Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 11 டிசம்பர், 2012

தாகம் தணிக்க தண்ணீர் இல்லா தென்காசி ரயில்வே ஸ்டேஷனின் பரிதாபம்!


"தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் தாகம் தீர்க்க குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி ரயில்வே ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

 மதுரை அகல ரயில் பாதையும், நெல்லை அகல ரயில் பாதையும் சந்திக்கும் இடமாக தென்காசி விளங்குகிறது. தென்காசி ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். தென்காசி வழியே இயக்கப்படும் பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மதுரை பாசஞ்சர் ரயில் மற்றும் நெல்லை பாசஞ்சர் ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் தென்காசி வழியே இயக்கப்படும் ரயில்கள் மூலம் ரயில்வே துறைக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.

ரயில்வே பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமை ரயில்வே துறைக்கு உள்ளது. ஆனால் தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படாமல் இருக்கிறது. குறிப்பாக பிளாட்பாம்களில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் சமீபத்தில் இந்த குடிநீர் குழாய்களில் பல அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதர குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் எப்போது வரும்...என யாருக்கும் தெரியவில்லை. இந்த குழாய்களை திறந்தால் வெறும் காற்றுதான் வருகிறது. ரயில்வே ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை பார்த்து ஏமாற்றம் அடையும் பயணிகள் இக்குழாயில் தண்ணீர் வரும்... ஆனால் வராது...என கூறி தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு செல்கின்றனர். தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் போதுமான குடிநீர் வசதி செய்து கொடுக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக