சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பல என்ஜினீயரிங் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டதால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் எனஜினீயரி்ங் கல்லூரிகளில் 30 ஆயிரம் இடங்கள் அதிகமாக இருந்தன. தமிழ்நாட்டில் 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள மொத்த இடங்கள் 1,24,868. இன்று தேர்வு செய்யப்படுவர்கள் தவிர்த்து 55 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது.
இதுவரை சேர்ந்தவர்களில் 60 சதவீதம் பேர் ஆண்கள். 40 சதவீதம் பேர் பெண்கள். 75 ஆயிரம் பேர் முதல் பட்டதாரிகள். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 15 ஆயிரம் மாணவ- மாணவிகள் தற்போது அதிகமாக என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு மெக்கானிக்கல் பாடத்தையே அதிக அளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதை தேர்ந்தெடுத்தவர்கள் 25 ஆயிரம் பேர். எலக்ட்ரிக்கல்& எக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடத்தை 24 ஆயிரம் பேரும், கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 14 ஆயிரம் பேரும் தேர்வு செய்திருக்கிறார்கள்.
சிவில் பாடத்தில் 13 ஆயிரம் பேரும், 'டிரிபிள் இ' பாடத்தில் 12 ஆயிரம் பேரும் சேர்ந்துள்ளனர். நாளை மற்றும் நளை மறுநாள் தொழில் பிரிவு மாணவர்களுக்கும், 21-ந்தேதி பிளஸ் 2 மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது. 25-ந்தேதி முதல் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக