Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 12 செப்டம்பர், 2013

35 சதவீதம் இளைஞர்கள் புகையிலைக்கு அடிமை

புகையிலை பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பான, சர்வதேச கருத்தரங்கம், டில்லியில் நேற்று நடைபெற்றது. உலக சுகாதார மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் பேசியதாவது: நம் நாட்டில், 27.6 கோடி பேர், புகையிலை பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். நம் இளைஞர்களில், 35 சதவீதம் பேர், புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட, குட்கா, ஜர்தா போன்ற புகையிலை பழக்கம் தான், அதிக அளவில் உள்ளது.
சிகரெட் பிடிக்கும் பழக்கம், 9 சதவீதம் பேரிடம் உள்ளது என்றால், குட்கா, ஜர்தா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோரின் சதவீதம், 35 வரை உள்ளது. மத்திய அரசு, குட்கா, ஜர்தா போன்றவற்றை, தடை செய்துள்ளது. இவ்வாறு, அமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசினார்.

மத்திய சுகாதாரத் துறை செயலர், டெய்சி ராஜு பேசும்போது, ""புகையிலையை, அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. புகையிலையை அதிக அளவில், உற்பத்தி செய்யும் நாடுகள் வரிசையிலும், மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது,'' என்றார்.

பொது இடத்தில் புகை பிடிப்பதற்கும், புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரங்களுக்கும், உள்ள தடையால், புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிகை குறைந்து உள்ளது. புகையிலை இல்லா சமுதாயம்அமைப்பதில், நாம் தீவிரமாக உள்ளோம். புகையிலை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பார்லிமென்ட்டில்ஒருங்கிணைந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக