"தொழிற்சாலையில் பணிபுரிவதற்குரிய தகுதியான மாணவர்களை கல்லூரிகள் உருவாக்கவேண்டும். வேலை தேடும் மாணவர்கள் தகவல் தொடர்பு குறித்த அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம்,'' என்று பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசினார்.
பாரதிதாசன் பல்கலை வணிகவியல், நிதித்துறையின் தொழிற்சாலை ஒருங்கிணைப்பு மையம், இந்திராகாந்தி கல்லூரி வேலைவாய்ப்பு சார்பில், 2 நாள் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.ஆடை வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட, 32 நிறுவனங்கள் பங்கேற்றன. மாநிலம் முழுவதும் இருந்து, பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த, 6,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இவர்களில், 1,053 மாணவர் பணி நியமன ஆணைகளை பெற்றனர்.விழாவில், துணைவேந்தர் மீனா பேசியதாவது:பாரதிதாசன் பல்கலை இணைவுப்பெற்ற, எட்டு மாவட்ட கல்லூரி மாணவர்களுடன் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த, 7,000 மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர். தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான திறன் வாய்ந்த பணியாளர்களை, இதுபோன்ற முகாம்களில் தேர்வு செய்வது தற்காலத்தின் சிறப்பு அம்சம்.
தொழிற்சாலையில் பணிபுரிவதற்குரிய தகுதியான மாணவர்களை கல்லூரிகள் உருவாக்கவேண்டும். வேலை தேடும் மாணவர்கள் தகவல் தொடர்பு குறித்த அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம். வேலைக்கு முயற்சிக்கும் கடைசி நேரத்தில் இதற்கென மெனக்கெடாமல், கல்லூரியின் முதலாம் ஆண்டிலேயே பயிற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், கல்லூரிச் செயலாளர் குஞ்சிதபாதம், பல்கலை வணிகவியல், நிதித்துறை செல்வம், கல்லூரி முதல்வர் வித்யாலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக