Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 6 பிப்ரவரி, 2013

ஆசிட் விற்பனையை ஏன் நிறுத்தக்கூடாது? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி


கடந்த 2006ம் ஆண்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஆசிட் வீச்சை வழக்குகளை விசாரிக்க இந்திய குற்றவியல் சட்டத்தில் தனிப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே ஏற்கவேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இம்மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் ஆசிட் வீச்சு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்றும், ஆசிட் வீச்சில் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரிக்கப்படவேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும், மத்திய உள்துறை செயலர் தலைமையில் அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும், அதில் ஆசிட் விற்பனையை தடை செய்தல், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு, சிகிச்சை மற்றும் நிவாரணம் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விசாரணையின் போது, ஆசிட் வீச்சு தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டத்தின் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இந்த குற்றம் செக்ஷன் 326 (ஏ) மற்றும் (பி) ஆகியவற்றின் கீழ் வர வழிவகை செய்யப்படும் என மத்திய அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக