மத்திய டெல்லியில் சீக்கியர்களின் கோவிலான குருத்வாராவில் இன்று சிரோமணி குருத்வாரா பிர்பந்தக் கமிட்டி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சிராமணி அகாலி தளம்(டெல்லி), சர்னா குழுவினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது.
தங்களிடம் உள்ள கத்தியால் ஒருவரையொருவர் வெட்டினர். இதில் சிரோமணி அகாலி தளம் (டெல்லி) தலைவர் மஞ்சித்சிங் உள்ளிட்ட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அனைவரும் ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலின்போது துப்பாக்கியை பயன்படுத்தியதாக செய்தி பரவியது. இதனை மறுத்துள்ள போலீசார், கத்தியாலும், கற்களாலும் சீக்கியர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக