கடலாடி அருகே குண்டும், குழியுமாகி ரோடு குறுகிவிட்டதால், வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன.
கூடுதல் வாடகை கொடுத்தும் வரமறுப்பதால், ஏனாதி ஊராட்சி மக்கள் , வயல் வரப்புகளில் நடந்து செல்லும் அவலம், 62 ஆண்டுகளாக தொடர்கிறது.
ஏனாதி ஊராட்சி பொந்தம்புளி பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு 2 கி.மீ., தொலைவுள்ள முதுகுளத்தூருக்கு சித்திரங்குடி வழியாக ரோடு வசதி சரியில்லை.
குண்டும், குழியுமாக உள்ள ரோட்டில் செல்ல கூடுதல் வாடகை கொடுத்தாலும், வாகனங்கள் வருவதில்லை.
இதனால் கோடையில் வயல் வழியாக நடந்து செல்கின்றனர். மழை காலங்களில் வரப்பு மீது நடந்து செல்ல, முதியோர், கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். வாகனங்களில் செல்ல, சித்திரங்குடி ரோடு வழியாக 10 கி.மீ., சுற்றி வரவேண்டும்.
சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளாகியும், "நடராஜா சர்வீஸ்' தான். பொந்தம்புளி-சித்திரங்குடிக்கு, தார் ரோடு அமைத்து, பஸ் விட வேண்டும் என வலியுறுத்தியும் பலனில்லை.
பொந்தம்புளி ஞானதிரவியம் கூறுகையில், ""தார் ரோடு கிடையாது. மெட்டல் ரோடும் பழுதடைந்து கரடு முரடாக உள்ளது. பஸ்சில் செல்ல வயல் வழியாக முதுகுளத்தூர் விலக்கு ரோட்டிற்கு, 5 கி.மீ., நடந்து செல்ல வேண்டிருக்கிறது,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக