பிளான்டேஷன் துறையை, மேலாண்மைக் கல்வி மற்றும் பயிற்சியின் மூலமாக, நவீனப்படுத்தி, மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான், பிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம்.
ஒரு தீவிரமான கல்வி நிறுவன - தொழிற்கூட ஒத்துழைப்பு மாதிரி அடிப்படையிலான, ஆசிய அளவில், ஒரு பிரத்யேக மேலாண்மை கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது.
கடந்த 1993ம் ஆண்டு ஒரு சுயாட்சி கல்வி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது.
நிறுவியதன் நோக்கம்
இக்கல்வி நிறுவனம், கீழ்கண்ட 5 நோக்கங்களுக்காக நிறுவப்பட்டது.
* திட்டமிட்டு செயல்படக்கூடிய பொதுநல மன்றம்
* சிறந்த தலைவர்களை உருவாக்கல்
* சிறந்த மேலாளர்களின் தொடர்ச்சியான மேம்பாடு
* செயல்பாட்டு அடிப்படையிலான ஆராய்ச்சி
* அறிவார்ந்த சுயசார்பு மற்றும் அறிவுசார் முதலீட்டை அதிகரித்தல்.
இதன் செயல்பாடுகள்
* எதிர்கால அறிவுத் தேவைகளை நிறைவுசெய்ய, வேளாண்-வணிகம் மற்றும் பிளான்டேஷன் மேலாண்மை என்ற பெயரில், முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது.
* பிளான்டேஷன் மற்றும் வேளாண் வணிகம் தொடர்பான வொர்க்ஷாப்கள் மற்றும் செமினார்களை நடத்துகிறது.
* தொழில்ரீதியிலான முதலாளிகள், மேலாளர்கள் மற்றும் வாரிய அலுவலர்கள் ஆகியோர் பயனடையும் பொருட்டு, குறுகியகால எக்ஸிகியூடிவ் படிப்புகளை வழங்குகிறது.
* செயல் அடிப்படையிலான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
நிபுணர்களை பரிமாறிக்கொள்ளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, போஸ்ட் டாக்டோரல் ஆராய்ச்சிகளுக்கும் உதவி புரிகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள்
140க்கும் மேற்பட்ட ஜர்னல்கள், 8,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளிட்ட இன்னபிற சிறப்பான வசதிகளைக் கொண்ட நூலகமும், 30க்கும் மேற்பட்ட அதிவேக ப்ராசஸர்கள் உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்ட கணினி ஆய்வகமும், பல்வேறான சிறப்பு உபகரணங்களைக் கொண்ட ஆய்வகமும் இக்கல்வி நிறுவனத்தில் உள்ளன.
ஆராய்ச்சி நடவடிக்கைகள்
கொள்கை, மேலாண்மை மற்றும் இயங்குதல் விஷயங்களில், ஆழமான ஆராய்ச்சி திட்டத்தை இக்கல்வி நிறுவனம் கொண்டுள்ளது. தொழில்துறை, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆராய்ச்சித் திட்டங்களை இக்கல்வி நிறுவனம் மேற்கொள்கிறது. இக்கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி பேப்பர்கள், கீழ்காணும் பிரிவுகளில் விரிந்துள்ளன. அவை,
Policy and managerial issues related to specific commodity.
Functional area specific (Marketing, Finance, HRD, Strategic Management,
Operations Management, Economics, Extension Management, etc)
Management Thought, Management Theory and Social Discourse.
மேலும், இந்நிறுவனத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகளின் பரந்த நிலைகள் மற்றும் கருத்தாக்கங்களை பின்வரும் தலைப்புகளின் மூலம் அறியலாம். அவை,
Global Competitiveness of the Plantation Industry
Productivity & Quality
Market Structure, Market Intelligence and Market Information
Brand Building and New Product Innovation
E-Commerce, National Commodity Information Grid
Improving Competitiveness of Micro Enterprises
Sustainable Plantation Management
Estate Performance Agreement Systems
Commodity Futures
Extension Management and Grassroots Institution building
Agri-business Development
Social Development Contribution of Indian Plantation Industry
HRD and Work Culture Development
Social Concerns of Plantation Industry: Absenteeism, Alcoholism, etc.
Knowledge Management in Plantation Industry
Risk Management
Cost Competitiveness
இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகளின் விபரங்கள்
PGP - ABPM எனப்படும், முதுநிலை டிப்ளமோ படிப்பானது, பிளான்டேஷன் மற்றும் வேளாண் வணிகத் துறையில் நுழைபவர்களுக்கான ஒரு மேலாண்மைப் படிப்பாக வழங்கப்படுகிறது. மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நவீன ஐடியாக்கள் மற்றும் நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவதே இப்படிப்பின் நோக்கம். இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களது தொழில்துறையில் சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
காலஅளவு - இப்படிப்பின் காலஅளவு 24 மாதங்கள். இது ரெசிடென்ஷியல் படிப்பாகும். இப்படிப்பு AICTE அங்கீகாரம் பெற்றது மற்றும் எம்பிஏ படிப்பிற்கு நிகரானது.
மாணவர் சேர்க்கை நடைமுறைகள்
இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, பொது சேர்க்கை முறை மற்றும் Sponsored சேர்க்கை முறை ஆகிய 2 முறைகளில் நடத்தப்படுகிறது. இளநிலைப் பட்டப் படிப்பில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள்(SC/ST 45%) பெற வேண்டும். NRI/PIO மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
CAT/MAT/ATMA/CMAT ஆகிய தேர்வுகளில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்களே விண்ணப்பிக்கலாம். உங்களின் கல்வி செயல்பாடுகள், தேர்வு மதிப்பெண்கள், எழுத்துத் திறன், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இடஒதுக்கீட்டு முறை உண்டு. மேலும், உதவித்தொகை திட்டங்களும் உண்டு.
கல்விக் கட்டணம்
2 ஆண்டுகளுக்கான கல்வி நிறுவனக் கட்டணம் மட்டும் ரூ.3.5 லட்சங்கள். இதை 2 தவணைகளாக கட்டலாம். வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் NRI/PIO Sponsored மாணவர்களுக்கான கட்டணம் 10,500 அமெரிக்க டாலர்கள். இக்கட்டணங்களில், உணவு, இருப்பிடம், மின்சாரம், கணினி, புத்தகங்கள், கள ஆய்வு மற்றும் இதர செலவினங்கள் அடங்காது.
விரிவான விபரங்களுக்கு: http://www.iipmb.edu.in/index.php?option=com_content&view=article&id=62&Itemid=173
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக