நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வெறும் கல்வி கடைகளாகவே உள்ளதாக குற்றம்சாட்டி உள்ள மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், மாணவர்கள் இந்தியாவை முன்னேற்ற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.மொகாலியில் இந்திய தொழில் பள்ளியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார். பல்கலைகழகங்களின் தரமும், உள்கட்டுமான வசதிகளும், பழமை பேசும் பாட திட்டங்களைக் கொண்டதாகவும் இருப்பதாக சிதம்பரம் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் குறித்து சிதம்பரம் விமர்சித்துள்ளது கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
சிதம்பரம் பேச்சு:
பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தரம் குறைவான உள்கட்டமைக்கள், மோசமான அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் போதிய பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் ஆகியவற்றை கொண்டதாக உள்ளது என சிதம்பரம் தெரிவித்து உள்ளார். பஞ்சாப்பில் 8 பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 18 பல்கலைக்கழகங்களுக்கு பதிலாக 8 பல்கலைக்கழகங்களே உள்ளன எனவும், வரும் காலங்களில் அவற்றின் கல்வி கட்டமைப்புக்களை உயர்த்துவது அத்தியாவசியமாகிறது எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு வேண்டுகோள்:
மாணவர்கள் தங்களின் படிப்பபை முடித்த பிறகு வளர்ந்த நாடுகளில் பணிபுரிய ஆர்வம் கொள்ள வேண்டும்; அது போன்ற வெளிநாட்டு வாய்ப்புக்களை பெற மாணவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்; மாணவர்களின் தங்களின் வேலை திறனை வளர்த்து கொள்ள வேண்டும்; குடும்பத்தை முன்னேற்ற வேண்டும்; பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் ; அதற்கு பிறகு இந்தியாவிற்கு திரும்பி வந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் கல்வி தரம் குறித்த பேச்சை தொடர்ந்து விழாவில் பேசிய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பண்டல், நேஷனல் ஃபுட் பயோ-டெக்னாலஜி மற்றும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நேனோ டெக்னாலஜி ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் ஐஎஸ்பி வளாகத்தில் விரைவில் துவங்க உள்ளதாக அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக