"சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,'' என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.
புதிய சட்டம்:
கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறியதாவது, சவுதி அரேபிய அரசு, புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, அங்குள்ள நிறுவனங்கள், வேலை வாய்ப்புகளில், 10 சதவீதத்தை, அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்க வேண்டும்.
அபாயம்: சவுதி அரேபிய அரசின், இந்த புதிய சட்டத்தால், அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழக்கும் இந்திய தொழிலாளர்கள், இந்தியா திரும்புவதில், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், சவுதி அரேபியாவில், அதிக அளவில் பணிபுரிகின்றனர்.
இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சர், வயலார் ரவியிடம், ஆலோசித்தோம். இதையடுத்து, வேலை இழக்கும் தொழிலாளர்கள், கேரளா திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் என, அவர் தெரிவித்து உள்ளார்.
உதவி மையம்: இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக