ஊர் முழுவதும் முஸ்லிம் லீக் தலைவர்கள்வருகையை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது .இதனைகண்டு யார் வெறுப்பு கொள்வார்கள் என்றால் ,இந்து முன்னணியினர் தான் வெறுப்பு கொள்வார்கள் .ஆனால் , நாங்கள் உண்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் தமுமுக வினர், லால்பேட்டை நகரமே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்களை வரவேற்க தயாராகிறதே என்று பொருத்துக் கொள்ள முடியாமல் அராஜகத்தில் இறங்கியுள்ளனர் .
லால்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு தமுமுகவின் தலைவர் வருகிறார்.அங்கேதான் ,அவருக்கு வரவேற்பு கொடுக்கும் பொருட்டு கொடித்தோரணம் அமைக்க வேண்டும் .அதனை விட்டுவிட்டு ,
லால்பேட்டையில் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினர் வரவேற்பு தோரனங்களுக்கு இடையில்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் வரும் பாதைகளில் தமுமுக வினர் வீம்பிற்காக அந்த அமைப்பின் கொடியை கட்டி பிரச்சினையை ஏற்படுத்தி வருவதால் மிகவும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது . ஊர் மக்கள் தமுமுகவினரின் இந்த கீழ்த்தரமான நடவடிக்கையை கண்டு வெறுப்படைந்துள்ளனர்.
சமுதாய மக்களுக்கு சேவை செய்வதில் முந்திக்கொள்ளாமல் ,இட ஒதிக்கீட்டை கேட்பதில் முந்திக்கொள்ளாமல் மோடியின் சகோதரியுடன் சேர்ந்ததால் ,மோடி உணர்வை பெற்றுவிட்டார்களோ என்பது போல் தோன்றுகிறது .சமிபத்தில் ,தமுமுக ஜவாஹிருல்லா 'பள்ளிவாசல் டுடே ' என்ற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டில் மிகவும் திருப்தி கொள்கிறோம் என்று கூறியுள்ளார் .தமிழகத்தில் 1300 மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் நியமனத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லாததை மிகவும் திருப்தி கொள்வதாக கூறுவது , என்ன வென்று சொல்லுவது ?
செய்தி உதவி :லால்பேட்டை அன்வர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக