ஆனந்த விகடன் கேள்விக்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில்
''பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?''
''பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?''
''என்னைப் பொறுத்தவரை அம்பேத்கரை
எப்படிப் பார்க்கிறேனோ, அப்படித்தான் பெரியாரையும் பார்க்கிறேன். பெரியார்
வாழ்ந்த காலத்தின் நிலவியல், அரசியல் போன்றவற்றைப் புரிந்துகொள்ளாமல்
எதுவும் பேசக் கூடாது. அப்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றை
உள்ளடக்கிய சென்னை மாகாணம் இருந்தது. தமிழ்நாடு அப்போது உருவாகவில்லை.
அந்தச் சமயத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கினார் பெரியார். திராவிடக்
கருத்தியலைப் பேசினார். அது சரிதான். அதன் பின்னரே 1956-ல் மொழிவழி
மாகாணங்கள் உருவாகி தமிழ்நாடு உருவானது. இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை
முன்னெடுப்பது சரியானதே. ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசவே,
அன்றைக்குப் பெரியார்தான் வித்திட்டார் என்பதை மறந்து, திராவிடத்தை
முற்றிலுமாகப் புறந்தள்ளுவது நன்றியுணர்வு அற்ற செயல். பெரியாரிடம்
கருத்து மாறுபட் டால் விமர்சனம் செய்யலாம். ஆனால், அவரையும் திராவிடக்
கருத்தியலின் பங்களிப் பையும் கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க
முடியாது. அப்படிக் கொச்சைப்படுத்துபவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் எத்தகை
யது? தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவத் தேசியத்தை, இந்திய தேசியத்தை,
இந்தி தேசியத்தை எதிர்ப்பதாக, சாதிகளை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வெறும்
மொழி உணர்வு, இன உணர்வு என்கிற அடிப்படையில் எழும் தமிழ்த் தேசியம்
சரியானது அல்ல. ஈழ மக்களை நான் ஆதரிக்கிறேன் என்றால், அங்கு வாழ்பவர்கள்
தமிழர்கள் என்பதால் அல்ல; அங்கே அவர்கள் சிங்கள ஒடுக்குமுறையால்
பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான். ஆனால், ஈழத்தை ஆதரிக்கிறவர்கள் அங்கே
வாழ்ப வர்கள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக் காக ஆதரிக்கிறார்கள். இங்கே
தமிழ்நாட்டில் பரமக்குடியில் உள்ள தலித் தமிழர்கள் கொல்லப்பட்டால் கேட்கத்
துணிச்சல் இல்லாதவர்கள், ஈழத்தில் நடந்தால் மட்டும் கூக்குரல் இடுவேன்
என்பது போலித்தன மானது!''
நன்றி : ஆனந்தவிகடன்
11-ஜூலை -2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக