Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 14 டிசம்பர், 2012

திருச்சியில் அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் போராட்டம்


காவிரியில் தண்ணீர் இன்றி சம்பா பயிர் கருகி வருவதால்  விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன்களை தள்ளுபடி     செய்யவேண்டும், விவசாயிகள் வாழ வழிவகை செய்யவேண்டும், நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு அரசு உரிய விலை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட பாரதீய கிசான்சங்கம் சார்பில் இன்று, அரைநிர்வாணத்துடன் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தது.

ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.  அதையும் மீறி திட்டமிட்டபடி ரெயில் மறியல் நடைபெறும் என பாரதீய கிசான் சங்கம் அறிவித்தது. அதன்படி இன்று காலை மாநில   துணைத்தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டவிவசாயிகள் திருச்சி ஜங்ஷன்ரெயில் நிலையத்திற்கு சட்டையின்றி திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியிருந்தனர். அத்துடன் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.

ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸ் உதவி கமிஷனர்கள் காந்தி, சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் சிகாமணி, நிக்சன்  உள்ளிட்ட போலீசார் மறித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்ய  முயன்றனர். அப்போது போலீசாரிடம் ரெயிலை மறிக்க தங்களுக்கு அனுமதி  வழங்கவேண்டும் என்று கேட்டனர். அதற்கு போலீசார் மறுத்ததால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு திடீரென ரெயில் நிலையம் முன்புள்ள ரோட்டில் படுத்தார். வெயில் அதிகமாக இருந்ததால் கொதிக்கும் தரையில் படுத்த அவரை எழுந்திருக்குமாறு போலீசார் கேட்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே விவசாயிகள் சிலர் அங்கிருந்து நழுவி ரெயில்   நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மடக்கினர். அந்த சமயம் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு உருவானது. இதைத்தொடர்ந்து போலீசார்  அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டஅய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை கைது செய்து குண்டு கட்டாக வேனில் ஏற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக