திறன்கள் ஆகியவையே இத் துறையில் நல்ல சம்பளம் பெறுவதற்கான அடிப்படைத் தேவைகளாக உள்ளன. பொதுவாக பொதுத் துறையில் பணி புரிபவர்களை விட தனியார் துறையில் பணி புரிபவருக்கே நல்ல சம்பளம் இத் துறையில் கிடைக்கிறது. இத் துறையில் 5 ஆண்டுகளுக்கு அதிகமாகப் பணி புரியும் சீனியர் பாலிமர் இன்ஜினியர் மற்றும் சயின்டிஸ்டுகள் மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

பாலிமர் இன்ஜினியரிங் படிப்பானது கடந்த சில ஆண்டுகளாக புதிது புதிதாக பல கல்வி நிறுவனங்களில் துவங்கப்பட்டுள்ளது. B.S.ABDUR RAHMAN UNIVERSITY- Chennai, Hidustan University - chennai , Kamaraj College of Engineering And Technology- Viluppuram ,   ஐ.ஐ.டிக்கள், என்.ஐ.டிக்கள், மெஸ்ராவிலுள்ள பிட்ஸ், கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப் பல்கலைக்கழகம், மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே, லங்கோவால் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, பஞ்சாப், ஸ்ரீஜெயச்சாமராஜேந்திர காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மைசூரு, யுனிவர்சிடி காலேஜ் ஆப் இன்ஜினியரிங், தொடுபுழா போன்றவற்றில் இத் துறைப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சமீப காலமாக ஒரு சில கல்லூரிகளில் இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

ஞாயிறு, 26 மே, 2013

சௌதி அரேபியாவில் நிதாகத் தொழிலாளர் ஒழுங்குமுறை சட்டம்: இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை


சவூதி அரேபிய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் கொள்கையால் (நிதாகத்) அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சவூதி இளவரசர் சவுத் அல்-ஃபைசல் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் நிதாகத் சட்டத்தின்படி அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் பலர் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சவூதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஜூலை 3-ஆம் தேதிக்குள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அப்படி வெளியேறாவிட்டால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சவூதிக்குச் சென்றுள்ளார். அங்கு சவூதி இளவரசரும்ம் வெளியுறவுத்துறை அமைச்சருமான சவுத் அல்-ஃபைசலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து இந்தியர்கள் நாடு திரும்பும் விவகாரத்தில் பிரச்னைகள் ஏற்படாதவாறு சவூதி அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அல்-ஃபைசல் நம்பிக்கை அளித்துள்ளார்.

இது தொடர்பாக சல்மான் குர்ஷித் கூறியதாவது:

சவூதி அரேபியா, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகும். இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்தியர்களின் வேலைத்திறன் பற்றி சவூதி அரசு நன்கு அறிந்துள்ளது.

இந்தியர்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அல்-ஃபைசத் உறுதியளித்துள்ளார்.

இந்தப் பயணத்தின்போது இரு நாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது, எரிசக்தி பாதுகாப்பு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்றார் சல்மான குர்ஷித்.

கொடைக்கானலில் ரம்மிய மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி


கொடைக்கானலில் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை சீசனையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடை விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.

கொடைக்கானலில் பகல் நேரங்களில் மிதமான வெயிலும், மாலை நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது.

சனிக்கிழமை காலை முதலே மேக மூட்டம் காணப்பட்டது. பிற்பகலில் சிறிது நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மழையில் நனைந்தவாறே குளுமையை பயணிகள் அனுபவித்தனர்.

கொடைக்கானல் ஏரிச் சாலை, பிரையண்ட் பூங்கா பகுதிகளில் அதிகமான பயணிகள் காணப்பட்டனர்.

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொடர்பான படிப்பு

தற்போதைய நவீன தொழில் யுகத்தின் அடிப்படையாக விளங்குவது பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொழில் தான். பிளாஸ்டிக்கை சிந்தடிக் ரெஸின்கள், எத்திலீன், பென்சீன், அம்மோனியா போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டு உருவாக்குகிறார்கள். விஞ்ஞானிகள் பிளாஸ் டிக்கின் புதிய வகைகளை ஆய்வுகளின் மூலமாக உருவாக்குகிறார்கள்.

பிளாஸ்டிக் விரிப்புகள், உடையாத பாத்திரங்கள், தோல் ரெக்ஸின் போன்ற பல்வகைப் பொருட்களின் தயாரிப்பானது பிளாஸ்டிக்கை நம்பியே உள்ளது. பிளாஸ்டிக்/பாலிமர் இன்ஜினியரிங் படிப்பில் இன்று பலர் விரும்பி சேருவதைப் பார்க்க முடிகிறது. அடிப்படையில் விஞ்ஞான நோக்கு கொண்டவர்களுக்கான சிறந்த துறை இது.

உலகெங்கும் இத் துறை வேகமாக வளரும் துறையாகவே விளங்குவதைக் காண்கிறோம். நுகர்வோர் கலாசாரம் உச்சத்தில் இருப்பதால் பிளாஸ்டிக் பொருட்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடிப்படையில் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்திருப்போர் மட்டுமே இத் துறைக்குச் செல்ல முடியும். இத் துறையில் பி.டெக்., பி.இ., படிப்புகள் தரப்படுகின்றன. பி.எஸ்சி., வேதியியல் முடித்துவிட்டு பி.டெக்., பாலிமர் டெக்னாலஜி படிப்பவர்களையும் நாம் காண முடிகிறது.

சென்னையிலுள்ள மதிய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் இத் துறையில் சிறப்புப் படிப்பைத் தருகிறது. இது சென்னையிலுள்ள கிண்டியில் அமைந்துள்ளது. இது பின்வரும் படிப்புகளை நடத்துகிறது. பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் இன்ஜினியரிங், பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் பிராசசிங் டெக்னாலஜி, பி.ஜி., டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெஸ்டிங் மற்றும் கன்வெர்ஷன் டெக்னாலஜி, பி.ஜி. டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் கம்போசிட் டெக்னாலஜி ஆகிய படிப்புகளை இது நடத்துகிறது. இதற்கு சிப்பெட் என்னும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாகவே மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

முழு விபரங்களை அறியும் இணைய முகவரி: www.cipetindia.com

சனி, 25 மே, 2013

ஆயுர்வேத மருத்துவ படிப்பு (BAMS)

தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவமும், எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கு நிகரானதாகவேக் கருதப்படுகிறது. மேலும், நமது பாரம்பரிய மருத்துவ முறை என்பதாலும், பல தீராக வியாதிகளுக்கும் ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளது என்பதாலும் தற்போது ஏராளமானோர் ஆயுர்வேத மருத்துவர்களை நாடுகின்றனர்.

தமிழகத்தில் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை வழங்கும் 8 கல்லூரிகள் உள்ளன. அதில் 1 அரசுக் கல்லூரியும், 7 சுயநிதிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

இவை அனைத்துமே தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன்தான் செயல்படுகின்றன.

பி.ஏ.எம்.எஸ்.(BAMS)

பேச்சுலர் ஆப் ஆயுர்வேதிக் மெடிசின் அன்ட் சர்ஜரி என்ற ஆயுர்வேத மருத்துவ படிப்பு நான்கரை ஆண்டு கால படிப்பும், ஓராண்டு கால கட்டாய பயிற்சியும் சேர்ந்ததாகும். இப்படிப்பில் சேர பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடம் எடுத்து படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தகுதியுடையவர்களாவர். வகுப்பறை பாடமாகவும், ஆய்வக பயிற்சியாகவும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் அரசு மற்றும் தனியார் ஆயுர்வேத மருத்துவமனைகளில் பணி வாய்ப்பு பெறலாம். ஆயுர்தேவ மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியிலும் ஈடுபடலாம். மேற்கொண்டு முதுநிலை பட்டப்படிப்பும் படிக்கலாம்.

எம்.டி.(MD) 

இது ஆயுர்வேத முதுகலைப் படிப்பாகும். இரண்டு ஆண்டுகளைக் கொண்ட இப்படிப்பில் சேர இளநிலை ஆயுர்வேதப் படிப்பான பி.ஏ.எம்.எஸ். தேர்ச்சி பெற்று ஓராண்டு காலம் பயிற்சியையும் முடித்திருக்க வேண்டும்.

1. அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

தமிழக அரசால் நடத்தப்படும் ஒரே ஆயுர்வேதக் கல்லூரி என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இப்படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். எம்.டி. எனப்படும் முதுகலைப் பட்டப்படிப்பும் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலந்தாய்வு மூலமாக மாணவ சேர்க்கை நடத்தப்படுகிறது.
முகவரி : கோட்டாறு, நாகர்கோயில்

2. ஆயுர்வேதக் கல்லூரி, சூலூர், கோவை

1978ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு பிஏஎம்எஸ் மருத்துவப் படிப்பும். எம்.டி. எனப்படும் முதுநிலைப் படிப்பும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : 242பி, திருச்சி சாலை
சூலூர், கோவை - 641108

3. வெங்கடரமணா ஆயுர்வேதக் கல்லூரி, சென்னை

1979ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரி சென்னையை அடுத்த பெரியார்நகரில் உள்ளது. இந்த ஆயுர்வேதக் கல்லூரியில் பி.ஏ.எம்.எஸ். படிப்பில் ஆண்டு தோறும் 20 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும் வளாகத் தேர்வு நடத்தப்பட்டு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : 596, ஏ1, ஏ2, 31வது சாலை, டிஎன்எச்பி காலனி,
பெரியார்நகர், கொரட்டூர்,
சென்னை - 600 080.

4. தர்ம ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரியான இதில் இருபாலரும் பயிலும் வசதி உள்ளது.  பி.ஏ.எம்.எஸ். படிப்பு மட்டும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 20 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : 17, கிராண்ட் வெஸ்ட் டிரங்க் சாலை,
ஸ்ரீபெரும்புதூர் - 602 105

5. ஸ்ரீசாய் ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

2001ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேதப் படிப்பான பி.ஏ.எம்.எஸ். என்ற நான்கரை ஆண்டு கால படிப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : சாய் லியோ நகர், பூந்தண்டலம்,
மேற்கு தாம்பரம், சென்னை - 600 044

6. ஸ்ரீ சங்கரா ஆயுர்வேதக் கல்லூரி, திருச்சி

2001ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரி இருபாலரும் பயிலும் சுயநிதி மருத்துவக் கல்லூரியாகும். இளநிலைப் படிப்பான பிஏஎம்எஸ் படிப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : சன்னசிப்பட்டி, திருச்சி - 620 006.

7. ஸ்ரீ ஜெயேந்திரர் சரஸ்வதி ஆயுர்தேவ கல்லூரி, நசரத்பேட்டை

1995ம் ஆண்டு வதுங்கப்பட்ட இந்த கல்லூரியில் இளநிலை ஆயுர்வேத மருத்துவப் படிப்பு வழங்கப்படுகிறது. இது சுயநிதி மருத்துவக் கல்லூரியாகும்.  ஒவ்வொரு ஆண்டும் பிஏஎம்எஸ் படிப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
முகவரி : நசரேத்பேட்டை,
திருவள்ளூர் - 602 103

திருநெல்வேலி மாவட்டத்தில் தலை விரித்தாடும் வறட்சி 1.37 லட்சம் எக்டேரில் சாகுபடி பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் அணைக்கட்டுகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 765 மி.க.அடியாகும். இதில் தற்போது 3,139 மி.க.அடி கொள்ளளவு மட்டுமே உள்ளது. தற்போது அணைகளில் 23 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,449 குளங்களில் 2,427 குளங்கள் முற்றிலும் வறண்டுள்ளது. 16 குளங்களில் ஒரு மாதத்திற்கு மட்டும் தண்ணீர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்டத்தில் கடந்த ஆண்டு 754 மி.மீ அளவுகளில் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 228.23 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் இயல்பான மழை அளவை விட 7 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் 2013-13ம் ஆண்டில் 1.41 லட்சம் எக்டேர் பரப்பில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை 4,621 எக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் 5,736 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.மாவட்டத்தில் உரங்களை பதுக்குதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், கண்காணிக்கவும் வட்டார அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார அளவிலான சிறப்பு குழுவின் உர ஆய்வாளர்/வேளாண்மை அலுவலர் மற்றும்வேளாண்மை உதவி இயக்குனர் இடம் பெற்றுள்ளனர்.

பல்வேறு கல்லூரிகளில் இடங்கள் பூர்த்தியாகாத நிலையில் தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ.அனுமதி


இந்திய தொழிற்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.,) ஆகியன இணைந்து, "தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான செயல்பாடுகள்" என்ற தலைப்பில், மண்டல அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கை, சென்னை, சி.எல்.ஆர்.ஐ., நிறுவனத்தில், நேற்று துவக்கின.

கருத்தரங்கை துவக்கி வைத்து, மான்தா பேசியதாவது: தொழிற்துறையும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால், தொழில்நுட்பக் கல்வியின் தரம் மேம்படுவதுடன், மாணவர்கள், படிப்பை முடித்ததும், உடனுக்குடன், வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழலும் உருவாகும்.

ஆனால், இரு துறைகளுக்கும் இடையே, பெரும் இடைவெளி இருக்கிறது. இதை, சரி செய்ய வேண்டும்.பொது துறை நிறுவனங்கள் பயிற்சிமேலும், பொதுத் துறை நிறுவனங்கள் சார்பில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் துவக்கி உள்ளோம்.

முதற்கட்டமாக, பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்துடன், சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 43 பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள், அனைத்து நவீன வசதிகளைக் கொண்டவை.தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த மாணவர்களுக்கு, இந்த மையங்களில் பயிற்சி கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம். 400 மணி நேரம், இந்த பயிற்சி அளிக்கப்படும்.

இதற்காக, மாணவர்கள், கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏ.ஐ.சி.டி.இ., சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு, நிதியை வழங்கும். அந்நிறுவனங்கள், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு வழங்கும். இவ்வாறு மான்தா பேசினார்.

பின், நிருபர்களிடம், மான்தா கூறியதாவது: தமிழகத்தில், 17 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எட்டு பொறியியல் கல்லூரிகள், தாமாகவே முன்வந்து, மூடி விடுவதாக தெரிவித்துள்ளன.

தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த, என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என, அனைத்து மாநிலங்களுக்கும், கடிதம் எழுதினோம். மகாராஷ்டிரா மட்டும், பதில் அளித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட, வேறு எந்த மாநிலங்களும், உயர்கல்வியின் தர மேம்பாடு குறித்து, பதில் அளிக்கவில்லை. இவ்வாறு மான்தா கூறினார்.

தமிழகத்தில், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில், 1.30 லட்சம் இடங்களே, ஆண்டுதோறும் சராசரியாக நிரம்புகின்றன. மீதம் உள்ளவற்றில், மாணவர்கள் சேர்வதில்லை.

இந்நிலையில், 17 பொறியியல் கல்லூரிகளை, புதிதாகத் துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் பாடப் பிரிவுகளுக்கு ஏற்ப, இடங்கள் நிரம்பும் என்ற நிலையில், கல்லூரி ஒன்றுக்கு, தற்போதைய நிலவரப்படி, மூன்றில் ஒரு பங்கு இடங்கள், காலியாகவே இருக்கின்றன.

புதிதாகத் துவக்கப்படும் கல்லூரிகளிலும், இதே நிலை காணப்படும்.இந்த நிலையைத் தவிர்த்து, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில், இடங்களை நிரப்ப, மாநில அரசு ஆவன செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெள்ளி, 24 மே, 2013

தேயிலைத்தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.224 எதிர்பார்ப்பு : தமிழக அரசின் அறிவிப்புக்கு காத்திருப்பு

ஐந்தாண்டுகளுக்கு பிறகு, தேயிலைத்தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.224 கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.தமிழகத்தில் வால்பாறை, நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு தேயிலை எஸ்டேட்டுகளில் 1.5 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் உள்ளனர். குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவந்த இவர்களுக்கு, தமிழக அரசு கடந்த மாதம் 24ம் தேதி குறைந்தபட்சக்கூலியாக ரூ.185.50 என்று அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இதற்கு மேல், முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலம் தொழிலாளர்களுக்கு அதிகப்படியாக கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பதற்காக கோவையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த புதிய சம்பளப்பேச்சு வார்த்தையில், அ.தி.மு.க., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., ஆகிய மூன்று தொழிற்சங்கத்தை சேர்ந்த தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கடந்த 2008ம் ஆண்டு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்சக்கூலியின் அடிப்படையில், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையான கணக்கீட்டின் படி குறைந்தபட்சக்கூலியாக ரூ.224 வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளாத தொழிற் சங்கங்கள் (எல்.பி.எப்., எல்.எல்.எப்., எச்.எம்.எஸ்., வி.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள்) தமிழக அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர். இதனிடையே, தற்போது கோவையில் நடந்து வரும் முத்தரப்பு பேச்சு வார்த்தையில், தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.198 வழங்கவும், சம்பள ஒப்பந்தக்காலம் நான்கு ஆண்டுகளாக மாற்றவும், வேலைப்பளுவை குறைக்கவும் ஆலோசித்திருப்பதாக, இதில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கொடிய வனவிலங்குகளின் மத்தியில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், ஏறி வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டும், குறைந்தபட்சக்கூலியாக ரூ.224 அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

முஸ்லிம் யூத் லீக் (MYL ) கேரளா மாநில பொருளாளர் PM .ஹனீப் அவர்கள் வாபாத்தாகி விட்டார்கள்

முஸ்லிம் யூத் லீக் (MYL ) கேரளா மாநில பொருளாளர் PM .ஹனீப் அவர்கள் வாபாத்தாகி  விட்டார்கள் . இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி    ராஜிவூன் .

இறைவா ! தன் இளைமைகாலத்தை  உன் கட்டளைக்கேற்ப சமுதாயப் பணியில் அர்பணித்த , எங்கள் அன்புச்சகோதரரின் பிழைகளை மன்னித்து ,நற்செயல்களை ஏற்றுக் கொண்டு ,ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தினை வழங்குவாயாக ! அவர்தம் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையையும் , அவர் இருந்தால் எவ்வாறு இருப்பார்களோ .அதை விட சிறப்பாக்கி வைப்பாயாக !

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்ட சகோதரருக்கு மும்பை TATA மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இன்று மதியம் மருத்தவமனையில் வைத்து வபாத்தானர் . மும்பையிலிருந்து விமானம் மூலம் கோழிகோடு ஜனாஸா கொண்டு வரப்பட்டுள்ளது .கோழிக்கோடு விமானநிலையத்திலிருந்து அவரது சொந்த ஊரான மலப்புரம் - மெலட்டூரில் கொண்டு செல்லப்பட்டு ,நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும் .நல்லடக்க நிகழ்ச்சியில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா மாநிலதலைவர் செய்யிதினா ஹைதர் அலி ஷிஹாப் தங்கள் ,
அகில இந்திய தலைவர் இ.அஹமது சாஹிபு ,மாண்புமிகு PK .குஞ்சாலி குட்டி உள்ளிட்ட 5 அமைச்சர்கள் நாடாளு மன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் , முஸ்லிம் யூத் லீக் அகில இந்திய நிர்வாகிகள் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களும் ,தொண்டர்களும் கலந்து கொள்கின்றனர் .

வியாழன், 23 மே, 2013

ஹெல்த் இன்பர்மேடிக்ஸ் படிப்பு


டில்லியில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மேனேஜ்மென்ட் ரிசர்ச் கல்வி நிறுவனத்தில், ஹெல்த் இன்பர்மேடிக்ஸ் மேனேஜ்மென்ட் பி.ஜி., டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் கேட், மேட் ஆகிய நுழைவுத் தேர்வுகளில் ஒன்றை எழுதியிருப்பது அவசியம்.

இந்த துறையில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள், நுழைவுத் தேர்வு எழுதியிருக்க தேவையில்லை.

விண்ணப்பத்தை கல்வி நிறுவன இணையதளத்தில் ‘டவுண்லோடு’ செய்யலாம்.

விண்ணப்பிக்க ஜூன் 2 கடைசி தேதி.

மேலும் விபரங்களுக்கு www.iihmrdelhi.org

என்.சி.டி.இ. அதிகாரம் வழங்கியும் கேரளமாநிலத்தில் பின்பற்றுவது போன்று ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடை பின்பற்ற முடியாது : ஜெயலலிதா அரசு அறிவிப்பு

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.

கடந்த, 10ம் தேதி, சட்டசபையில், பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், பல எம்.எல்.ஏ.,க்கள், டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

60 சதவீத மதிப்பெண்கள் என்ற அளவால், சமுதாயத்தில் பின் தங்கிய தேர்வர்களால் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது என்றும், குறிப்பாக, 55 சதவீதம், 58, 59 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் தேர்வர்கள் கூட, தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சுட்டிக் காட்டினர்.

அப்போது, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், "இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது" என தெரிவித்தார். இதனால், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான, டி.இ.டி., தேர்வு அறிவிப்பில், தகுதி மதிப்பெண்கள் குறைப்பு செய்யப்படவில்லை.

வழக்கம் போல், தகுதி மதிப்பெண்களாக, 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையில் சட்டக்கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் மந்தம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தின் மூலம் நெல்லை, மதுரை, சேலம், திருச்சி உள்பட பல இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன. இந்த சட்டக்கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று முன்தினம் முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

மருத்துவம், என்ஜினீயரிங் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவ–மாணவிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். ஆனால் சட்டக்கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வாங்குவதற்கு மாணவ–மாணவிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. நெல்லை சட்டக்கல்லூரியில் விண்ணப்பங்கள் விற்பனை மந்தமாகவே உள்ளது.

புதன், 22 மே, 2013

விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பு (VISUAL COMMUNICATION)


விசுவல் மீடியா எனப்படும் துறையானது பரந்து பட்டு எண்ணற்ற பிரிவுகளில் வேலை வாய்ப்புகளையும் உற்சாகம் தரும் படிப்பையும் உறுதி செய்வதாக கடந்த சில ஆண்டுகளாக திகழ்கிறது. விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பதாகத் தான் நமது திரைப்பட ஹீரோக்கள் காட்டப்படுகிறார்கள். விஸ்காம் என்று பெருமையாக அழைக்கப்படும் படிப்பைப் படிப்பவர்களை கவனியுங்கள். அபரிமிதமான உற்சாகத்தையும் பொங்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துபவராக அவர்கள் இருப்பதைக் காணலாம்.

இத் துறையில் என்ன தான் இருக்கிறது? சில ஆண்டுகளுக்கு முன் ரேடியோ, திரைப்படம், டிவி பத்திரிகை என பல்வேறு வடிவங்களில் செயல்பட்டு வந்த பணிகளில் சிலவற்றை ஒன்று சேர்த்து இன்று இத் துறை படிப்பானது உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூட கூறலாம். செயற்கைக் கோள் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த பின் இன்று செயற்கைக் கோள் திரைப்பட ஒளிபரப்பு வரை பார்க்கிறோம். இது போல அசுர வேகத்தில் வளரும் இந்த மீடியாவில் சிறப்புத் திறன் பெற்றவர்களை உருவாக்கவே இப் படிப்பு வடிவமைக்கப்பட்டது.

பிரிவுகள்
விசுவல் கம்யூனிகேஷன்ஸ் என்பது பன்முகத் தன்மை கொண்ட மீடியா படிப்பாகும். இது
* கிராபிக் டிசைன்
* இல்லஸ்டிரேஷன்
* நுண் கலை
* மல்டி மீடியா
* போட்டோகிராபி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. தொழில்முறையில் இவற்றில் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்கும் சமாளிப்பதற்கும் இப் படிப்பு மிகவும் உதவியாக விளங்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று விசுவல் கம்யூனிகேசன்ஸ் துறையின் பயன்பாடானது பல இடங்களில் உணரப்படுகிறது. உதாரணமாக விளம்பரம் என்பது முழுக்க முழுக்க இமேஜ்களையும் ஒரு சில வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருப்பதை காண்கிறோம். இது போலவே இன்டீரியர் டிசைன், இன்டஸ்ட்ரியல் டிசைன், பப்ளிகேஷன்ஸ் டிசைன் ஆகிய துறைகளும் விசுவல் அடிப்படைகளை நம்பியிருக்கின்றன.இது போலவே புத்தகங்களுக்கான அல்லது பத்திரிகைகளுக்கான விசுவல் கம்யூனிகேஷன்ஸ் என்பது அதிகரிக்கும் முக்கியத்துவத்தைப் பெற்று வருவதை காண்கிறோம்.

பயன்படுவது யாருக்கு?
விளம்பர அதிகாரி, அனிமேட்டர், ஆர்ட் டீலர், ஆர்டிஸ்ட், டிஜிடல் ஆர்டிஸ்ட், கிராபிக் டிசைனர், இன்டீரியர் டிசைனர், வெப் ஆர்ட் டிசைனர், வெப்சைட் டிசைனர், ஆகியோர் தெரிந்தோ தெரியாமலோ விசுவல் கம்யூனிகேஷன்ஸ் அடிப்படை நுணுக்கங்களை நம்பியே இருக்கின்றனர்.

பாடத் திட்டம்
பொதுவாக இப் படிப்புக்கான பாடதிட்டத்தில் பின்வரும் அம்சங்கள் இருக்கின்றன. போட்டோகிராபிக்ஸ், பேசிக் டைப்போகிராபி, மல்டிமீடியா ஆதரிங், டெக்னிகல் டிராயிங், அட்வர்டைசிங் டிசைன், டெஸ்க்டாப் பப்ளிசிங், கம்யூனிகேஷன்ஸ் மற்றும் சோஷியல் பிஹேவியர் இன்டஸ்ட்ரியல் டிசைன் டைப்போ கிராபி, கிராபிக்ஸ் சிஸ்டம் மேனேஜ்மெண்ட், 3டி அனிமேஷன், ஆடியோ மற்றும் வீடியோ எடிட்டிங், இந்த படிப்பை எங்கு படிக்கலாம் என்பது ஒரு கேள்வி.

இன்று தமிழ்நாட்டில் சென்னை தவிர பிற நகரங்களிலும் இந்த படிப்பானது அதிகக் கல்லூரி களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனினும் சென்னை கல்லூரிகளே இதில் கோலோச்சுகின்றன. பிராக்டிகல் பயிற்சியை எந்த கல்லூரி தருகிறதோ அதுவே எதிர்கால வாய்ப்புகளை சிறப்பாக உருவாக்கித்தர முடியும்.

தமிழ்நாட்டு விசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பில் அச்சு இதழியல், ஒலிபரப்பு தகவல் சாதனம் ,காட்சித் தகவல் சாதனம், இன்டர்நெட் இதழ்கள்
ஆகிய பிரிவுகள் உள்ளன. இவற்றில் ஒன்றை சிறப்புப் படிப்பாகப் படித்து திறன் பெறுவது முக்கியம். பிற பிரிவுகளையும் அடிப்படையில் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.

கம்ப்யூட்டர் டிசைனிங் என்பது இன்று எந்தத் துறைக்குமான அடிப்படை என்பதால் போட்டோசாப், இல்லஸ்டிரேட்டர், 3டி ஸ்டுடியோ, பிரீமியர், கேரக்டர் ஸ்டுடியோ, கோரல்டிரா, மார்பிங், சவுண்ட் போர்ஜ், மேக்ரோ மீடியா பிளாஸ், டைரக்டர் ஆகிய சாப்ட்வேர்களை அறிந்து கொண்டு சிறப்புத்திறன் பெற வேண்டியதும் அவசியம்.

அடிப்படையில் கலை ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் பெற்றிருப்போருக்கு இத்துறை சிறப்பான படிப்பானதாக மாறி சிறந்த வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவது உண்மை தான். எனினும் பொதுவாக இப்படிப்புக்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவே அறியப்படுகிறது. சுய நிதிப் படிப்பாகவே இது பொதுவாக தரப்படுகிறது. நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது.

கீழ்காணும் கல்வி நிலையங்கள் உளிட்ட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது .

Asan Memorial College of Arts & Science                               Gowrivakkam
NungambakkamLoyola College
TiruverkaduSindhi College
RoyapettahThe New College

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் மாணவர் கூட்டம்


கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு பிடித்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில், பி.காம்., படிப்பையடுத்து, பி.எஸ்சி., கணினி பொறியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட படிப்புகளிலும், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளிலும் சேர, மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பர்.

பி.காம்., படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரிகள், பி.காம்., படிப்பை, பல புதிய பெயர்களில் உருவாக்கி, சுயநிதி பாடப்பிரிவுகளாக வழங்குகின்றன.

உதாரணமாக, முன்பு, பி.காம்., (ஜெனரல்) படிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது, பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன், ஹானர்ஸ் என, பல பெயரில் சுயநிதி பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. இதனால், பி.காம்., படிப்பிற்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பாரதியார் பல்கலையில் மட்டும், 13 வகையான பி.காம்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளங்கலை அறிவியல் பாடப்பிரிவிலும், உயர் இயற்பியல், உயிர் வேதியியல், பகுப்பாய்வு வேதியியல், மருத்துவ உயிர் வேதியியல், கரிம வேதியியல், கொள்கை இயற்பியல் துறை என, அடிப்படை அறிவியல் படிப்புகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன.

வேலைவாய்ப்பை வழங்கும் படிப்புகள் எனக்கூறி, பல சுயநிதி பாடப்பிரிவுகளையும், புதிதாக பல கல்லூரிகள் துவங்குகின்றன. இதனால், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, மாநில கல்லூரியில், 7,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், அனைத்து விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன.

புது கல்லூரியில், 3,000 விண்ணப்பங்களில், 2,000 விண்ணப்பங்களும், வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரியில், 5,000 விண்ணப்பங்களில், 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன.

இதுகுறித்து மாநில கல்லூரி முதல்வர் சபாநாயகம் கூறுகையில், "மொத்தம், 7,000 விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில், 1,500 விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். ஒற்றை சாரள முறையிலான மாணவர் சேர்க்கை அனைத்து கல்லூரிகளிலும் நடந்து வருகிறது.

இதனால், மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் வெளியிடும் போது, எந்த துறைக்கு, மாணவர்கள் எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது தெரிய வரும்" என்றார்.

தமிழகத்தில் காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம்


காகித ஆலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது மொண்டிப்பட்டி ஊராட்சி. இது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊராட்சியில் ரூ.1,200 கோடி செலவில் 989 ஏக்கர் பரப்பளவில் அரசு காகித ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. முதற்கட்டமாக நில ஆர்ஜித பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகாரிகள் கையகப்படுத்தி வருவது விளை நிலங்கள் என்றும் இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறி விவசாய நிலப்பகுதியை தவிர்த்து வேறு இடத்தில் காகித ஆலையை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஆனால் அரசு உத்தரவிற்கு இணங்க நில ஆர்ஜி தம் நடப்பதாக கூறி விவ சாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடர்ந்தனர். இதனால் விவசாயி கள் விவசாய நில ஆர்ஜிதம் கண்டித்து போராட்டம் நடத்த விவசாய நில மீட்புக்குழுவை ஏற்படுத்தி போரா ட்டத்துக்கு தயாராகினர்.

முதற்கட்டமாக சென்னையில் முதல்வரின் தனிப்பிரிவு உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நில ஆர்ஜிதத் தை கைவிடக்கோரி நேரில் மனு அளித்தனர். பின்னர் தங் கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மணப்பாறை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். போராட்டத்தை கைவிடக்கோரி ஆர்டிஓ பஷீர், காகித ஆலை ஆணைய அதிகாரி சீனிவாசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு உள்ளிட்ட பயிர்களை ஏந்தியபடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் குருசாமி, ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராணி, முன்னாள் ஊராட்சித்தலைவர் பாப்பாத்தி, காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு மாவட்ட தலைவர் முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டப்படி தாலுகா அலுவலகத்தில் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போராட்டக்குழு பிரதிநிதிகள் சிலர் மட்டும் அலுவலகத்துக்குள் சென்று தாசில்தார் குளத்தூர் பாண்டியனிடம் மனு அளித்தனர்.

இன்று சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்


பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம்.

பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

"பல்லுயிர் மற்றும் தண்ணீர்" என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. மனிதன், பல்லுயிர் மற்றும் இயற்கை என அனைத்துக்கும் தண்ணீர் அவசியம். பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழும் எண்ணற்ற உயிரின வகைகளின் (பறவை, விலங்குகள், மரங்கள், தாவரங்கள்) தொகுப்பு, "பல்லுயிர் பரவல்" எனப்படுகிறது.

17ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பிறகு, பூமி பெரிய அழிவுகளை சந்தித்து வருகிறது. பல லட்சம் எக்டேர் பரப்பளவில் காடுகளும், நுண்ணியிரிகள் முதல் பெரிய உயிரினங்கள் வரையிலான வாழ்விட சூழல்களும் அழிக்கப்படுகின்றன. பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்றவற்றால் இயற்கை பாதிப்பிற்குள்ளாகிறது. இதன் காரணமாக, பல்லுயிரிகள் பாதிப்புக்குள்ளாகின்றன.


இந்தியாவில் இமயமலை, மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றில் பலவகையான மருத்துவ குணமிக்க தாவரங்கள், மரங்கள், உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்தியா நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. இதில் ஏரளாமான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

நாட்டில் பல வகையான காடுகளும் உள்ளன. இவற்றில் வாழும் பலவகையான உயிரினங்கள் அழிந்து வருகின்றன. எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்தால் தான், எதிர்கால உலகம் வாழத் தகுதியாக இருக்கும்.

செவ்வாய், 21 மே, 2013

மெட்டீரியல் சயின்ஸ் (MATERIAL SCIENCE ) படிப்பு


பொருட்களின் அமைப்பிற்கும், அதன் தன்மைக்கும் இடையிலான தொடர்பை படிக்கும் துறை பொருளறிவியல் (மெட்டீரியல் சயின்ஸ்). குறிப்பிட்ட பொருளை எப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கு உட்படுத்தினால் என்ன விளைவை பெறலாம் என்பதை இதில் பயிலலாம். இத்துறை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கான்பூர்
இக்கல்விநிறுவனத்தில் எம்.டெக்., மற்றும் பிஎச்.டி.,பிரிவுகளில் பொருளறிவியல் சார்ந்த படிப்புகளை படிக்கலாம். விவரங்களுக்கு www.iitk.ac.in

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை
இங்குள்ள உலோகவியல் மற்றும் பொருளறிவியல் துறை, பி.டெக்., இரட்டை(டூயல்) டிகிரி, எம்.டெக்., எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., பிரிவுகளின் கீழ், இத்துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. பயில விரும்புவோர் கேட் தேர்வில் கட்டாய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விவரங்களுக்கு www.iitm.ac.in

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காரக்பூர்
பொருளறிவியல் துறையில், ஆய்வுகளை கொண்டு வரும் நோக்கில், 1971ம் ஆண்டு இந்த படிப்பு இங்கு துவங்கப்பட்டது. எம்.டெக்.,பிரிவில் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் படிப்பு வழங்கப்படுகிறது. கேட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.iitkgp.ac.in

* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, துர்காபூர்
இங்கு பி.டெக்., மற்றும் எம்.டெக்.,கில் இந்த படிப்பு கற்றுத்தரப்படுகிறது. விவரங்களுக்கு www.nitdgp.ac.in

* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
இப்பல்கலையில் எம்.எஸ்சி., மெட்டீரியல் சயின்ஸ் உள்ளது. இதில் தெர்மோடைனமிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன், குவாண்டம் மெக்கானிக்ஸ், கிறிஸ்டலோகிராபி, செராமிக்ஸ் ஆகியவை குறித்து இந்த படிப்பில் முழுவதுமாக கற்றுத் தரப்படுகிறது. விவரங்களுக்கு www.annauniv.edu

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு
எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., பிரிவுகளில் மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங் உள்ளது. பொருளறிவியல்/உலோகவியல்/செராமிக்ஸ் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு mazerials.iisc.ernez.in

உப்பு கொள்முதலில் ம.பி., பிஜேபி அரசு ஊழல்


காங்., பொதுச் செயலர், திக்விஜய் சிங் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த அரசில், ஊழல் அதிகரித்து விட்டது. ம.பி., மாநில குடிமப் பொருள் வழங்கல் துறை சார்பில், கடந்தாண்டில், உப்பு கொள்முதல் செய்யப்பட்டது. 1 டன் உப்பு, 6,700 ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டது.

டெண்டர் விதிமுறைகளை மீறி, மிக அதிக விலைக்கு, இந்த கொள்முதல் நடந்துள்ளது. அருகில் உள்ள, குஜராத் மாநிலத்தில், இதே வகையான உப்பு, 1 டன், 3,300க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில், 5,670 ரூபாய்க்கும், ஆந்திராவில், 5,900 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ம.பி.,யில் மட்டும், அதிக விலை கொடுத்து, கொள்முதல் செய்தது ஏன்? இதில், ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்த வேண்டும். முதல்வர், சிவ்ராஜ்சிங் சவுகானுக்கும், இதை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன்.இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார்.

அப்பாவி பெண்ணை, பயங்கரவாதி எனக் கூறி, சுட்டுக் கொன்றது குஜராத் மோடி அரசு : சரத் பவார்

அப்பாவி பெண்ணை, பயங்கரவாதி எனக் கூறி, சுட்டுக் கொன்றது குஜராத் அரசு. அந்தத் தவறை, தன் போலீஸ் துறையின் திறமையாக மெச்சிக் கொண்டவர், முதல்வர், நரேந்திர மோடி,'' என, மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான, சரத் பவார் கூறினார்.


 தானே நகரின், மும்பாரா என்ற இடத்தில், அமைச்சர் சரத் பவார் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.

கூட்டத்தில், சரத் பவார் கூறியதாவது:மும்பாரா பகுதி, ஒரு காலத்தில், அனைத்து சட்ட விரோத செயல்களுக்கும் தாயகமாக விளங்கியது. இப்போது, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. மாநிலத்தை ஆளும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. அடுத்த முறையும், இந்தப் பகுதி மக்கள், எங்கள் கூட்டணி வேட்பாளர்களையே ஆதரிப்பர்.

குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தன் போலீஸ் துறையை மெச்சிக் கொள்பவர். 2004ம் ஆண்டு, அப்பாவி முஸ்லிம் பெண் இஷ்ரத் ஜஹானையும், அவருடன் இருந்த இருவரையும், பயங்கரவாதிகள் என கருதி, குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்தவர்கள் என, கூறிய மோடி, மும்பை போலீஸ் செய்ய முடியாத காரியத்தை, குஜராத் போலீசார் செய்ததாக, பெருமை அடித்துக் கொண்டார். ஆனால், உண்மையில், இஷ்ரத் ஜஹான் அப்பாவி பெண்; அவருக்கும், பயங்கரவாதத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை.இவ்வாறு, சரத் பவார் பேசினார்.