இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் இ. அகமது மீண்டும் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தற்போது பதவி வகிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் தேசிய பொதுச் செயலாளராகவும், கேரள மாநில தொழில் துறை மந்திரி பி.என்.குஞ்சலிக்குட்டி தேசிய பொருளாராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த இக்பால் அகமது எம்.பி., கர்நாடகாவை சேர்ந்த தஸ்தகீர் ஆகா ஆகியோர் துணைத் தலைவர்களாவும், இ.டி.முகமது பஷீர் எம்.பி ,அப்துஸ்ஸமது சமதானி எம்.எல்.ஏ. (கேரளா), குர்ரம் அனிஸ் உமர் (டெல்லி), நயீம் அக்தர் (பீகார்), ஷகீன்ஷா ஜகாங்கிர் (மேற்கு வங்காளம்) ஆகியோர் புதிய செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஷமீம் சாதிக் (மகாராஷ்டிரா), மதீன் கான் (உ.பி.), சிராஜ் இப்ராகீம் சேட் (கர்நாடகம்), அப்துல் பாசித் (தமிழ்நாடு) சர்புதீன் அன்சாரி (ராஜஸ்தான்) ஆகியோர் உதவி செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி :மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக