அல்ஹம்துலில்லாஹ் ! கடந்த ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்தோம் . பொய் பேசாமல் ,புறம் பேசாமல் ,கோள் சொல்லாமல் ,பிறரை துன்புறுத்தாமல், பிறரை திட்டாமல் ,பித்தலாடம் செய்யாமல் ,தன்னிடம் பணம் உள்ளது என்று அகந்தையை காட்டாமல் ,சினிமா பார்க்காமல் ,இறைவன் விலக்கியதை விலக்கி அதனோடு பகல் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருந்திருந்தால் அது உண்மையான நோன்பாகும் .அவ்வாறு கடந்த ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்ததன் காரணத்தினால் ,கொண்டாடப்படுவது ஈகைத்திருநாள் !
அவ்வாறு கொண்டாடும் நாளில் ,அல்லாவை புகழ்ந்த வண்ணம் இருக்க வேண்டும் .அல்லாஹு அக்பர் ! அல்லாஹு அக்பர் ! என்று தக்பீர் முழங்க வேண்டும் .
காலையில் குளித்து ,புத்தாடை அணிந்து திடல்களை நோக்கி தொழுகைக்கு ஒவ்வொரு முஸ்லிமும் செல்லவேண்டும் .அதற்கு முன்பாக பித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் கொடுக்கவேண்டும் .பெருநாள் அன்று ,எந்த ஒரு மனிதனும் உண்ண உணவின்றி ,உடுத்த உடை இன்றி இருக்கக் கூடாது ,என்ற நோக்கில் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் செய்யச்சொன்ன கடமை நோன்பு பெருநாள் தர்மம் ஆகும்
.நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி,"இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்"என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:இப்னு உமர்(ரலி); நூல்கள்:பைஹகீ,தாரகுத்னீ
பின்பு திடல் சென்று தொழுது விட்டு ,சென்ற வழிக்கு மாறாக ,மாற்று வழியில் வீடு வந்தடைய வேண்டும் என்று பெருமானார் கூறினார்கள் .
பெருநாள் அன்று ,குழந்தைகள் கூடி ,பாடுவதையும் ,விளையாடுவதையும் அனுமதிக்க வேண்டும் என்று பெருமானார் கூறி யுள்ளார்கள் .
ஆயிஷா(ரலி) அறிவித்தார், புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள். ஆதாரம் .ஸஹீஹுல் புகாரி
வயது வந்தவர்களும் பெருநாளை கொண்டாடும் பொருட்டு வீர விளையாட்டுகள் விளையாட அனுமதி உண்டு .
பெருமானார் காட்டிய வழியில் நாம் ஈகைத்திருநாளை கொண்டாடுவோம்! ஈத் முபாரக் !
ஈத் முபாரக் !
பதிலளிநீக்கு