பெண்கள் இந்திரா காந்தியைப் போல எளிமையாக தோற்றமளித்தால் அழகாக காட்சியளிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா கூறியுள்ளார்.
ரே பரேலில் உள்ள தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசிய சோனியா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தோற்றத்தில் எளிமையும், பேஷன் என்பதன் மீதான பார்வையும் அவரை உலக அளவில் புகழ்பெற வைத்தது.
தற்போது இந்திய பெண்களின் நாகரீகம் மாறுபட்டு வருகிறது. அதிக வேலைப்பாடு செய்யப்பட்ட, அலங்கரம் செய்யப்பட்ட ஆடைகளை பெண்கள் அணிகிறார்கள். ஒரே ஒரு ஆடையில், சரிகைகள், மணிகள், வேலைப்பாடுகள், கற்கள் பதித்து அணிகின்றனர். இவ்வளவு அலங்காரம் செய்து ஒரு ஆடையை அணிவது பெண்களுக்கு அதனை அணிய ஏற்றதாக இருக்க முடியாத அளவுக்கு சிரமத்தை தருகிறது. நாகரீகம் என்பது அதீத அலங்காரத்தில் இல்லை.
இந்தியாவின் பிரதமராகவும், ரே பரேலி தொகுதி எம்.பியாகவும் இருந்த இந்திரா காந்தி, தனது எளிமையான தோற்றத்தின் மூலமே நாகரீகமாகத் தோன்றினார். ஆடைகளில் அலங்காரத்தை அதிகரிக்கலாம். ஆனால், அது நாகரீகத்தை பிரதிபலிக்காது என்று பேசினார்.
இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஒரு பாரம்பரிய ஆடைகள் உள்ளன. அவை, அவர்களது வாழ்விடங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதனை எப்போதும் நாம் மறக்கக் கூடாது என்று குறிப்பிட்டார் சோனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக