Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 23 ஜூன், 2012

கைவிடப்பட்டதா? கள்ளக்காதலில் பிறந்ததா? என்ன கொடுமை இது ?


வேளச்சேரி கோவளம் பாக்கம் எஸ்.கொளத்தூரில் மெயின் ரோட்டில் இன்று (23/06/2012) காலை துணியில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை வீசப்பட்டு கிடந்தது. குழந்தையின் அழு குரல் கேட்டு அந்த பக்கமாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து பார்த்த போது அது பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை என தெரிய வந்தது. சிவந்த நிறத்தில் குழந்தை அழகாக இருந்தது. இந்த குழந்தையின் தாய் யார்? இங்கு வீசி சென்றது ஏன்? என்பது தெரியவில்லை.


குழந்தையை போலீசார் தாம்பரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெண்ணாக பிறந்ததால் கைவிடப்பட்டதா? கள்ளக்காதலில் பிறந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக