தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அஞ்சல்வழியில் பி.எட். படிப்பை வழங்கி வருகிறது. மொத்தம் உள்ள ஆயிரம் இடங்களில் 500 இடங்கள் தமிழ்வழிக்கும், எஞ்சிய 500 இடங்கள் ஆங்கிலவழிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை மாதம் 26–ந்தேதி வரை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட கல்வியியல் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.500. விண்ணப்பங்களை தபால் மூலம் பெற விரும்புவோர் ‘‘தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை–15 என்ற பெயரில் ரூ.550–க்கான டிடி. எடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு கோரிக்கை கடிதத்துடன் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 26–ந்தேதி ஆகும் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும். வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044–24306658, 24306657 ஆகிய டெலிபோன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக