இந்தியாவில் இன்ஜியரிங் படிப்புக்கான மவுசு இன்னமும் உச்சத்தில் இருக்கிறது. இதன் விளைவாக இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
அக்கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்புகிறதா என்று கேட்டால் கேள்விக்குறியே. ஏனெனில், எந்தளவுக்கு கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ, அதே அளவுக்கு காலியிடங்களும் அதிகரிக்கின்றன. இந்தாண்டு தேசிய அளவில், புதிதாக 180 இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு, ஏ.ஐ.சி.டி.இ., இடம் அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.
அதே நேரத்தில் 40 கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கோரியுள்ளன. இதில் 30 கல்லுõரிகள் தமிழகத்தை சேர்ந்தவை. 2012 - 13 கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள இன்ஜினி யரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை 525 ஆக உள்ளது. இவற்றில், கடந்தாண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.
இதில் 50 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். 48 விதமான இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் வெறும் 10 மாணவர்களுக்கு கீழே தான் சேர்ந்துள்ளனர். இது, புதிதாக கல்லூரி தொடங்க நினைப்பவர்களை எந்தளவுக்கும் யோசிக்க வைப்பதில்லை. கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் குறைவு காரணமாகவும், காலி இடங்கள் அதிகரிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக