Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

மனிதம் எங்கே ?


உத்தர பிரதேசம் மாநிலம், ஆக்ராவையும், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரையும் இணைக்கும், தேசிய நெடுஞ்சாலையில், சமீபத்தில், 2 கிலோ மீட்டர் நீளமுள்ள, "காட் கி குனி' என்ற சுரங்கப்பாதை போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. இதில், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

இந்நிலையில், நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஒருவர், தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் இந்தச் சுரங்க சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், பைக்கில் சென்றவரின் மனைவியும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.படுகாயத்தடன் தப்பிய, அந்த நபர், தன் மகனை கையில் பிடித்தபடி, உயிருக்கு போராடியவாறு, அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி, உதவி செய்யும்படி கெஞ்சினார்.

ஆனாலும், அவர் மன்றாடுவதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், வாகனங்கள், அசுர வேகத்தில் பறந்து சென்றன. இதனால், அந்த நபர், தலையில் கைவைத்தபடி, சாலையிலேயே அமர்ந்து பதறியது பரிதாபமாக இருந்தது.பின் எப்படியோ போலீசாருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் வந்து இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக