Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

செலவிடப்படாத ரூ.2.50 கோடி கல்வி நிதி.......

மதுரை மாநகராட்சியில், பல பள்ளிகளில் கழிப்பறை வசதி, புதிய கட்டட வசதிகள் தேவையாக இருந்தும், 2 ஆண்டுகளாக ரூ.2.50 கோடி கல்வி நிதி செலவிடப்படாமல் பயனின்றி கிடக்கிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் 66 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், மாணவர்களுக்கு எண்ணிக்கை ஏற்ப கட்டட வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மாணவர்கள் அறிவை வளர்க்கும் நூலகங்கள் இல்லாமல் உள்ளன. ஆனால், இதுபோன்ற வசதிகளை மேற்கொள்வதற்காக மாநகராட்சி கல்வி நிதி ரூ.2.50 கோடி, 2 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கிடப்பில் உள்ளன. இந்நிதியை கேட்டுபெற ஆளில்லை.

மாநகராட்சி கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சியில் பல்வேறு திட்ட நிதி, பொது நிதி மூலம் பல வேலைகள் நடக்கின்றன. சிறப்பு திட்டம் தீட்டி, நிதியை உடனடியாக பயன்படுத்துகின்றனர். பெரிய தொகையில் "சிவில் வொர்க்' எடுத்து செய்தால் "கமிஷன்' அதிகம் பார்க்கலாம். கல்வி நிதியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஒரு பள்ளிக்கு சிறிய அளவில் மட்டுமே நிதி ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதனால், பெரிய தொகைக்கு ஒப்பந்தம் எடுக்க முடியாது. சிறிய தொகையில் வேலையை எடுத்து செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை. இதனால்தான், ரூ.2.50 கோடி கல்வி நிதி இரு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. பெரிய வேலையை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு, இந்நிதியில் இருந்து ஒரு வேலையை ஒதுக்கி, பல பள்ளிகளுக்கு அடிப்படை வசதி கிடைக்க செய்யவேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக