Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 14 ஜூலை, 2012

கண்ணியத்தலைவரும் கர்மவீரரும்


காமராஜர் முதல் அமைச்சராக பதவி ஏற்றபோது, அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் விரும்பி இருந்தால், மேல் சபை உறுப்பினராக ஆகி இருக்கலாம். அல்லது காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய ஒரு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.யை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, அங்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு சுலபமாக வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக ஆகி இருக்கலாம்.

இதையெல்லாம் காமராஜர் விரும்பவில்லை. ஏற்கனவே காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். குடியாத்தம் தொகுதி, "கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டை" என்று கருதப்பட்ட தொகுதியாகும். அங்கு காமராஜர் போட்டியிட்டது, அனைவருக்கும் வியப்பளித்தது. காமராஜரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கே.கோதண்டராமன் போட்டியிட்டார்.

(அப்போது கம்யூனிஸ்டு கட்சி பிளவு படாமல் ஒரே கட்சியாக இருந்தது.)   தேர்தலில் காமராஜரை ஆதரித்து ஈ.வெ.ரா.பெரியார் பிரசாரம் செய்தார். "காமராஜர் பச்சைத் தமிழர். அவர் முதல் அமைச்சராக இருந்தால்தான் தமிழ்நாடு முன்னேறும்" என்று பெரியார் கூறினார். ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ரத்து செய்ததற்காக காமராஜருக்கு ஆதரவு தெரிவித்த பேரறிஞர் அண்ணா, "குலக்கொழுந்தே! குணாளா!" என்று பாராட்டி எழுதினார்.

       ஆனால் ,காமராஜர் ஒரு முக்கியத்தலைவரின் ஆதரவு கிடைத்தாலே நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கை வைத்துக்கொண்டு ,அந்த முக்கியத்தலைவரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார் .அந்தத் தலைவர் கூறினார் ,நானும் என் சமுதாயமும் குடியாத்தம் இடைத்தேர்தலில் உங்களை ஆதரிக்கிறோம் .அந்த தலைவரின் வார்த்தைகளை கேட்டவுடன் ,வெற்றி பெற்ற சந்தோசத்தை காமராஜர் அடைந்தார் ,வெற்றியும் பெற்றார்.அந்த முக்கியத்தலைவர் ,யார் தெரியுமா ? இந்திய சிறுபான்மை சமுதாய மக்களின் உண்மைக் குரலாக ,உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த குரலுக்கு சொந்தக்காரர் ,முஸ்லிம்களின் சமுதாயத் தந்தை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆவார்கள் . ஆனால் இந்த வரலாற்று நிகழ்வை இன்றைய காங்கிரஸ் காரர்கள் மட்டுமல்ல எல்லா ஊடகங்களும் மறைத்து விடுகின்றன .

கம்யூனிஸ்டு கட்சி நீங்கலாக, எல்லா கட்சிகளும் காமராஜரை ஆதரித்தன.   1954 ஆகஸ்டு மாதத்தில் (முதல் அமைச்சராக பதவி ஏற்ற 4 மாத காலத்தில்) நடைபெற்ற குடியாத்தம் இடைத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். அவருக்கு 64,344 ஓட்டுகளும், கம்யூனிஸ்டு வேட்பாளர் கோதண்டராமனுக்கு 26,132 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது 38,212 ஓட்டு வித்தியாசத்தில் காமராஜர் வென்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக