Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 14 ஜூலை, 2012

மரியாதையுடனும் ,அடக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன்........


ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்  துணை ஜனாதிபதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டுள்ளதை மிகுந்த மரியாதையுடனும் அடக்கத்துடனும் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஹமீது அன்சாரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
 
நாட்டின் உயரிய பதவிகளில்  ஒன்றான துணை ஜனாதிபதி பதவிக்காக என் மீது நம்பிக்கை வைத்து என்னை வேட்பாளராக அறிவித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எனக்கு அதரவளித்துள்ள கூட்டணி  கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பை அடக்கத்துடன் ஏற்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இவரது அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் அறிவிப்பு குறித்த செய்தியை பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பவன் குமார் பன்சால் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் முதலில் கொண்டுபோய் சேர்த்தார்.
 
இதற்கு முன்பு துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீது அன்சாரி சிறந்த முறையில் பண்பாளராகவும் மேன்மைக்குரியவராகவும் ராஜ்யசபாவை நடத்தினார். இதனால் அவரையே இரண்டாவது முறையாகவும் தேர்வு செய்தோம் என்று பன்சால் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக